கணபதிஹோமம் - அஷ்டத்ரவ்யம்

கணபதிஹோமம் - அஷ்டத்ரவ்யம்

செய்யும முறை்

மோதகா: அகண்டிதா: க்ராஸமிதா:| ப்ருதுக லாஜஸக்தவோ முஷ்டிபரிமிதா:|
இக்‌ஷுகண்டா: பர்வமிதா: | நாரிகேலம் அஷ்டதா கண்டிதம் |
திலா: சுலுகமாத்ரா: | கதலீ பலம் அல்பம் சேதகண்டிதம் |
ப்ருது சேத்யதாருசி கண்டிதம் | அமாஷாம் ப்ருதக் ப்ருதகாஹுதய: ||


மோதகா: அகண்டிதா: க்ராஸமிதா:|
மோதகம் முழுவதாகவும் விழுங்ககூடிய அளவிலும்.||

ப்ருதுக லாஜஸக்தவோ முஷ்டிபரிமிதா:|
அவல், பொரி, சத்துமாவு, ஆகியவை கைபிடி அளவிலும், ||

இக்‌ஷுகண்டா: பர்வமிதா: |
கரும்புதுண்டு கனுவளவிலும்,

நாரிகேலம் அஷ்டதா கண்டிதம் |
தேங்காய் எட்டுதுன்டாகவும்,

திலா: சுலுகமாத்ரா: |
எள் சுருக்கிய உள்ளங்கையளவும்,

கதலீ பலம் அல்பம் சேதகண்டிதம் |
வாழைபழம் சிறிதானால் முழுவதாகவும் பெரிதானால் துண்டமாகவும்,

ப்ருது சேத்யதாருசி கண்டிதம் |
அமாஷாம் ப்ருதக் ப்ருதகாஹுதய: ||
இந்த த்ரவ்யங்களை தேன், பால், நெய், ஆகியவற்றுடன் கலந்து தனிதனியாய் ஹோமம் செய்யவும்.

நன்றி - KirupaShankar Ghanapatigal

காமதா ஏகாதசி

காமதா ஏகாதசி

பங்குனி, சித்திரை மாதம் - சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை காமதா ஏகாதசியாக ‌கொண்டாடுவர். காமதா ஏகாதசி விரத  மகிமையை நாம் இப்போது காண்போம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தோழனான அர்ஜூனன், கிருஷ்ண பரமாத்மாவிடம்," ஹே மதுசூதனா! உனக்கு என்னுடைய அநந்த கோடி நமஸ்காரங்கள். பிரபு, தாங்கள் தயைகூர்ந்து பங்குனி-சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் மஹாத்மியத்தை வர்ணிக்க வேண்டுகிறேன். அந்த ஏகாதசியின் பெயர், அன்று ஆராதனை செய்ய வேண்டிய தெய்வம், அவ்விரதத்தை கடைப்பிடித்து மேன்மை பெற்றவர்கள் மற்றும் அவ்விரதம் அனுஷ்டிப்பதால் எவ்வித நற்பலன்கள் கிட்டுகின்றன ஆகிய அனைத்தையும் கூற வேண்டுகிறேன்." என்றான். ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு," ஹே ! பார்த்தா, ஒரு சமயம் குரு வசிஷ்டரிடம் ராஜா திலீபனும் இதே கேள்வியைக் கேட்டான். ஆகையால் அவர்கள் இருவரிடையே நடந்த சம்வாதத்தை  உனக்கு சொல்கிறேன். கேள்." என்றார். ராஜா திலீபன் குரு வசிஷ்டரிடம்," குருதேவா, பங்குனி-சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் பெயர் என்ன? அன்று ஆராதிக்க வேண்டிய தெய்வம், பூஜை விதிகள் இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஆகையால் அனைத்தையும் தாங்கள் கிருபை கூர்ந்து விவரமாக கூற வேண்டும்." என்றான்.அதற்கு பதிலளிக்கையில் மஹரிஷி வசிஷ்டர்," ராஜன்! சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி, காமதா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இவ் ஏகாதசி விரதமானது அனுஷ்டிப்பவர்களின் சகல விதமான பாவங்களையும் நீக்கி மோட்சப்பிராப்தியை அளிக்கும் சக்தி வாய்ந்தது. உலர்ந்த விறகானது அக்னியின் தொடர்பால் எப்படி எரிந்து சாம்பலாகிறதோ, அதே போல் காமதா ஏகாதசி விரதத்தின் புண்ணியபலனின் பிரபாவம், சகல வித பாபங்களையும் நீக்குவதோடு, புத்ர பிராப்தியையும் அளிக்கிறது. இவ்விரதம் அனுஷ்டிப்பதால் கர்மவினையின் காரணமாக இழி நிலை பிறவி எடுத்தவர் அதிலிருந்து விடுதலை பெறுவதுடன், இறுதியில் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெறுவர். இப்போது உனக்கு, இவ் ஏகாதசியின் மஹாத்மிய கதையை கூறுகிறேன். கவனத்துடன் கேள்." என்றார்.
பழங்காலத்தில் போகீபுர் என்னும் நகரை புண்டரீகன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவனது ஆட்சியில் நகரானது அனைத்து வளங்களும் பெற்று ஐஸ்வர்யத்துடன் விளங்கியது. அந்நகரில் அநேக அப்சரஸ், கந்தர்வர், கின்னரர் வசித்து வந்தனர். அதில் சங்கீதத்தில் நிபுணத்துவம் பெற்ற லலித் மற்றும் லலிதா என்னும் கந்தர்வ தம்பதியினர் அழகான மாளிகையில் உல்லாசமாக வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் இடையில் கற்பனையில் கூட பிரிவு என்பதை ஏற்க இயலாத அளவு இருவரும் ஒருவர் மேல் ஒருவர் ப்ரேமையும், காதலும் கொண்டிருந்தனர்.  ஒரு முறை அரசன் புண்டரீகன் இசையரங்கத்தில் கந்தர்வர்களுடன் அமர்ந்து சங்கீதத்தை ரசித்துக் கொண்டிருந்தான். அங்கு மற்ற கந்தர்வர்களுடன் சேர்ந்து கந்தர்வனான லலித்தும் பாடி மகிழ்வித்துக் கொண்டிருந்தான். அச்சமயம் அவனுடைய காதல் மனைவியான லலிதா அங்கு இருக்கவில்லை. பாடிக் கொண்டிருந்த லலித்துக்கு திடீரென்று அவளது நினைவு எழ, அதன் காரணமாக சுருதி விலகி பாடலை தவறாக பாட நேர்ந்தது. அதைக் கண்ட நாகராஜனான கார்கோடகன் அரசன் புண்டரீகனிடம் அவனைப் பற்றி புகார் செய்தான். அதை விசாரித்த அரசன் புண்டரீகன், லலித் மீது மிகுந்த கோபம் கொண்டு," துஷ்டனே ! துர்மதி பெற்றவனே ! என் முன்னிலையில் பாடல் பாடும் பொழுது கூட உன் மனைவியை நினைத்துக் (ஸ்மரணம்) கொண்டிருந்து சங்கீதத்திற்கு அவமரியாதை செய்துள்ளாய். ஆதலால் உன்னுடைய இந்த பாபவினையின் தண்டனையாக, நீ நரமாமிசம் தின்னும் ராட்சஸான ஆக மாறுவாய் " என்று சாபம் இட்டான். அரசனின் சாபம் பெற்ற கந்தர்வன் லலித் அக்கணமே கோர வடிவுடைய ராட்சஸனாக மாறினான். அவனுடைய முகம் காண்பவர்களுக்கு அச்சத்தையும், பயத்தையும் அளிக்கக் கூடிய பயங்கர ரூபத்தை பெற்றது. கண்கள் இரண்டும் சூரிய, சந்திரனைப் போன்று கனன்று ஒளியை உமிழ்ந்து கொண்டு இருந்தன.   வாயிலிருந்து அக்னி பிழம்புகள் வெளி வந்து கொண்டிருந்தது. அவனது மூக்கு மலையின் கீழ் உள்ள குகையைப் போன்றும்,   கழுத்து மலையைப் போன்றும் விளங்கியது.  ராட்சஸனாக மாறி  கந்தர்வன் லலித் மிகுந்த துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தது.

