மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா நாளை தொடக்கம்
( 06/07/2019 முதல் 16/07/2019 )
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா நாளை தொடங்கி ஜூலை 16 ந்தேதி வரை நடைபெறும் மற்ற இதர நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாக்களில் முக்கிய விழாவாக கருதப் படுவது ஆனி ஊஞ்சல் உற்சவ விழாவாகும். இவ் விழா நாளை 6–ந்தேதி தொடங்கி 16–ந்தேதி முடிய நடைபெறுகிறது.
இந்நாட்களில் சாயரட்சை பூஜைக்குபின் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேர்த்தியில் இருந்து புறப்பாடாகி சுவாமி சன்னதி, 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்கள். அங்கு ஊஞ்சல் கொண்ட பின் மாணிக்கவாசகர் அருளிய திருப்பொன்னூஞ்சல் ஓதப்படும்.
அதன்பிறகு தீபாரானை முடிந்து 2–ம் பிரகாரம் சுற்றி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடை பெறும்.
இதேபோல ஆனி மாத பவுர்ணமி தினமான 16–ந்தேதி உச்சிகால வேளையில் மூலஸ்தான சொக்கநாதருக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனியால் அபிசேகம் நடக்கிறது.
இதை தொடர்ந்து 4 சித்திரை வீதிகளில் வெள்ளிக்குதிரை வாகனத் தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறும். .நாளை ஜூலை 7–ந்தேதி முதல் ஆனி உத்திரம் தொடங்குகிறது. 8–ந்தேதி பழைய திருக்கல்யாண மண்டபத்தில் பாலாபிஷேக மும், இரவு பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்திலும் மாசி வீதிகள் புறப்பாடும் நடைபெறுகிறது.
எனவே மேற்படி உற்சவ நாட்களான ஜூலை 6–ந்தேதி முதல் ஜூலை 16–ந்தேதி வரை திருக்கோவில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ உபய நிகழ்ச்சிகள் நடைபெறாது.