சாஸ்தா மணிதாசர் விருத்தங்கள்

சாஸ்தா மணிதாசர் விருத்தங்கள்

படிக்க அறியேன் உனை துதிக்க அறியேன் பாட்டும் அறியேன் கவிதை கேட்டும் அறியேன் உற்ற பாலர்கள் நேசமது அறியேன் என்னபாதகத்தின் கொடுமையோ உன் பூஜாமுறையுமறியேன் இவ்வுலகில் என்போல் மூடனைக் கண்டதுண்டோ தடத்தடிமை கொண்டென்னை காத்தருளவேண்டும் தரூணமிதில் கருணைசெய்வாய் கமலமுக பூர்ணபுஷ்களை மணாளனே.

தாதாவும் அல்லை தவிக்கவிடாமல் தயவுசெய்து உந்தன் பாதாரவிந்தம் நீ தந்து அருள்புரிவாய் பரமானந்தனே நீராதாரமான மறையோர்க்கும் யாவர்க்கும் ஆதரவாய் மாதாபிதாவும் நீயே குளத்தூரில் வாழும் வீரமணிகண்டனே.

மரிள்வேர்க்கொழுந்துடன் மல்லிகை சம்பகம் வாஸ மலர்தருவே நினைந்து ஜகந்தனில் ஓங்கி செழிக்கின்ற தருவே நிகரில்லா வரம் கொடுக்கும் தரணியெல்லாம் ஓர் உருவே உயர்குளத்தூரில் வாழ்கின்ற உத்தமனே  ஸத்குருவே.

காத்து உலகத்தை கனிவோடு ரக்ஷிக்கும் காவலனே பார்த்து அடியேன் துயர் தவிர்ப்பாய் பரமானந்தனே மார்த்தாரே வென்று நின்மேல் யாவரூம் மலர் சொரிய ஆற்றுப்பிரவாகத்தில் வாழ் செம்பறைக்கோட்டத்து ஐயப்பனே.