ப்ரியத்துக்கு உரிய தன் நேசனுக்கு நேர்ந்ததைக் கேட்ட லலிதா மிகுந்த துக்கமும், மனவேதனையும் கொண்டு, தன் கணவரை இந்நிலையிலிருந்து விடுவிக்க எங்கு செல்வது, என்ன செய்வது என்று அறியாது திகைத்தாள். எப்படி தன் கணவரை இந்த நரகத்திலிருந்து மீட்பது என்று யோசித்தாள்.ராட்சஸனாக மாறிய கந்தர்வன் லலித் காட்டில் இருந்துக் கொண்டு அநேக பாபங்களை செய்ய ஆரம்பித்தான். அவனுடைய மனைவி லலிதை அவன் செல்லுமிடமெல்லாம் பின் தொடர்ந்து அவனுடைய நிலையை எண்ணி வருந்தினாள். இப்படியாக தன் கணவனை பின் தொடர்ந்து இறுதியில் விந்தியாசல் பர்வதத்தை அடைந்தாள். அங்கு அவள் சிருங்கி முனிவருடைய ஆசிரமத்தைக் கண்டாள். ஆசிரமத்தைக் கண்டதும் உடனடியாக அதனுள் சென்று முனிவரை நமஸ்கரித்து பின் வினயத்துடன் அவரிடம்,"முனிவரே !, நான் வீர்தன்வா என்னும் கந்தர்வனின் மகள். என் பெயர் லலிதா. என் கணவர் அரசன் புண்டரீகனின் சாபத்தால் கோர ராட்சஸனாக மாறிவிட்டார்.  அவருக்கு நேர்ந்த இந்த துர்பாக்கிய நிலைமை எனக்கு மிகுந்த துக்கத்தையும், வேதனையையும் அளிக்கிறது. மேலும் நித்தமும் அவர் படும் பாட்டைக் கண்டு நான் சொல்லவொண்ணா வேதனையை தவித்துக் கொண்டு இருக்கிறேன்.  முனி சிரேஷ்டரே !, தாங்கள் தான் கருணையுடன் என் கணவர் இந்நிலையிலிருந்து விடுதலை பெற ஏதாவது சிறந்த உபாயத்தை கூற வேண்டும்." என்று பிரார்த்தித்தாள்.

லலிதையின் கதையைக் கேட்ட சிருங்கி முனிவர்," கந்தர்வ கன்னிகையே !, சித்திரை மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியை காமதா ஏகாதசி என்று அழைப்பர். அன்று ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வத்துடன் உபவாசம் இருந்து அனுஷ்டித்தால் மனிதர்களின் அனைத்து காரியங்களும் சீக்கிரமே சித்தி அடையப் பெறும். அன்று நீ விரதம் அனுஷ்டித்து அவ்விரத புண்ணிய பலனை உன் கணவருக்கு அளித்தால், அரசனின் சாபத்தால் ராட்சஸ ரூபத்தை அடைந்த உன் கணவன் அதிலிருந்து விமோசனம் பெறுவான்." என்று ஆசீர்வதித்தார்.முனிவரின் வார்த்தைகளின் படி லலிதா ஆனந்தத்துடன் காமதா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டித்தாள். மறு நாள் துவாதசியன்று பிராம்மணர் முன்னிலையில் தான் பெற்ற விரத புண்ணிய பலனை கணவருக்கு அர்ப்பணித்தாள்  பகவான் மஹாவிஷ்ணுவை வணங்கி,"ஹே பிரபோ வாசுதேவா, ஏகாதசி விரதம் அனுஷ்டித்து நான் பெற்ற புண்ணிய பலன் அவரை சேர்ந்து, அதன் பிரபாவத்தால் அவர் சாபத்திலிருந்து விடுதலை அடைய தங்களை பிரார்த்திக்கிறேன்." என்று வேண்டிக் கொண்டாள்.ஏகாதசி விரதத்தின் புண்ணிய பலனால் அவள் கணவன் லலித் ராட்சஸ ரூபத்திலிருந்து விடுதலை பெற்று தன் பழைய கந்தர்வ சொரூபத்தை அடைந்தான். அழகிய ஆடை, ஆபரணங்களுடன் தன் மனைவி லலிதாவுடன் மீண்டும் ஆனந்தமாக வாழத் தொடங்கினான். காமதா ஏகாதசியின் பிரபாவத்தால் முன்பை விட மிகவும் செழிப்புடன் இருவரும் வாழ்ந்தனர். இறுதியில் இருவரும் புஷ்பக விமானத்தில் அமர்ந்து ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெற்றனர்

ஹே பார்த்தா !  விதிப்பூர்வத்துடன் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால் அனைத்து பாபங்களும் நீங்குகிறது. இவ் விரதத்தின் புண்ணிய பலனானது பிரம்மஹத்தி போன்ற கொடிய பாபங்களிலிருந்தும், மனித சொரூப இல்லா இதர யோனி பிறவிகளிலிருந்தும் விடுதலை அளிக்கிறது. உலகத்தில் இவ்விரதத்திற்கு நிகரான விரதம் வேறெதுவும் இல்லை. காமதா ஏகாதசி விரத கதை (அ) மஹாத்மியம் கேட்பவருக்கும், படிப்பவருக்கும் அத்யந்த பலனை அளிக்கக் கூடியது.

மனிதர்கள் எப்பொழுதும் தன் சுகத்தைப் பற்றிய சிந்தனையில் உழல்கிறார்கள். இதில் தவறேதும் இல்லை எனினும் சதா சர்வகாலமும் அது ஒன்றே வாழ்வின் குறிக்கோள் என்று இருந்தால், அது நம் கடமைகளை மறக்கச் செய்து, அதனால் விளையும் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடுகிறது. கந்தர்வன் லலித்தும் கடமையை மறந்ததால், கோர ராட்சஸனாக மாறி வெறுக்கத்தக்க காரியங்களை செய்ததுடன், கஷ்டத்தையும் அனுபவிக்க நேர்ந்தது. பகவான் மஹாவிஷ்ணு தன் பக்தர்களின் மீது அளவில்லா க்ருபா கடாக்ஷத்தை அருள்பவர். பக்தர்கள் மனம் விரும்பிய வரத்தை அருள்பவர். தான் பெற்ற புண்ணிய பலனை மற்றவரின் நலம் கருதி அர்ப்பணிப்பதால், அந்நற்கர்மாவானது பன்மடங்கு பெருகி மிகுந்த சக்தி வாய்ந்ததாகிறது. அத்தகைய மேன்மையான தானத்தை செய்பவர் தெய்வத்திற்கு ஒப்பானவராகிறார்.

On 28.03.2018 Parana Time = 06:59 to 10.11(Chennai)

Ekadashi Tithi Begins = 03:43 on 27/Mar/2018
Ekadashi Tithi Ends = 01:31 on 28/Mar/2018

தி. வே. சுந்தரம் அய்யங்கார் (T V Sundaram Iyengar)

தி.வே.சுந்தரம் அய்யங்கார் - 22 March 1877, (திருக்குறுங்குடி) - 28 April 1955, (கொடைக்கானல்)


’எலே... தெரியுமா சேதி? புதுசா ஒரு வண்டி வந்திருக்காம். குதிரை, மாடு எதுவும் இழுக்கத் தேவையில்லையாம் தானாவே ஓடுமாம்’’ கிராமமெங்கும் பரவிய தகவலை யாருமே நம்பத்தயாராக இல்லை. ‘‘அதெப்படி எதுவுமே இழுக்காம ஒரு வண்டி ஓடும்?’’ என்று, செய்தி சொன்னவரை அனைவரும் கேலி செய்தார்கள்.

ஆனால், உண்மையிலேயே கண்ணெதிரே அந்த வாகனம் வந்தபோது ஆச்சர்யத்தில் திகைத்து நின்ற கிராம மக்கள், ‘இதென்ன ஸ்ரீ ராம பாணமோ? ஸ்ரீ கிருஷ்ண ரதமோ!’ என ஆச்சர்யத்தில் கண்கள் கலங்க, ஆனந்தக் கூத்தாடி அந்த வாகனத்தை விழுந்து வணங்கினார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து நடந்து தேய்ந்து போயிருந்த தமிழர்களின் கால்களுக்கு ஓய்வுகொடுத்து, பேருந்துகளில் பயணிக்கவைத்த பெருமை டி.வி.சுந்தரம் ஐயங்காரையே சேரும். 

இன்றைக்கு 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கொண்ட மகா விருட்சமாய், ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கும் மேல் வியாபாரம் செய்யும் வர்த்தகக் குழுமமாய் பரந்து விரிந்திருக்கும் டிவிஎஸ் நிறுவனத்தைச் சேர்க்காமல் ஆசிய ஆட்டோமொபைல் வரலாற்றை எழுதமுடியாது.

1877 மார்ச் 22-ல் டி.வி. சுந்தரம் (சுருக்கமாக டிவிஎஸ்) பிறந்தார். திருச்சூரின் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டு ஆண்டுகளும், திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், கோயம்புத்தூர் போதனா பயிற்சிக் கல்லூரியிலும் படித்தார். அவரின் மனம் தொழில் தொடங்கவேண்டும் என்பதில் மையம் கொண்டு இருந்ததே தவிர, பெற்றோர் விரும்பியபடி படித்து வக்கீலாக வேண்டும் என்று நினைக்கவில்லை.

