ஸ்ரீ.குளத்தூர் பஞ்சகம்

ஸ்ரீ.குளத்தூர் பஞ்சகம் 1

எந்தனை இன்னம் தெரியவில்லையோ - கூடலூர் எங்கள்
பூர்வாசிரமத்தில் ஈற்றப் புலிசாய்க்கவென்று
ஏகும் வழியாய் வந்து ஏற்றவிலை சாஸனத்தில்
சொந்தடிமை என்று இலங்குவது அறிந்தும் நீர்
சோதனைகள் செய்வதாமோ - சொல் உறுதியாம்
எங்கள்குடி வாழவந்த பரஞ்சோதியே - பூபதியே |
உந்தனடியார்க்கு நீர் சந்ததி வரேந்திரன் என்று
ஒதுவதும் உண்மைதானோ - உபரிசந்தான வழி
உண்டென்று எனக்கு நீர் உத்தரவு தாருமையா.
சிந்தை ஆனந்த விழியாமிருதம் தெளிவாகி வந்து நானும்
உன் தரிசனம் செய்ய அருள்வீர் - திருமாலரன்பெற்ற
செல்வக் குமாரநிதி ஜெயவீர மணிகண்டனே ||

குளத்தூர்  பஞ்சகம் ~ 2

உற்றார் எனக்கு ஒருவரும் இல்லையே உனையன்றி
உர்வீதலத்தில் எங்கும் ஒன்றாக நின்று இலங்குகின்ற
உன் மஹிமயை என் நாவால் உரைக்கு எளிதோ ?
பக்தகோடியில் ஒருவன் எளிமையாய் இன்றிங்கு
பரிதவிக்கின்றதாமோ பரிவாக நீர் என் குடும்பாதி
குருவென்று உள்ளம் பாவித்திரங்கி., மேலும்
கொத்தடிமை யான்செய்த குற்றம் பொறுத்தென்னைக்
கார்த்தருள் செய்தும் - உந்தன் குவலயானந்த
விழியாமிருதம் தெளித்து - என் குடி வளர்த்தின் புறச் செய்வீர்
சிற்றம்பலத்தில் நின்று நிர்த்தம் விளைந்த என் குல தெய்வமே - குளத்தூர் திருமாலரன் பெற்ற செல்வக் குமாரநிதி ஜெய வீரமணிகண்டனே.

குளத்தூர்  பஞ்சகம் ~ 3

உம்மை ஸ்துதித்தவர்கள் உள்ளத்திலிருந்து நீர்
உயிராகி வாழ்வீர் என்றும் - உலகத்திலும் வேத
வழிமுற்றிலும் ஒதலுறுதிகை என்று போற்றும்
என்வம்சம் விலையென்று யானே பகர்ந்தமொழி இப்பொழுது
மித்யையாமோ - ஈற்றடைக்காமலுன் கருணாமிருதம் தேக்கி என்குடி வளர்த்து
மேலும் உன்சந்நதிப் பணிவிடைகள் என்னாளும் செய்யவே சந்ததிவரம் தருவீர்
தருணத்தில் ஓடைநீர் பெருக்கினாலல்லவோ யண்பயிர் தழைக்குமய்யா -
சின்னக்குழந்தையாய் தென்பாண்டியன் முன்பினில் நீர் சீராடி நின்ற தேவா - திருமாலரன் பெற்ற செல்வக் குமாரநிதி ஜெயவீரமணிகண்டனே.

ஸ்ரீ குளத்தூர் பஞ்சகம் : 4

இனிமேலும் உம்மை ஸ்துதிப்பதல்லாது
வேறு இஷ்ட தெய்வங்களும் உண்டோ
எவ்வேளை உன் க்ருபை கிடைக்குமென்றே
காக்கும் என் ஹ்ருதய ஸதகத்தை தனது
குஞ்சென்பது தெரிந்தும் உன் கருணாம்ருதம்
தர தாமதித்தால் தமியேன் சகிக்க வசமாவேனோ
உன் செயலை யானும் அறியாததுண்டோ
மன வெறுப்போ இத்தென் மதுரையில்
அதிகாரியானதின் பெருமைதானோ
வம்ச வழியான குலதெய்வமென்ற
உனது சொல் மாற்றாமல் அருள் புரிவாய்
ஜன ஸமூகம் ஏத்திடும் தென்கரந்தாபுரியில்
சிந்தை பூரித்து வாழும் திருமாலரன் பெற்ற
செல்வக்குமர நிதி ஜெய வீரமணிகண்டனே
ஐந்துமலைக்கு அதிபனே சரணம் ஐயப்பா

ஸ்ரீ குளத்தூர் பஞ்சகம் : 5

பாசத்துடன் நெடும்பாறைத் தடத்து நீர்
பாரச்சுமடு எடுக்கவில்லையோ
பம்பா நதிக்கு பரி உன் பார வச்ஸ்யராம்
பக்தரை காக்கவில்லையோ
ஆசை அளவில்லாமே சைல வீதியில்
அந்தணர் அவலை வாங்கி ஆற்றைக் கடத்தி
சுமடேற்றும் ஜவந்தியூர் அத்தாழம் உண்டு
அனுதினமும் பூஜிப்பதும் மேலவாசல்
ப்ரதானி என் பரிபூரணானந்தனே என்
பண்பாடறிந்து என்னைக் கண் பார்த்து
இரங்குவாய் கவி பலது பாடினேன்
தேசம் புகழ்ந்த மணிதாஸ குல வரதனாம்
தேவனே ஸ்ரீ பூதநாதா திருமாலரன் பெற்ற
செல்வக்குமர நிதி ஜெய வீர மணிகண்டனே!!