கணேச அதர்வசீர்ஷ உபநிஷத்து

ஸ்ரீ கணேச அதர்வசீர்ஷ உபநிஷத்து! விளக்கத்துடன்.

இந்து தர்மத்தில் வேதங்களும் உபநிஷத்துக்களும் உயர்ந்த படைப்புக்களாக பெரியவர்களால் போற்றிக் கூறப்படுகின்றன. இவற்றில் உபநிஷத்து என்பது நேரடியாக ஆன்மா பற்றியும் ப்ரும்மம் பற்றியும் எடுத்துக்கூறும் வேதம் ஆகும்.

உபநிஷத்துக்கள் நேரடியாக பிரம்மத்தைப் பற்றியும் படைப்பை பற்றியும் ஆன்மா பற்றியும் எடுத்துக் கூறி புரியவைக்க முயற்ச்சி செய்கிறது!.

அதென்ன முயற்ச்சி செய்கிறது? என்று கேட்கிறீர்களா? ஆம், ஆன்மா என்பது எந்த விதத்திலும் ஒரு அறிவியல் ஃபார்முலா போலவோ, ஒரு பொருளைக் காட்டிவிடுவது போலவோ உருவகித்தோ எடுத்துச் சொல்லியோ காட்டிவிட முடியாது, புரியவைத்து விட முடியாது.

எனவே பலவிதமான வழிகளில் அவற்றை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
உதாரணமாக கடஉபநிஷத்து என்பது நசிகேதன் என்கிற பாலகனுக்கும் எமதர்மனுக்கும் நடக்கும் உரையாடல் போல அமைத்து அதன் மூலம் எமதர்மனே ஆன்மா என்றால் என்ன? இறப்பிற்குப் பின்னால் ஆன்மா என்னவாகிறது என்பதை எடுத்துச் சொல்வது போல் அமைக்கப்பட்டிருக்கும்.

அது போல கணேச அதர்வசீர்ஷம் என்கிற இந்த உபநிஷத்தும் கூட முழுமுதற்க் பெருமானான கணேசப் பெருமானை துதிப்பது போல 'நீ'என்கிற பதத்தைச் சொல்லி நம்முள் இருக்கும் ஆன்மாவை உணரச் செய்ய முயற்சிக்கிறது.

அது பற்றி கொஞ்சம் சுருக்கமாகப் பார்ப்போம். இந்த உபநிஷத்தில் இருக்கும் ஸ்லோகங்கள் கணபதியைப் போற்றிக் கூறுவதே ஆகும். முழுக்க முழுக்க கணபதியை ப்ரும்மத்தின் ரூபமாகவே பாடல்கள் போற்றிக் கூறுகின்றன. அவ்வாறு கூறும்போது சர்வமும் ப்ரும்மம் என்கிற வகையில் அதனைப் படிக்கும் நாமும் அதுவாகவே இருந்து கேட்பது போல அமைக்கப்பட்டிருக்கும். உபநிடதம் சார்ந்த பிரம்ம தத்துவ பதிவு தனியாக பதிவிடுகிறேன். இது ஸ்லோகங்கள் ஆல்பம் என்பதினால் தனி பதிவு தொடரும்.

கணபதியைக் குறித்துச் சொல்லி கூடவே நம்முள் இருக்கும் ப்ரும்மத்தையும் உணரச் செய்யும் அற்புதமான உபநிஷத் இது! எனக்கு மிகவும் பிடிக்கும்.

அவற்றில் சில வரிகளைப் பற்றிப் பார்ப்போம்! இதே போல் தத்துவ குவியல் என்று கூறலாம் ஒளவையார் எழுதிய வினாயகர் அகவல்.

இந்த ஸ்லோகங்கள் இப்படித் துவங்குகின்றன.

முதலில் கனபதியை வணங்கித் துவங்குகிறது.

கணபதியை உருவகித்து இப்படி ஆரம்பிக்கிறது.

த்வம் ஏவ ப்ரத்யக்ஷம் தத்வம் அஸி! -

'த்வம்' என்கிற சமஸ்கிருத வார்த்தைக்கு 'நீ' என்று பொருள்!

'அஸி' என்றால் 'இருக்கிறது' அல்லது 'இருக்கிறாய்' என்று வாக்கியத்திற்கேற்ப பொருள்படும்!

நீ ஒருவனே கண்கண்ட தத்துவமாக இருக்கின்றாய்!

த்வம் ஏவ கேவலம் கர்த்தா அஸி!