கல்லூரியில் இருந்து வெளியேறி, பிரம்பு, சவுக்கு போன்றவற்றை வர்த்தகர்களுக்கு மொத்த விற்பனை செய்யத் தொடங்கினார். பிறகு திருச்சியிலும் தஞ்சையிலும் ரயில்வே குமாஸ்தாவாக சில காலம் வேலை பார்த்தார். தந்தையாரின் மறைவுக்குப் பிறகு, தனது பங்காகக் கிடைத்த பணத்தை மூலதனமாகக் கொண்டு, தேக்கு மரங்களை இறக்குமதி செய்து மர வியாபாரம் செய்யலானார்.

25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து நான்கு ஆண்டுகள் மர வியாபாரம் செய்ததில் 25 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது. அந்த 50 ஆயிரம் ரூபாயை முதலீடாகக் கொண்டு, கான்பகதூர் காதர் நவாஸ்கான் என்ற பிரமுகருடன் கூட்டாக 1912-ம் ஆண்டு தஞ்சாவூர்- புதுக்கோட்டை வழித்தடங்களில் பேருந்து சேவையை நடத்தத் தொடங்கினார். அதுதான் ஆரம்பம்!

அந்தக்கால பேருந்துகளில் ஆட்களுக்குத் தகுந்தாற்போல் பேரம் பேசித்தான் கட்டணம் வசூல் செய்யப்பட்டுவந்தது. மேலும், ஆட்கள் நிறையும் வரை பேருந்தை நிறுத்திக் காத்திருப்பது, கால வரையறை இல்லாமல் நினைத்த நேரத்துக்கு பேருந்தை இயக்குவது என்று ஒரு ஒழுங்கில்லாமல் இருந்த முறையை மாற்றியமைத்து, இன்றைக்கு இருக்கும் ‘இவ்வளவு தூரத்துக்கு இவ்வளவு கட்டணம்’ என்னும் நடைமுறையையும், பயணிகள் கொடுக்கும் காசுக்கு ‘ரசீது வழங்குவது’ என்னும் நடைமுறையையும் கொண்டுவந்தவர் டிவிஎஸ்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பேருந்து எப்போது புறப்பட்டு, எப்போது போய்ச் சேரும் என்பதே தெரியாமல் இருந்ததை மாற்றி, ‘குறிப்பிட்ட நேரத்துக்கு இந்தப் பேருந்து புறப்படும்’ என்ற நடைமுறையை நாட்டுக்கே டிவிஎஸ்தான் அறிமுகப்படுத்தினார்.

வாகனங்களின் டயர்களும், பாகங்களும் விரைவில் தேய்ந்து போவதற்கும், எரிபொருள் அதிகமாகச் செலவாகி பொருளாதார இழப்பு ஏற்படுவதற்கும் குண்டும் குழியுமான சாலைகளே காரணம் என்பதை மிக தாமதமாகக் கண்டறிந்த அரசாங்கம், பிற்காலத்தில்தான் தரமான தார்ச் சாலையை அமைத்தது. இதனை அப்போதே உணர்ந்திருந்த டிவிஎஸ், பேருந்து செல்லும் சாலைகளைப் பராமரிக்கும் கான்ட்ராக்ட்டையும் தானே எடுத்துக் கொண்டார். இதன்மூலம் சாலைகளில் காணப்பட்ட குண்டு, குழிகள் விரைவில் மறைந்ததோடு பேருந்து டயர்களின் ஆயுட்காலமும் நீடித்தது.

சாலைகளில் கழன்று விழுந்து கிடக்கும் மாடு, குதிரைகளின் லாடங்களால் டயர் பஞ்சராகி பேருந்துகள் அடிக்கடி நின்றுபோயின. இதனைத் தடுக்க ஒரு காந்த வண்டியை டிவிஎஸ் அறிமுகப்படுத்தினார். ஏறத்தாழ நான்கு அடி நீளமுள்ள பெரிய காந்தம் பொருத்தப்பட்ட வண்டியை சாலையில் ஓட விட்டார். சாலையில் கிடந்த அனைத்து இரும்புகளும் காந்தத்தில் ஒட்டிக்கொண்டுவிட, டிவிஎஸ் பேருந்துகள் பஞ்சர் ஆகாமல் ஓடலாயின.

புதுக்கோட்டையில் பஸ் சர்வீஸ் நடத்தி வந்தபோதே, மேலைநாடுகளில் இருந்து மோட்டார் வாக னங்களையும், இயந்திரங்களின் உதிரிப்பா கங்களையும் சிறியஅளவில் இறக்குமதி செய்து மற்ற பேருந்து நிறுவனங்களுக்கு டிவிஎஸ் விற்பனை செய்துவந்தார். புதுக்கோட்டை பஸ் சர்வீஸ் ஒப்பந்த காலம் முடிவடைந்ததும் மதுரையில் சிறிய அளவில் ஒரு வியாபார நிறுவனத்தைத் தொடங்கினார். சைக்கிள்களையும், மோட்டார் வாகன உதிரி பாகங்களையும் விற்றுவந்த அந்த நிறுவனமே பலவிழுதுகள் பரப்பி விரிந்து நிற்கும் இன்றைய டிவிஎஸ் ஆலமரத்தின் விதையாகும்.

1929-ல் ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியின் வாகனங்களுக்கும், உதிரிப்பாகங்களுக்கும் டிவிஎஸ் நிறுவனம் நேரடி ஏஜென்ஸி உரிமை பெற்றது. டிவிஎஸ் நிறுவனத்தின் வரலாற்றில் புதியதொரு அத்தியாயம் ஆரம்பமானது.

முனிவருக்கே மணி சொன்ன டிவிஎஸ் பஸ்!

ஒருமுறை திருநெல்வேலி செல்லும் வழியில் தன் பரிவாரங்களுடன் புதுக்கோட்டையில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மகா பெரியவர். உறங்கச் செல்லும் முன் அதிகாலை மூன்றரை மணிக்குத் தன்னை எழுப்பிவிடுமாறு, சீடர் நாகராஜனிடம் சொல்லிச் சென்றார். முதல் மூன்று நாட்கள் கடிகாரத்தைப் பார்த்து சரியான நேரத்துக்கு ‘‘ஹர ஹர சங்கர...’’ என்று கோஷமிட்டு எழுப்பிய சீடர், நான்காம் நாள் மெய்மறந்து உறங்கிவிட்டார். ‘

‘ஹர ஹர சங்கர...’’ என்ற குரல் கேட்டு சீடர் திடுக்கிட்டு விழித்தால், எதிரே மகா பெரியவர் நிற்கிறார். ‘‘கொழந்தே! மணி சரியா மூணரை ஆறதுடாப்பா...’’ என்று சொல்ல, சீடருக்கு மிகவும் வெட்கமாகப்போய்விட்டதாம். சோதனையாக மறுநாளும் சீடர் உறங்கிவிட, அன்றும் பெரியவாளே அவரை எழுப்பிவிட்டாராம். ‘அதெப்படி எந்தக் கடிகாரமும் இல்லாமல், சரியாக அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்துவிடுகிறார்’ என்று சீடருக்கு எழுந்த சந்தேகத்தை பெரியவாளே தீர்த்து வைத்தாராம்.

‘‘முதல் நாள் நீ எழுப்பி விட்டபோது, மதுரைலேர்ந்து புதுக்கோட்டைக்கு வர்ற டிவிஎஸ் பஸ் நம்ம சத்திரத்தைக் கடந்து போறதைப் பார்த்தேன். ‘டிவிஎஸ் பஸ் ஒரு இடத்துக்கு வர்ற குறிப்பிட்ட டயத்தை வெச்சுண்டே, நம்ம கடிகாரத்தை கரெக்ட் பண்ணி டயம் வெச்சுக்கலாம்’னு சொல்லுவா. அது வாஸ்தவம்தான். சத்திரவாசலுக்கு அந்த பஸ் விடியக்காலம் சரியா மூணரை மணிக்கு வந்து தாண்டிப் போறது. இதை வெச்சு நாலாம் நாள்லேர்ந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்டவுடனேயே தானா எந்திருச்சுட்டேன்...’’ என்று ரகசியத்தை உடைத்தாராம் பெரியவாள். டிவிஎஸ் பேருந்துகளின் நேரம் தவறாமைக்கு இந்த ஒரு உதாரணம் போதாதா..!

