மணிதாசர் விடுதிகள் சாஸ்தா விடுதிகள்

மணிதாசர்_விடுதிகள்:- #சாஸ்தா_விடுதிகள் :-

​1)​ அத்தாதி புத்திரனார் ​ஆதி குளத்தூரானும்
வெற்றியுள்ள கோபுரமும் வெகுமையுள்ள பூ முகப்பும்
​சுற்றிவர பொற்கதவும் ​ஸ்தூதிபியின் மேல் பொற்குடமும்
​இத்தலங்கள் காணப் ​பதினாயிரம் கண் வேண்டுமையா !

2) ஓம்கார பஞ்சணைமேல் உவந்து விளையாட வந்த
ஆங்காரப்பூரணியே ஆதரிக்கும் தென்குளத்தூர்
தேங்காய் கொடுத்தாலும் சிரட்டை கொடான் இண்டலையான்
பூங்காவிற்குள்ளிருக்கும் புண்ணியனைக் கொண்டாட

3) குளத்தூரிலேயிருந்து குடியிருந்து அவதரித்து
வளர்தொருவாய் பெற்றடுத்த மாதா அவளுக்கிணையாய்
குளத்தூரில் பதி நற்குலக் கன்னியர்கள் தந்த செல்வம்
குளத்தூரில் ஐயன் என்றால் குற்றம் ஒன்றும் வராதே !!

4) மாணிக்கமாலை மணி மாலை பூமாலை
காணிக்கை கொண்டு வந்து காண்பார் தினந்தோறும்
ஆணிப்பொன்மார்பன் அழகன் குளத்தூரானைப்
பேணித்தொழாய் நெஞ்சே !! பிழைகலொன்றும் ​ வராதே !!

5) கற்சரடு பொற்பதக்கம் கனகமுத்துச் சுவடிகளும்
மெய்யாய் சுமந்திருக்கும் வீரகா உன் திருமேனி
வட்டமிட்டு வரும் பேயைத் தடியெடுத்துதான் ​விரட்டும்
மிக்க நல்ல குளத்தூரான் வெள்ளைக்கல் ஆதிபனே !!!

6) பலமரங்கள் கிடுகிடுடென மலையருவி திடுதிடென
இரவுபகல் அறியாமல் பெருமாரி மொழிகாலம்
பாராய் பராபரனே !! பரதேசிக்காவலனே !!
வரங்கள் கொடுப்பவளே !!வாழ்க்குளத்தூராதிபனே !

​7)​ நாள் கேட்டு முகூர்த்தமிட்டு நல்ல நாள் என்று சொல்லி
வீட்டைவிட்டு சுமடெடுத்துச் சிவசைலம் வீதியிலே
கூட்டமெல்லாம் கூடி குளத்தூரிலே நினைவாய்
தாஷ்டிகமாய் வழிநடத்தும் தர்மகுளத்தூரில் ஐயா

​8)​உற்றார் இருக்க உடன்பிறப்புத் தானிருக்கப்
பெற்றோரிருக்கப் புறப்பட்டேன் உன் காவல்
என் தந்தை மனமுருக சோதரன் கண்ணீர் பெருக
பந்து ஜன முருக பெற்ற மக்கள் தானுருக.

​9)​ சொந்த மனையாள் தூண்டில் மச்சம் போல் துடிதுடிக்க
இந்த பிறவிகள் தீர்க்க இறக்க மில்லையோ சுவாமி
வியர்த்த தெல்லாம் பனிநீராம் வெண் சாமரம் வீச
காத்தவனே குளத்தூரான் சிவ காந்தமலை காவலனே

​10) ​கல்லான மலையேறித் தடலேறிக் குன்றேறி
இல்லாமையால் அல்லவோ இந்த மலை ஏறுவதும்
வல்லான பக்ஷிகளும் பாண்டி பரதேசிக்களைக்
கொல்லாமல் காத்தருள் வாய் குளத்தூரில் ஐயனே

​11)​ மேகம் இருண்டு வர விடுதிகளும் காணாமல்
காகம் போல் உமதடியேன் கலங்குவது கானீரோ
ஆக்கம் மிகத் தளர்ந்தேன் ஐயனே தென் குளத்தூர்
நாகம் அணிந்தவனே நல்லமலை சாஸ்தாவே

​12) ​ எதிர்காற்றும் மழையும் எடுத்தடி வைக்கவொட்டாமல்
பெரியாற்றின் கரையினிலே பரதவிக்கும் அந்நேரம்
அலையரமல் தோணிக் கட்டி அக்கரைக்கே கடத்திவிடும்
பலம் உமக்கு சாஸ்தாவே பரதேசிக் காவலனே

​13) ​நம்பி வந்தேன் சன்னதியில் நன்மை தர வேண்டுமென்று
பாடி வந்தேன் உன் பெயரைப் பாக்கிய மிக தந்தருள்வாய்
பெற்றோரை போல் என் பிழை பொருத்து ஆதரிப்பாய்
விஸ்தார மணிமார்பா வெள்ளைக்கல் ஆதிபனே

​14) ​உன்னை நம்பும் எங்களுக்கு ஒரு வினையும் வாராதுதென்று
நினைத்திருந்து காலமெல்லாம் ஏங்குதையா என் மனம்
ஓங்கி எனது மனம் ஒன்று பத்து நூராகும்
சங்கைக் கொண்டு திரு வாரியங் காவுவை யாவே

​15) ​கச்சை கட்டி முண்டுத்தி மூங்கில் தடி பிடித்து
பதினெட்டாம் குன்றேறிப் பார்க்க வந்தேன் உன் மகிமை
பாரசுமடெடுத்து பதினெட்டாம் குன்றேறி
ஏற்றமெல்லாம் கடந்து இளைப்பாறும் அந்நேரம்.

​16) ​பொல்லாத மழைப் பெய்ய புனலாறு பெருகிவர
கல்லானை மிதந்துவர காட்டெருமை மிரண்டோட
மெய்யாகும் கன்னீயர்கள் மேதினியிற் குரவையிட
ஐயன் திருவுள்ளம் திரு ஆரியங்காவு ஐயாவே

1​7) ​ஐயா உன் சன்னதியில் நம்பிவந்தேன் ஆண்டவனே
அக்ஷணமே வந்துதவும் சபரிமலை சாஸ்தாவே
ஆதியந்தம் இல்லாத அற்புதனே குரு நமக்கு
வேத ஒளியாம் சபரி மெய்யனும் ஆண்டவனே

​1​8) ​கச்சை கட்டி முண்டுத்தி மூங்கில் தடி பிடித்து
பதினெட்டாம் குன்றேறிப் பார்க்க வந்தேன் உன் மகிமை
பாரசுமடெடுத்து பதினெட்டாம் குன்றேறி​
ஏற்றமெல்லாம் கடந்து இளைப்பாறும் அந்நேரம்...

19)  பிடித்தவடி கிடுகிடென பின்னுதவியில்லாமல்
நடுக்கடலில் குரங்கினம்போல் நான் தவிக்கும் அந்நேரம்
எடுத்த வில்லும் கருமையுமாய் அவர் பிறகே செருக்கனுமாய்
காத்தவனே !!! குளத்தூரா !!! சிவ காந்த மலைக்  காவலனே !!!

20) கல்லோ  இருப்போ கடும் வஜ்ரமோ சித்தமது
பொல்லாக் கொலைக்கோ குலதெய்வமென்று கையெடுத்தேன்
கல்லும் இரங்கும் கடும்  வஜ்ரமும்  தானிரங்கும்
புல்லும் இரங்கும் பேய் பிடாரியும் தான் இரங்கும் !!!!