நீ ஒருவன் மட்டுமே படைப்பவனாக இருக்கின்றாய்!

இப்படியாக...

நீ ஒருவன் மட்டுமே யாவற்றையும் தாங்குபவனாக இருக்கின்றாய்!

நீ ஒருவன் மட்டுமே அழிப்பவனாகவும் இருக்கின்றாய்!

நீ ஒருவனே எல்லாமக இருக்கிற பிரம்மமாக இருக்கின்றாய்!

நீயேதான் நித்யமாக இருக்கும் ஆத்மாவாக இருக்கின்றாய்!

ஒழுங்குடன் பேசுகிறவன்!
ஸத்யம் பேசுகிறவன்!

நீ எல்லாவற்றையும் காப்பவன்!

நீயே வாக்கைக் காப்பாற்றுகின்றவன்!

நீயே கேட்பவற்றைக் காப்பாற்றுகின்றவன்!

நீயே செயல்களைக் காப்பாற்றுகின்றவன்!

நீயே சித்தத்தைக் காப்பாற்றுகின்றவன்!

நீயே குருவைக் காப்பாற்றுகின்றவன்!

நீயே சிஷ்யரைக் காப்பாற்றுகின்றவன்!

நீயே மேற்குதிசையிலிருந்து காப்பவன்!

நீயே கிழக்கு திசையிலிருந்து இருந்து காப்பவன்!

நீயே தெற்கிலிருந்துக் காப்பவன்!

நீயே வடக்கிலிருந்துக் காப்பவன்!

நீ மேலே இருந்துக் காப்பவன்!

நீ கீழே இருந்தும் காப்பவன்!

சர்வ திசையிலிருந்தும் சுற்றிச் சுற்றி எப்போதும் காப்பவன்!

நீ வாக்குமயமானவன்
நீ ஞானமயமானவன்
நீ ஆனந்தமயமானவன்
நீ ப்ரம்மமயமானவன்
நீ நித்யமானதும் ஆனந்தமானதும் இரண்டற்ற மூலப்பொருளாக இருக்கிறாய்!

கண்முன்னால் தெரியும் ப்ரம்மமாக இருப்பதும் நீயே!

ஞானத்தால் உணரக்கூடியவனும், விஞ்ஞானத்தால் அறியப்படுபவனும் நீயே!

ப்ரும்த்தின் ரூபத்தை உணரச்செய்யும் வாக்கியங்கள்!

எல்லா உலகங்களும் எல்லாம் உன்னிடமிருந்தே தோன்றின!

எல்லா உலகங்களும் எல்லாம் உன்னாலேயே நிலைபெற்று இயங்குகிவருகிறது!

எல்லா உலகங்களும் உனக்குள்ளேயே ஒரே பொருளாய் அடங்கி இருக்கிறது!

நீயே பூமி, தண்ணீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிறாய்!

நீ நான்கு நிலைகளான வாக்கின் படிகளாக ஆகிறாய்!

நீ மூன்று குனங்களுக்கும் பேலானவன்!

நீ மூன்று தேஹங்களுக்கும் மேலானவன்!

நீ மூன்று காலங்களுக்கும் மேலானவன்!

நீ மூலாதாரத்தில் நித்யமாக நிலைபெற்று இருக்கிறாய்!

(லிங்கம் மற்றும் குதத்திற்கு நடுவிலான குண்டலினியில் நிலைத்திருப்பவன்)

நீயே மூன்று சக்திகளுமாகிறாய்!

(படைத்தல், காத்தல், அழித்தல்)
உன்னை யோகிகள் நித்யமாக தியானம் செய்கிறார்கள்!

நீ ப்ரம்மா
நீ விஷ்ணு
நீ ருத்ரன்
நீ இந்திரன்
நீ அக்னி
நீ வாயு
நீ சூரியன்
நீ சந்திரன்
நீயே ப்ரம்மம், பூலோகம், புவர் லோகம், சுவர்க லோகம்:: ஓம்!

இவ்வாறு கணபதிக் கடவுளை ஆன்மா மற்றும் ப்ரும்மத்தை நம்மை நோக்கிச் சொல்லுவதைப் போல உபதேசித்துவிட்டு பின் கணேசரின் ஸ்வரூபம் குறித்து ஸ்லோகங்கள் செல்லுகிறது.

கீழே இருக்கும்  இந்த அழகான ஸ்லோகத்தை ஒரு முறை படியுங்கள்.