இப்போது போலவே அப்போதும் கார்கள் தயாரிப்பில் ஜெனரல் மோட்டார்ஸ்தான் முன்னணியில் இருந்தது. 1929-ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களுக்கும், உதிரிப் பாகங்களுக்கும் நேரடி ஏஜென்ஸி உரிமை பெற்றதுதான் டிவிஎஸ் வரலாற்றின் மிகப்பெரிய திருப்புமுனை!

முட்டைக்கோஸ் புதிதாக மார்க்கெட்டுக்கு வந்தபோது, அதன் சுவை எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதை யாருமே வாங்கவில்லையாம். காய்கறிக்கே இந்த நிலை என்றால், ஆயிரக்கணக்கான ரூபாய் விலைமதிப்புடைய காருக்கு..?
குதிரையிலும், மாட்டுவண்டியிலும் பவனி வந்து கொண்டு இருந்த ஜமீன்தார்களிடம் கார்களை விற்பனை செய்ய, டி.வி.சுந்தரம் ஐயங்காரின் குமாரர் துரைசாமி செய்த யோசனை ஆச்சர்யமானது.

புது காருடன் நேரடியாகச் செல்வந்தர் ஒருவரின் வீட்டுக்குப் போவாராம். டிரைவரையும் காரையும் அவர் வீட்டிலேயே விட்டுவிட்டு, அந்தச் செல்வந்தர் அதுவரை பயணித்து வந்த குதிரை வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி வந்துவிடுவாராம். மறுபடியும் ஒரு வாரம் கழித்து அவரது வீட்டுக்குச் செல்வாராம்.

இடைப்பட்ட நாட்களில் காரில் பயணித்து பயணித்து, அதன் சொகுசுக்கு அடிமையாகிவிட்டிருப்பார் அந்தச் செல்வந்தர். ஊராரையும் மற்ற ஜமீன்தார்களையும் வாய்பிளக்க வேடிக்கை பார்க்கவைக்கும் அந்த காரை, திருப்பித் தர மனம் இல்லாமல் தேவையான பணத்தைக் கொடுத்து, காரை வாங்கிவிடுவார் ஜமீன்தார். இப்படி மிக எளிதாக காரை விற்றுவிட்டு, வெற்றிகரமாக வீடு திரும்புவாராம் துரைசாமி.
குதிரை வண்டியை வாங்கிக்கொண்டு, காரை விற்ற அந்தத் திட்டமே, பழையதைக் கொடுத்து புதிய பொருட்களை வாங்கிச் செல்லும் ‘எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்’ திட்டங்களுக்கெல்லாம் முன்னோடி!

நானும் ஒரு தொழிலாளி!

ஆறேழு பேர் பணிபுரியும் மளிகைக் கடையிலேயே தொழிலாளர் பிரச்னை தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறது. அப்படியானால் பல்லாயிரம் பேர் பணிபுரியும் நிறுவனத்தில்?தினம் தினம் பிரச்னையாகத்தானே விடியும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு ‘தொழிலாளர் போராட்டம் என்று எதுவும் நடந்ததே இல்லை’ என்கிறார்கள் டிவிஎஸ் நிர்வாகிகள்.

தொழிலாளர்கள்தான் நிறுவனத்தை இயக்குகிறார்கள் என்பதை உணர்ந்த டிவிஎஸ், தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். அலுவலகத்தில் கேன்டீன் முறையை அறிமுகப்படுத்திய பெருமையும் டிவிஎஸ் நிறுவனத்துக்குத்தான் உண்டு. காலையில் இலை போட்டுப் பரிமாறப்படும் இட்லி - சாம்பாரை சாப்பிட்டுவிட்டுத்தான் தொழிலாளர்கள் வேலைக்கே செல்வார்களாம்.

பணியாளர்களின் பசியைத் தீர்த்தது மட்டுமல்லாமல் வசிக்கக் குடியிருப்புகள், குழந்தைகளின் கல்விக்குப் பள்ளிக்கூடம், சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனை என்று தொழிலாளர்களின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளும் டிவிஎஸ் நிறுவனத்தில் செய்து கொடுக்கப்பட்டதாலேயே, தாத்தா-அப்பா-பேரன்-கொள்ளுபேரன் என்று நான்கு தலைமுறையாகத் தொடர்ந்து இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிற பல குடும்பங்கள் உண்டு.

குளிர்சாதன அறைக்குள் இருந்துகொண்டு தொழிலாளர் பிரச்னையைப் புரிந்து கொள்ள முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்த டிவிஎஸ், தம் வாரிசுகள் அனைவரையும் தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்யுமாறு செய்தார். அந்த நடைமுறை இன்றுவரை தொடர்கிறது.

டிவிஎஸ் நிறுவனத்தில் இன்றைக்கு இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருக்கும் அனைவரும், காக்கி யூனிஃபார்முடனும் கிரீஸ் கறையுடனும் தொழிலாளிகளோடு தொழிலாளியாக வேலை செய்தவர்கள்! அதனால்தான் தங்கள் தொழிலாளர்களின் பிரச்னைகளை எளிதாகத் தீர்க்கவும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. டிவிஎஸ்-ஸில் ஐ.என்.டி.யு.சி எனும் ஒரே ஒரு தொழிற்சங்கம்தான் இருக்கிறது. தொழிற்சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றும் முன்னரே அவர்களை அழைத்துப் பேசி குறைபாடுகளைத் தீர்த்து வைப்பார்களாம்!
ஒரு வேலையைச் செய்யும் தொழிலாளர்களால்தான் அந்த வேலையை எளிதாகச் செய்து முடிப்பதற்கான தீர்வையும் சொல்ல முடியும் என்பதை உணர்ந்த டிவிஎஸ், தொழிலாளர்களை நிர்வாக யோசனைகளிலும் பங்கேற்க வைத்தார். கம்பெனியில் ஓர் ‘ஆலோசனைப் பெட்டி’யை வைத்து, அதில் ஆலோசனைகளை எழுதிப்போடுமாறு கேட்டுக் கொண்டார்கள். வீண் செலவைக் குறைக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகளை, தொழிலாளர்கள் எழுதிப் போட்டனர். சிறந்த யோசனைகளைச் சொன்னவர்களுக்குப் பரிசுகளும் உண்டு.

‘இது நம் நிறுவனம். இதை முன்னேற்ற வேண்டியது நம் கடமை’ என்னும் உணர்வு முதலாளிக்கு ஏற்படுவது வியப்பானதல்ல. ஆனால், அது கீழ்மட்டத்தில் இருக்கும் தொழிலாளிக்கும் ஏற்பட வேண்டும். அதில்தான் அந்த நிறுவனத்தின் வெற்றியே அடங்கியிருக்கிறது. அந்த எண்ணத்தை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தியதுதான் டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு அடித்தளம்!
ஐடியாவுக்குப் பரிசு!

‘‘தொழிலாளர்கள் ஸ்க்ரு டிரைவர், ஸ்பேனர் போன்றவற்றை பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுக்கும்போது கையில் ஒட்டியிருக்கும் கிரீஸும், ஆயிலும் துணியில் பட்டு நீக்க முடியாத கறையாக மாறிவிடுகிறது. அதனால் சீருடையில் பாக்கெட்டே தேவையில்லை’’ என்று ஒரு தொழிலாளர் ஆலோசனை சொன்னாராம். பல மீட்டர் துணியையும், சலவைச் செலவையும் மிச்சமாக்கி, உடைகளின் தூய்மையையும் பாதுகாத்த அந்தத் தொழிலாளரின் யோசனைதான் இன்றளவும் டிவிஎஸ்-ஸிலும் மற்ற பெரும்பாலான கம்பெனிகளிலும் நடைமுறையில் இருக்கிறது.

எதுவும் முடியும்!

‘இது என் வேலை இல்லையே..!’ என்று சொல்லாமல், எந்த வேலையைக் கொடுத்தாலும் டிவிஎஸ் தொழிலாளர்கள் செய்வார்கள் என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். 1960-களில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் பெய்த மழையில், ஒருமாதம் செலவழித்துப் போடப்பட்டிருந்த, மிகப் பெரிய மாநாட்டுப் பந்தல் அப்படியே சரிந்து விழுந்துவிட்டது. மறுநாள் எப்படி மாநாட்டை நடத்துவது என்று தெரியாமல் ஏற்பாட்டாளர்கள் விழிக்க, டிவிஎஸ் குமாரர் கிருஷ்ணா உதவ முன்வந்தார். ஒரு மாதமாகப் போடப்பட்ட பந்தலை ஒரே இரவில் சரிசெய்து சாதனை படைத்தார்களாம் 
டிவிஎஸ் தொழிலாளர்கள்.

மேலும் சம்பவம் ஒன்று... மதுரை ஏர்போர்ட்டில் இறங்கிய விமானத்தின் முன் சக்கரம் உள்பக்கமாக அழுந்திக் கொள்ள, விமான நிலையத்தின் இன்ஜினீயர்கள் காலை 8 மணிமுதல்மதியம் 2 மணி வரை போராடிப்பார்த்தும் சிக்கலைத் தீர்க்க முடியவில்லையாம். இந்தத் தகவல் டிவிஎஸ் நிறுவனத்துக்கு வர, ஊழியர்கள் புறப்பட்டுப் போனார்களாம். ‘நாள்தோறும் விமானத்தோடு புழங்கும் இன்ஜினீயர்களாலேயே முடியவில்லை. இவர்களால் என்ன செய்ய முடியும்’ என்று விமான நிலையத்தில் வேலை பார்க்கும் சிலர் இவர்கள் காதுபடவே கருத்துச் சொல்லிஇருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இவர்களை முதலில் விமான நிலையத்தின் உள்ளேயே விட மறுத்து விட்டார்களாம். ‘இது வரை விமானத்தை அருகில் சென்று பார்த்ததே இல்லை. ரிப்பேர் செய்யும் சாக்கிலாவது அருகில் சென்று பார்த்து விட்டு வருகிறோமே’ என்று டிவிஎஸ் ஊழியர்கள் சாதுர்யமாகப் பேசி விமானத்துக்கு அருகே சென்று, தங்களை அழைத்த அதிகாரிகளைப் பார்த்திருக்கிறார்கள். அந்த அதிகாரி விமானத்தைக் காட்டி பிரச்னையை இவர்களிடம் சொன்னார். பல மணி நேரம் முயன்றும் விமான நிலைய இன்ஜினீயர்களாலேயே சரி செய்ய முடியாத வேலையை விமானிகளே வியக்கும் வண்ணம் பத்தே நிமிடத்தில் சரிசெய்து விட்டார்களாம் டிவிஎஸ் தொழிலாளர்கள். எப்படி?

டிவிஎஸ்-ஸின் தங்குதடையில்லாத சேவைக்கு உதாரணமாக விளங்கக்கூடிய நிகழ்ச்சி ஒன்று உண்டு. உலகப் போர் முடிந்த சமயத்தில் கடுமையான பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு நிலவியது. பொதுமக்களுக்கு ஒரு சொட்டு பெட்ரோல்கூட கிடைக்கவில்லை. இந்தச் சமயத்திலும் தனது பஸ் சர்வீஸை நிறுத்த விரும்பாத டிவிஎஸ், பேருந்துகளில் கரி இன்ஜினைப் பொருத்தி ஓட்டத் தொடங்கினார். இந்த இன்ஜினைத் தயார்படுத்தவே இரண்டு மணி நேரம் தேவையாம். கரியை எரிக்கும்போது வெளிப்படும் வெப்ப ஆவி சிலிண்டர்களில் சேகரிக்கப்பட்டு, அதன் மூலம் பேருந்து ஓட்டப்பட்டது. இதற்காகப் பேருந்து செல்லும் வழியில் ஆங்காங்கே கரி நிரப்பும் இடங்களும் நிறுவப்பட்டன!

சுந்தரம் அய்யங்கார் முற்போக்குச் சிந்தனை கொண்டவர். இளம்வயதில் கைம்பெண்ணான தன் மகள் தி. சு. சௌந்தரத்துக்கு மகாத்மா காந்தியின் ஆசியுடன் மறுமணம் செய்து வைத்தார். தி. சு. சௌந்தரம் இந்திய விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்திய அரசு தி. சு. சௌந்தரத்தின் அஞ்சல் தலையை வெளியிட்டு அவரை பெருமைப்படுத்தியது .

வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கிய இவர் கலைகளையும் ஆதரித்தார் . தான் ஓய்வு பெற்று வணிகத்தை தன் மகன்களிடம் ஒப்படைத்ததைக்கண்டு இராசகோபாலாச்சாரி இவரைப் பாராட்டினார். ஏப்ரல் 28, 1955 இல் அதிகாலையில் கொடைக்கானலில் உள்ள தன் வீட்டில் இறந்த போது இவரது வயது 78. இவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் வெண்கலமும் பளிங்கும் கொண்ட இவரின் மார்பளவு உருவச்சிலை மதுரையில் ஆகஸ்டு 7, 1957 இல்
அந்நாள் மத்திய வணிக அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது

குறையொன்றுமில்லை பாடல் பிறந்த கதை

குறையொன்றுமில்லை பாடல் பிறந்த கதை; 1925. நாடெங்கிலும் காந்தியின் தலைமையில் விடுதலைப் போராட்டம் புது எழுச்சி கொண்டிருந்த காலகட்டம்.  அந்நிய அரசின் நீதிமன்றங்களை அன்றைய வக்கீல்கள் முழுமையாகப் புறக்கணித்து வந்த காலம். தற்போதைய ஆந்திர மாநிலத்திலிருக்கும் சித்தூரிலிருந்த ஒரு காங்கிரஸ் மேலவை உறுப்பினரும் மூதறிஞர் ராஜாஜியின் நண்பருமான ஒரு வக்கீல் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அமரர் ராஜாஜி சித்தூர் செல்கிறார். காந்தியின் கட்டளையை மீறி ஒரு குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு 'தாழ்த்தப்பட்ட பஞ்சமனுக்கு' அப்பீலில் ஆஜராவதாக அவர் துணிந்து முடிவெடுத்திருந்தார். அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தினாலும் சரி என்ற எண்ணத்திற்கு அவர் வந்திருந்தார் என்பதும் கடைசி வரை அதை அவர் விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் அவரது மேன்மை. அந்த மனிதன் அப்படி என்ன தவறிழைத்துவிட்டான்? தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து விட்டதால் அவன் திருப்பதி கோவிலுக்குள் நுழைந்து இறைவனைப் பார்த்து வணங்க அனுமதியற்ற அவலமான காலகட்டம். அப்போதிருந்த நீதிமன்றம் அதை மீறும் 'பஞ்சமர்களை' சிறைக்கு அனுப்பிய காலம். அந்த மனிதன் பத்து வருடங்களாக திருப்பதி கோவிலுக்குள் செல்லத் துடிக்கிறான். அனுமதி இல்லை. ஒரு நாள் 'கோவிந்தா கோவிந்தா' கோஷத்துடன் பக்திமேலிட கோவிலுக்குள் நுழைய காவலர் கைது செய்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறான். அவனுக்காக அப்பீல் செய்த அந்த சித்தூர் வக்கீல் குற்ற வழக்குகளில் ஜாம்பவான் ஆகிய ராஜாஜிக்கு அந்த அப்பீலை நடாத்தித் தரும்படி வேண்டுகிறார். ராஜாஜிக்கு மிகப்பெரிய சவால். ஏழு வருடங்களாக காந்தியின் கட்டளைக்கிணங்கி தான் புறக்கணித்து வந்த நீதிமன்றப் பணியை இந்த ஒரு வழக்கிற்காக மீண்டும் ஏற்பதா? வேண்டாமா? கட்சியா? நியாயமா? அரிசனங்களின் ஆலயப்பிரவேசம் அவசியமானது என்ற அவரது கொளகைக்கு முன்னால் காந்தியின் கட்டளை தோற்கிறது. அந்த ஏழைக்காக சித்தூர் செசன்ஸ் கோர்ட்டில் அந்த மேல்முறையீட்டில் ஆஜராக ராஜாஜி முடிவெடுக்கிறார். ஆனால் அவரது வக்கீல் தொழிலுக்கான உரிமத்தை பல்லாயிரக் கணக்கான காங்கிரஸ் வக்கீல்கள் போல அவரும் பார் கவுன்சிலிடம் திரும்பத் தந்துவிட்டாரே? எப்படி ஆஜராவது என்கிறார் அந்த சித்தூர் வக்கீல். கவலை வேண்டாம் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் வக்கீலாக இல்லாமல் வக்காலத்து இல்லாமல் தனிமனிதனாக ஒரு குற்றவாளிக்கு ஆஜராக வழி உண்டு என்பதை சுட்டிக்காட்டி அவர் சித்தூர் சென்ற நாள் 22-12-1925. ஆங்கிலேய நீதிபதி அவருக்கு விதிகளின் படி அனுமதி அளிக்க மூதறிஞர் ராஜாஜி அவருக்கே உரித்தான சட்ட ஞானத்தோடு வக்கீல் உடையின்றி சிவில் உடையோடு அவ்வழக்கை நடத்தி அந்த மனிதனுக்கு விடுதலை வாங்கித் தருகிறார். அவனைத் தன்னோடு திருக்கோவிலுக்குள் அழைத்துச் செல்கிறார். தெய்வ தரிசனம் அவனுக்குப் பரவசத்தையும் இவருக்கு மகிழ்வையும் தருகிறது. அந்த உணர்வு மேலீட்டில் மூதறிஞர் எழுதிய பாடல்தான் ' குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா' கீர்த்தனை. பிற்பாடு தனக்கு மாப்பிள்ளை ஆகியவரும் காந்தியின் மகனுமான தேவதாஸ் காந்திக்கு திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திலிருந்து இந்த சம்பவத்தை விளக்கி ஒரு கடிதம் எழுதுகிறார். அது காந்தியாரின் பார்வைக்குச் செல்கிறது. ஒரு உன்னதமான காரியத்தைச் செய்த்தற்காக அந்த மகாத்மா இந்த உத்தமரைப் பாராட்டுகிறார். அக்கடிதங்களை சபர்மதி ஆசிரமத்தில் தான் பார்த்ததாக ஒரு முறை இரயில் பயணத்தில் நான் சந்தித்த ஒரு அன்பர் சொன்னார். இச்சம்பவத்தை நினைவு கூர்ந்து முதன்முதலாக ராஜாஜியின் நினைவாக தி இந்து நாளிதழில் 2002 ம் வருடம் டிசம்பர் 24ம் தேதி ராஜாஜியின் பேரன் கோபால் காந்தி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதை இத்துடன் லிங்க்கியிருக்கிறேன். சற்றே நினைத்துப்பாருங்கள். 1925 ல் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் யாருக்கும் தெரியாமல் போகிறது. பிற்பாடு 1967ல் கல்கி வார இதழ் ராஜாஜி எழுதிய இப்பாடலை முதல் தடவையாக பதிப்பித்தது. ஆனாலும் இப்பாடலை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது இசையரசி எம். எஸ். சுப்புலக்ஷ்மி தான். 1979ம் வருடம் HMV நிறுவனம் எம்.எஸ். பாடிய ஸ்ரீவேங்கடேச பஞ்சரத்னமாலா என்ற ஒலித்தட்டில் இப்பாடலை அவர் அற்புதமாகப் பாடி அருமையான அப்பாடலுக்கு மேலும் மெருகேற்றியிருந்தார். சிவரஞ்சனி, காப்பி மற்றும் சிந்துபைரவி ஆகிய மூன்று ராகங்களில் அமைந்த ராகமாலிகைப் பாடல் கேட்பவர்களை உன்மத்தம் அடையச் செய்ய வல்லது. பதிவுசெய்யப்பட்டாலும் சரித்திரம் மறந்த அந்த உன்னதமான சம்பவத்தையும் அந்த உத்தமரின் மேன்மையையும் தங்களின் மேலான பார்வைக்கு வைப்பதில் இந்த எளியவனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததால் எனக்கும் குறை ஒன்றும் இல்லை.