ஸ்ரீ கணபதி அதர்வஸீர்ஷ உபநிஷத்:-

ஓம் பத்ரம் கர்ணேபி: ஸ்ருணுயாம தேவா: பத்ரம்
பஸ்யேமாக்ஷபிர் யஜத்ரா; ஸ்திரைரங்கைஸ் துஷ்டுவா ஸஸ்துநூபி:
வ்யஸேம தேவஹிதம் யதாயு: ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தஸ்ரவா:
ஸ்வஸ்தி ந: பூஷா விஸ்வ வேதா: ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாது ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

அத கணேஸ அதர்வஸீர்ஷம் வ்யாக்யாஸ்யாம்:-

ஓம் நமஸ்தே கணபதயே த்வமேவ ப்ரத்யக்ஷம் தத்த்வமஸி த்வமேவ
கேவலம் கர்தாஸி த்வமேவ கேவலம் தர்தாஸி த்வமேவ கேவலம்
ஹர்தாஸி த்வமேவ ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மாஸி த்வம்
ஸாக்ஷாதா த்மாஸி நித்யம்
ருதம் வச்மி ஸத்யம் வச்மி
அவ த்வம் மாம் அவ வக்தாரம் அவ ஸ்ரோதாரம் அவ தாதாரம்
அவ தாதாரம் அவாநூசானமவ ஸிஷ்யம் அவ பஸ்சாத்தாத் அவ
புரஸ்தாத் அவ உத்தராத்தாத் அவ தக்ஷிணாத்தாத் அவ சோர்த்வாத்தாத்
அவாதராத்தாத் ஸர்வதோ மாம் பாஹி பாஹி ஸமந்தாத்
த்வம் வாங்மயஸ் த்வம் சின்மய: த்வம் ஆநந்தமயஸ்த்வம்
ப்ரஹ்மமய: த்வம் ஸச்சிதாநந்தா த்விதீயோஸி த்வம் ப்ரத்யக்ஷம்
ப்ரஹ்மாஸி த்வம் ஜ்ஞாநமயோ விஜ்ஞானமயோஸி
ஸர்வம் ஜகதிதம் த்வத்தோ ஜாயதே ஸர்வம் ஜகதிதம்
த்வத்தஸ்திஷ்டதி ஸர்வம் ஜகதிதம் த்வயி லயமேஷ்யதி ஸர்வம்
ஜகதிதம் த்வயி ப்ரத்யேதி த்வம் பூமி ராபோ நலோ நிலோ நப:
த்வம் சத்வாரி வாக்பதாநி
த்வம் குணத்ரயாதீத: த்வம் அவஸ்தாத்ரயாதீத: த்வம்
தேஹத்ரயாதீத: த்வம் காலத்ரயாதீத: த்வம் மூலாதார ஸ்திதோஸி
நித்யம் த்வம் ஸக்தித்ரயாத்மக: த்வாம் யோகினோ த்யாயந்தி நித்யம்
த்வம் ப்ரஹ்மாஸ்த்வம் விஷ்ணுஸ்த்வம் ருத்ரஸ்த்வம் இந்த்ரஸ்த்வம்
அக்நிஸ்த்வம் வாயுஸ்த்வம் ஸூர்யஸ்த்வம் சந்த்ரமாஸ்த்வம் ப்ரஹ்ம
பூர்புவ: ஸுவரோம்
கணாதிம் பூர்வமுச்சார்ய வர்ணாதீம் ததநந்தரம் அனுஸ்வார: பரதர:
அர்தேந்து லஸிதம் தாரேண ருத்தம் ஏதத்தவ மநுஸ்வரூபம்
ககார: பூர்வ ரூபம் அகாரோ மத்யம ரூபம் அநுஸ்வாரஸ் சாந்த்ய
ரூபம் பிந்துருத்தர ரூபம் நாத: ஸந்தானம் ஸஹிதா ஸந்தி:
ஸைஷா கணேஸ வித்யா கணக ருஷி: நிச்ருத் காயத்ரீச் சந்த:
கணபதிர் தேவதா ஓம் கம் கணபதயே நம:
ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி: ப்ரசோதயாத் :
ஏக தந்தம் சதுர் ஹஸ்தம் பாஸமங்குஸ தாரிணம் ரதம் ச வரதம்
ஹஸ்தைர் பிப்ராணம் மூஷக த்வஜம் ரக்தம் லம்போதரம் ஸூர்ப