Courtesy P Lakshminarayanan

http://www.thehindu.com/thehindu/mag/2002/12/22/stories/2002122200220100.htm

புரந்தரதாசர் - நவகோடி நாராயண செட்டி - ஸ்ரீனிவாச நாயக்

புரந்தரதாசர் - நவகோடி நாராயண செட்டி - ஸ்ரீனிவாச நாயக்

ஒன்பது கோடி

கி.பி. 1480-ல் அவர் ஒன்பது கோடிகளுக்கு அதிபதி. சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவர் ஒன்பது கோடி சொத்துள்ள மிகப் பெரிய பணக்காரரின் மகன். கடைசியில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது கி.பி. 1560-ல் அவர் ஒரு ஓட்டாண்டி. நம்ப முடிகிறதா? கணக்குப் போட்டுப் பார்த்தால் இன்று பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாக அவர் குலம் வாழ்ந்திருக்கும். ஆனால் இன்று பணமில்லை. மங்காத புகழ் இருக்கி றது. இதெல்லாம் இறைவன் திரு விளையாட்டு. செல்வம் செல்வம் என்று செருக்குடன் வாழ்ந்த அவரைவிட்டு லட்சுமியானவள் "செல்வோம்... செல்வோம்...' என்று போய்விட்டாள். ஆனால் அத்தனை பணமும் போனபின்புதான் அவருக்கு ஞானம் பிறந்தது. கையில் ஒரு காசுகூட இல்லாத நிலையில்தான் அவர் மகாலட்சுமியை அழைத்தார். அதுவும் எப்படி? அற்புத மான ஸ்ரீராகத்தில் அழைத்தார். சிலர் அப்பாடலை மத்யமாவதி ராகத்திலும் பாடுவர். அந்தப் பாடலைப் பாடும்போதே கண்களில் நீர் பெருகும்; மனம் மகிழ்ச்சியில் பொங்கிடும்; நெஞ்சில் ஆனந்தம் தாண்டவமாடும்; மெய் சிலிர்க்கும். 

"பாக்யாத லக்ஷ்மி பாரம்மா- நம்மம்ம நீ சௌ
பாக்யாத லக்ஷ்மி பாரம்மா....'

மகாலட்சுமியை அவர் அழைக்கும் அழகே அழகு. 

"சலங்கை கட்டிய கால்களினால் மெதுவாக அடியெடுத்து வைத்து, அந்த இனிமையான சலங்கை ஒலியால், உன்னை தஞ்சமடைந்து பூஜை செய்யும் பக்தர்களுக்கு தயிரிலிருந்து வரும் நறுமணமான வெண்ணெயைப்போல் வருவாய் தாயே' என்று கெஞ்சுகிறார் அந்த மகான். 

அவருடைய இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக். 

அவர் வசித்த ஊரின் நாட்டாண்மையாகத் திகழ்ந்தார் அவர். மக்கள் அவரை செல்வத்தின் பொருட்டு நவகோடி நாராயணசெட்டி என்றும் அழைத்தார்கள். அவ்வளவு பெரிய தனவந்தரான அவர் ஒரு கருமி. எச்சில் கையால்கூட காக்கையை விரட்ட மாட்டார் என்பது அவருடைய விஷயத்தில் நிஜம். ஸ்ரீனிவாச நாயக்கிற்கு பதினெட்டு வயதாகும்போது திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சரஸ்வதி. அவள் இவருக்கு நேர் எதிரானவள். தான- தர்மம் என்றால் கொள்ளைப் பிரியம். கடவுள் பக்தி மிகுந்தவள். அவர் வாழ்ந்த ஊரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டுரங்கனாகக் காட்சியளித்தான். பெரிய கோவில். மக்கள் "பாண்டுரங்கா... பாண்டுரங்கா' என்று பக்திப் பரவசத்தில் நாள்தோறும், வீதி தோறும் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டே போவார்கள்.  ஆனால் ஸ்ரீனிவாச நாயக் கண்டுகொள்ளவே மாட்டார். பார்த்தான் பாண்டுரங்கன். ஒரு முதிய ஏழை அந்தணன் உருவில், ஏழு வயதுச் சிறுவனோடு, ஸ்ரீனிவாச நாயக்கின் கடைமுன் வந்து நின்றான் இறைவன். 

"ஐயா... தர்மப் பிரபுவே...''

ஸ்ரீனிவாச நாயக் அந்தப் பிராமணனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. விடுவானா இறைவன்?

"ஐயா... தர்மப் பிரபுவே... சுவாமி...''

"டேய்! யாருடா நீ?'' அதட்டினார் ஸ்ரீனிவாசன். 

"ஐயா... நான் ஓர் ஏழைப் பிராமணன். இவன் என்னுடைய ஒரே மகன். ஏழு வயதாகிறது. உபநயனம் செய்ய வேண்டும். நீங்கள் உதவி செய்தால் இவனுக்கு பூணூல் போடலாம்.... பிரபு... ஏதாவது கொஞ்சம் பணம் கொடுங்கள்.... சாமி...'' 

"போ... போ... வேறு எங்காவது போய் பிச்சை எடு. என்னிடம் பணமே இல்லை...'' விரட்டினார் ஸ்ரீனிவாச நாயக். எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் நாயக்கின் மனம் இளகவில்லை. ஆனால் பகவான் அவரை விடுவதாயில்லை.

தினந்தோறும் வந்து, நமக்கு படியளப் பவனே அவரிடம் பிச்சை கேட்டான். நாயக்கும் அலுக்காமல் விரட்டினார். 

ஒருநாள், "உங்களிடம் யாசகம் வாங் காமல் போகமாட்டேன் பிரபு...'' என்று சொல்லி, இறைவன் நாயக்கின் கடை வாசலிலேயே உட்கார்ந்து விட்டான்.

"இது ஏதடா வம்பாப் போச்சே...' என்று அலுத்துக்கொண்ட ஸ்ரீனிவாச நாயக், கல்லாப் பெட்டியிலிருந்து ஒரு செல்லாக் காசை எடுத்து அந்தணன் மேல் தூக்கி எறிந்தார். "இந்தா, இதை எடுத்துப் போ. இனிமேல் கடைப்பக்கம் வராதே...'' 

அந்தக் காசைப் பார்த்துவிட்டு, "பிரபு... இது தேய்ந்து போயிருக்கிறதே... எதற்கும் பிரயோஜனமில்லை. வேறு நல்ல காசு கொடுங்களேன்...'' என்றான் இறைவன். 

ஸ்ரீனிவாச நாயக் யோசித்தார்.

"நல்ல காசா? ஏதாவது பொருள் கொண்டு வந்து என் கடையில் அடமானம் வை... நல்ல காசு தருகிறேன்'' என்றார்.

அந்தணன் அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு நேராக ஸ்ரீனிவாச நாயக்கின் வீட்டிற்குச் சென்றான். 

அங்கே- வெள்ளிக் கிழமையாதலால் துளசி பூஜையை முடித்துவிட்டு ஸ்ரீனிவாச நாயக்கின் மனைவி சரஸ்வதி ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள்.

"பவதி... பிக்ஷாம் தேஹி...''

ஓடோடிச் சென்று வாசலில் பார்த்தாள். பார்த்ததும் காலில் விழுந்து கும்பிட்டாள்.

"என்ன வேண்டும் சுவாமி?''

"அம்மா... நான் ஓர் ஏழை. வயதாகி விட்டது. இவன் என் பையன். இவனுக்கு பூணூல் போட வேண்டும். கையில் பணமில்லை. ஒரு கஞ்சனைக் கேட்டேன். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் சல்லிக்காசுகூட தரமாட்டேன் என்று என்னை அடிக்காத குறையாகத் துரத்திவிட்டான். அம்மா... உன்னைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய். ஏதாவது உபகாரம் பண்ணம்மா...''

"பணம் நம்மிடம் கிடையாது. அப்படியே இருந்து, தர்மம் செய்தேன் என்று தெரிந்தால் புருஷன் அடித்தே கொன்றுவிடுவான். இவருக்கு நாம் எப்படி உதவுவது?' என்று யோசித்த சரஸ்வதி முடிவில் தன்னுடைய பரிதாபமான நிலையை விளக்கினாள்.

"அட... நீ என்னம்மா... புருஷன் உனக்குக் கொடுத்ததை தர்மம் செய்தால்தானே ஆபத்து? திருமணத்தின்போது உன் பெற்றோர் போட்ட நகைகள் உன்னுடையதுதானே? அதைக் கொடுத்தால் அவர் என்ன செய்ய முடியும்?'' என்று அவளை உசுப்பேற்றினான் பிராமணன்.

"அட... உண்மைதானே? நம் வீட்டில் ஏராளமான நகைகளைப் போட்டார்களே எனக்கு? அவை அத்தனையும் என்னுடையவை தானே... அதில் ஒன்றை தர்மம் செய்தால் என்ன?' சட்டென்று தன்னுடைய வைர மூக்குத்தியைக் கழட்டி அந்த பிராமணனிடம் கொடுத்து விட்டாள் சரஸ்வதி. 

அவளை மனதார வாழ்த்தி விட்டு, அந்தச் சிறுவனுடன் நேரே ஸ்ரீனிவாச நாயக்கின் அடகுக் கடைக்கே வந்தான் அந்த பிராமணன்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கோ, மறுபடியும் தொந்தரவு ஆரம்பித்து விட்டதோ என்று தோன்றியது.

"இந்தாரும். இந்த மூக்குத்தியை எடுத்துக் கொண்டு ஏதாவது பணம் கொடும்'' என்று மிரட்டினான் பிராமணன்.

கையில் மூக்குத்தியை வாங்கி பரீட்சித்துப் பார்த்து, "இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே..' என்று யோசித்தார் நாயக்.

சிறிது நேரம் கழித்து, "ஓய் பிராமணரே... இந்த மூக்குத்தி இங்கேயே இருக்கட்டும். இப்போது என்னிடம் காசு இல்லை. நாளை வந்து பணம் வாங்கிக்கொள்...'' என்றார்.

அதை ஒப்புக்கொண்ட அந்தணன் போய்விட்டான்.

உடனே ஸ்ரீனிவாச நாயக் தன் கடையைப் பூட்டிவிட்டு நேரே வீட்டிற்குப் போனார்.

மனைவியைப் பார்த்தபோது அவள் முகத்தில் மூக்குத்தியைக் காணவில்லை.

"சரஸ்வதி... மூக்குத்தி எங்கே? இன்று வெள்ளிக்கிழமை. முகம் மூளியாய் இருக்கலாமா? போய் மூக்குத்தி போட்டுக் கொண்டுவா...''

சரஸ்வதி வெலவெலத்துப் போனாள். "ஐயய்யோ... இப்போது என்ன செய்வது? அந்தப் பிராமணனுக்கு தானம் கொடுத்தேன் என்றால் கொன்று விடுவாரே?' 

கடைசியில் சரஸ்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். "இந்தத் துஷ்டனிடம் மூர்க்கத்தனமாக அடிபடு வதைவிட சாவதேமேல்...' என்ற முடிவோடு, ஒரு பாத்திரத்தில் விஷத்தைக் கலந்து கையில் வைத்துக்கொண்டு துளசி மாடத்தை வலம் வந்தாள்.  "தாயே துளசி... நான் உன்னிடம் வந்து விடுகிறேனம்மா'' என்று சொல்லி விஷத்தைக் குடிக்க முற்படுகையில், விஷப் பாத்திரத்தில் ஏதோ விழும் ஓசை கேட்டது. சரஸ்வதி உள்ளே கைவிட்டுப் பார்த்த போது அவளின் மூக்குத்தி இருந்தது. அவளை ஆனந்தமும், வியப்பும் அணைத்துக் கொண்டது. "என்னைக் காப்பாற்றிவிட்டாய் தாயே' என்று கண்களில் நீர் பெருக விழுந்து கும்பிட்டாள்... பிறகு, கணவனிடம் ஓடோடிச் சென்று, "இந்தாருங்கள் மூக்குத்தி...'' என்று கொடுத்தாள்.  ஸ்ரீனிவாச நாயக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. மூக்குத்தியை எடுத்துக்கொண்டு பித்துப் பிடித்தவர்போல மீண்டும் தனது அடகுக் கடைக் குச் சென்றார். கல்லாப் பெட்டியைத் திறந்து, உள்ளே பத்திரமாக வைத்திருந்த மூக்குத்தியைத் தேடினார். அங்கே அது இல்லை. கடை முழுவதும் தேடினார். மூக்குத்தி கிடைக்கவில்லை. நாளை அந்த பிராமணன் வந்து, "எனக்கு பணம் வேண்டாம்... என்னுடைய நகையைக் கொடுங்கள்...' என்று கேட்டால் என்ன செய்வது?  மனைவியினுடைய மூக்குத்தியையா அவனுக்குக் கொடுப்பது? பிரமை பிடித்தது அவனுக்கு. கூடவே பயமும் வந்தது.

மறுநாள் காலை! 

கடை திறந்த சில வினாடிகளிலேயே அந்தக் கிழவன் சிறுவனோடு வந்து விட்டான். "ஐயா... பிரபுவே.. நான் கொடுத்த நகைக்கு பணம் தருவதாகச் சொன்னீர்களே. இன்றும் பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. என்னுடைய நகையைக் கொடுங்கள். வேறு கடையில் அடமானம் வைத்துக் கொள்கிறேன்...'' என்றான். ஸ்ரீனிவாச நாயக்கின் நிலை பரிதாபமானது. செருக்குடன் வாழ்ந்தவர் கிழவனிடம் கெஞ்சினார். "ஐயா... மன்னித்து விடுங்கள். வெளியிலிருந்து கொஞ்சம் பணம் வரவேண்டியிருக்கிறது. வந்தவுடன் தருகிறேன். முடிந்தால் மாலை வாருங்களேன். கண்டிப்பாக பணம் தருகிறேன்.''

"சரி... சரி... சாயங்காலமும் என்னை ஏமாற்றி விடாதே. நான் வருவேன்...''

கிழவன் போனபின்பு, தன் கடையில் பணிபுரியும் ஒரு வேலையாளை அனுப்பி, அந்தக் கிழவன் எங்கே போகிறான் என்று கண்காணிக்கச் சொன்னார். 

அந்தக் கிழவனைப் பின்தொடர்ந்து சென்ற வேலையாள் சிறிது நேரம் கழித்து பதை பதைப்புடன் கடைக்கு ஓடி வந்தான்.