கர்ணகம் ரக்த வாஸஸம் ரக்த கந்தாநுலிப்தாங்கம் ரக்த புஷ்பை:
ஸுபூஜிதம் பக்தாநுகம்பிநம் தேவம் ஜகத் காரணமச்யுதம்
ஆவிர்பூதம் ச ஸ்ருஷ்ட்யாதௌ ப்ரக்ருதே; புருஷாத்பரம் ஏவம்
த்யாயதி யோ நித்யம் ஸ யோகீ யோகிநாம் வர:
நமோ வ்ராத பதயே நமோ கண பதயே நம: ப்ரமத பதயே
நமஸ்தே ஸ்து லம்போதராய ஏக தந்தாய விக்ந நாஸிநே
ஸிவஸுதாய ஸ்ரீ வரத மூர்த்தயே நம:
ஏதததர்வஸீர்ஷம் யோ தீதே ஸ ப்ரஹ்மபூயாய கல்பதே ஸ
ஸர்வ விக்நைர் ந பாத்யதே ஸ ஸர்வத்ர ஸுகமேததே ஸ பஞ்ச
மஹா பாபாத் ப்ரமுச்யதே ஸாயமதீயானோ தி வஸக்ருதம் பாபம்
நாஸயதி ப்ராதரதீயானோ ராத்ரி க்ருதம் பாபம் நாஸயதி ஸாயம்
ப்ராத: ப்ரயுஞ்ஜானோ பாபோ பாபோ பவதி ஸர்வத்ராதீயானோ
பவிக்னோ பவதி தர்மார்தகாம மோக்ஷம் ச விந்ததி
இதமதர்வஸீர்ஷமஸிஷ்யாய ந தேயம் யோ யதி மோஹாத்
தாஸ்யதி ஸ பாபீயான் பவதி ஸஹஸ்ர ஆவர்தனாத் யம் யம்
காமமதீதே தம் தமநேன ஸாதயேத்
அநேந கணபதிமபிஷிஞ்சதி ஸ வாக்மீ பவதி சதுர்த்யா மநஸ்நன்
ஜபதி ஸ வித்யாவான் பவதி இத்யதர்வண வாக்யம்
ப்ரஹ்மாத்யாவரணம் வித்யாந் ந பிபேதி கதாசநேதி
யோ தூர்வாங்குரைர் யஜதி ஸ வைஸ்ரவணோபமோ பவதி யோ
லாஜைர் யஜதி ஸ யஸோவான் பவதி ஸ மேதாவான் பவதி யோ
மோதக ஸஹஸ்ரேண யஜதி ஸ வாஞ்சித பலமவாப்நோதி ய: ஸாஜ்ய
ஸமித் பிர் யஜதி ஸ ஸர்வம் லபதே ஸ ஸர்வம் லபதே
அஷ்டௌ ப்ராஹ்மணான் ஸம்யக் க்ராஹயித்வா ஸூர்ய வர்சஸ்வீ
பவதி ஸூர்ய க்ரஹே மஹா நத்யாம் ப்ரதிமா ஸந்திதௌ வா
ஜப்த்வா ஸித்த மந்த்ரோ பவதி ! மஹா விக்நாத் ப்ரமுச்யதே மஹா
தோஷாத் ப்ரமுச்யதே மஹா பாபாத் ப்ரமுச்யதே ஸ ஸர்வவித்
பவதி ஸ ஸர்வவித் பவதி ய ஏவம் வேத இத்யுபநிஷத்
ஸஹ நாவவது ஸஹ நௌ புநக்து ஸஹ
வீர்யங்கராவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:
ஓம் பத்ரம் கர்ணேபி: ஸ்ருணுயாம தேவா: பத்ரம்
பஸ்யேமாக்ஷபிர் யஜத்ரா; ஸ்திரைரங்கைஸ் துஷ்டுவா ஸஸ்துநூபி:
வ்யஸேம தேவஹிதம் யதாயு: ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தஸ்ரவா:
ஸ்வஸ்தி ந: பூஷா விஸ்வ வேதாநு ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாது
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

இந்த ஸ்லோகத்தை  நாம் எதுவாக இருந்து படிக்கிறோமோ அதுவாகவே உணருவோம்!

நாம் எதுவாகவெல்லாம் உணரப்படுகிறோமோ அதுவெல்லாம் ப்ரும்மமே!

உணரப்படும் போது நான் என்கிற இருப்பை எப்போது மறக்கிறோமோ அப்போது ப்ரம்மமாகிறோம்!