"என்னடா... ஏன் இப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி ஓடி வருகிறாய்? கிழவன் உன்னை அடையாளம் தெரிந்துகொண்டு மிரட்டினானா?''

"சுவாமி... என்னை மன்னித்துவிடுங்கள்... கிழவர் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி, பாண்டுரங்கன் கோவிலுக்குச் சென்றார். நேரே கர்ப்பக் கிரகத்துக்குள் புகுந்தார்... பின்னர் மறைந்து விட்டார்...''

ஸ்ரீனிவாச நாயக் திடுக்கிட்டார். என்ன இது? கடைக்கு வந்த முதியவர் யார்? என்ன அதிசயம் இது.! 

கடையைப் பூட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவளும் மூக்குத்தியை அந்தக் கிழவருக்கு தானம் தந்ததையும், அவர் வாழ்த்தி விட்டுப் போனதையும் சொன்னாள். ஸ்ரீனிவாச நாயக்கிற்கு புரிந்துவிட்டது. கடவுளே தன்னை பரீட்சித்து விட்டதை உணர்ந்தார். அப்போது ஓர் அசரீரி பூஜை அறையிலிருந்து கேட்டது. 

"இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு தான தருமம் செய்யாமல் வாழ்கிறாயே? உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்? போ... உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு புண்ணியம் தேடிக் கொள்.  இனி உன் பெயர் ஸ்ரீனிவாச நாயக் இல்லை. இந்த ஊரின் பெயரான புரந்தரகட என்கிற பெயரால் இனி உன் பெயர் புரந்தரதாசன். பகவானைப் பாடு. நீ நாரதருடைய அம்சம். ஸ்ரீ கிருஷ்ண தேவராயருடைய குல குருவான ஸ்ரீ வியாசராயரை தஞ்சமடைவாயாக. அவர் உனக்கு குரு உபதேசம் செய்வார்....' 

புரந்தரதாசன் ஸ்ரீனிவாச நாயக் தன்னுடைய அனைத்து சொத்துகளையும் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்தார்.  ஒரு நொடியில் ஒன்பது கோடி ரூபாய் போயிற்று. ஓட்டாண்டியானார். தன் மனைவி, மக்களோடு இறைவன் நாமங்களைப் பாடியவாறே ஹம்பி சென்று ஸ்ரீ வியாசராயரை சரணடைந்தார்.  அவர் ஸ்ரீநிவாச நாயக்கின் பிறப் பின் ரகசியத்தைச் சொல்லி அவருக்கு குரு உபதேசம் செய்தார்.  கால்நடையாகவே பாரத தேசத்தை மூன்று முறை வலம் வந்தார் புரந்தரதாசர். சுமார் நான்கு லட்சம் பாடல்களை இறைவன்மீது பாடினார்.

 நம்முடைய திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு, சிறுவயதில் அவருடைய அன்னை புரந்தரதாசரின் பதங்களையே சொல்லி க்கொடுத்தார். 

ஸ்வர வரிசை என்று சொல்லப்படுகிற "ஸ, ரி, க, ம, ப, த, நீ..' என்கிற ஆரோகண அவரோகணங்களை சங்கீத உலகிற்குத் தந்த பிதாமகர் புரந்தரதாசரே. 

அவருடைய பதங்கள் இன்றும் நம் நாட்டுக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன. 

காலஞ்சென்ற திருமதி எம்.எல். வசந்தகுமாரி அவர்கள் தமிழ் நாட்டில் புரந்தரதாசரின் பதங்களைப் பாடி பக்தியை ஊட்டினார். 

எம்.எஸ்.ஸின் "ஜகதோ தாரணா'வும் கேட்க கேட்க பக்தியை நம் மனத் தில் விதைப்பவை. 

அப்படிப்பட்ட மகான் புரந்தரதாசர் கி.பி. 1584-ல் இறைவனோடு இரண்டறக் கலந்தார்.

Works of Shri Adi Shankaracharya

Works of Shri Adi Shankaracharya

A list of all the works by Shri Adi Shankaracharya is given below. Even today many scholars wonder how was it possible for Acharya to write so much in a very short life span of 32 years. It depicts that he was the greatest scholar and a man on mission to teach & establish the philosophy of Advaita Vedanta. Though majority of his works concentrate on Advaita, he equally pitches on bhakti since he believed that bhakti was a very essential step for Chitta Shuddhi without which Self-realization was not possible. Hence he composed verses and hymns in praise of every lord, majority of which were concentrated on Vishnu, Shiva and Shakthi. He wanted the people to worship the lord in any form of their wish, the results of which must finally purify their mind and make it fit for self realization. From his life history it is evident that he was blessed by Lord Narasimha, Goddess Saraswati and Lord Vishvanatha. Hence one can find a true Vasihnava, Shaiva and Shaakta in him. The most highlighting factor is the baashya for Hastamalakeeyam written by Shri Shankaracharya since rarely a Guru has written baashya for the work of his own disciple. Below is the list of works by Shri Adi Shankaracharya which are widely accepted to be his works.

Bhashya Granthas
1. Brahma Sutras
2. Isavasya Upanishad
3. Kena Upanishad
4. Katha Upanishad
5. Prasna Upanishad
6. Mundaka Upanishad
7. Mandukya Upanishad
8. Mandukya Karida
9. Aitareya Upanishad
10. Taittireeya Upanishad
11. Chhandogya Upanishad
12. Brihad Aranyaka Upanishad
13. Sree Nrisimha Taapaneeya Upanishad
14. Sreemad Bhagawad Geeta
15. Sree Vishnu Sahasranama
16. Sanat Sujateeyam
17. Lalita Tri-satee
18. Hastaamalakeeyam

Prakarana Granthas
19. Viveka Chudamani
20. Aparokshanubhooti
21. Upadesa Sahasri
22. Vaakya Vritti
23. Swaatma Niroopanam
24. Atma-bodha
25. Sarva Vedanta Sara Samgraha
26. Prabodha Sudhakaram
27. Swaatma Prakasika
28. Advaita anubhooti
29. Brahma anuchintanam
30. Prashnouttara Ratnamaalika
31. Sadachara anusandhanam
32. Yaga Taravali
33. Anatmasree Vigarhanam
34. Swaroopa anusandhanam
35. Pancheekaranam
36. Tattwa bodha
37. Prouda anubhooti
38. Brahma Jnanavali
39. Laghu Vakyavritti
40. Bhaja Govindam
41. Prapancha Saaram

Hymns and Meditation Verses
42. Sri Ganesa Pancharatnam
43. Ganesa Bhujangam
44. Subrahmanya Bhujangam
45. Siva Bhujangam
46. Devi Bhujangam
47. Bhavani Bhujangam
48. Sree Rama Bhujangam
49. Vishnu Bhujangam
50. Sarada Bhujangam
51. Sivananda Lahari
52. Soundarya Lahari
53. Ananda Lahari
54. Sivapaadaadi kesaanta varnana
55. Siva kesaadi padaanta varnana
56. Sree Vishnu-paadaadi-kesanta
57. Uma maheswara Stotram
58. Tripurasundari Vedapada Stotram
59. Tripurasundari Manasapooja
60. Tripurasundari Ashtakam
61. Devi shashti upachara-pooja
62. Mantra matruka Pushpamaala
63. Kanakadhara Stotram
64. Annapoorna Stotram
65. Ardhanareshwara Stotram
66. Bhramanaamba Ashtakam
67. Meenakshi Stotram
68. Meenakshi Pancharatnam
69. Gouri Dasakam
70. Navaratna Malika
71. Kalyana Vrishtistavam
72. Lalitha Pancharatnam
73. Maaya Panchakam
74. Suvarna Mala Stuti
75. Dasa Sloki
76. Veda Sara Siva Stotram
77. Siva Panchaakshara Stotram
78. Sivaaparadha Kshamapana
79. Dakshinamoorthy Ashtakam
80. Dakshinamoorthy Varnamala
81. Mrutyunjaya Manasa Pooja Stotram
82. Siva Namavali Ashtakam
83. Kaala Bhairava Ashtakam
84. Shatpadee Stotram
85. Siva Panchakshara Nakshatra Mala
86. Dwadasa Ling Stotram
87. Kasi Panchakam
88. Hanumat Pancharatnam
89. Lakshmi-Nrisimha Pancharatnam
90. Lakshmi-Nrisimha Karunarasa Stotram
91. Panduranga Ashtakam
92. Achyuta Ashtakam
93. Sree Krishna Ashtakam
94. Hari Stuti
95. Govinda Ashtakam
96. Bhagavat Manasa Pooja
97. Praata Smarana Stotram
98. Jagannatha Ashtakam
99. Guruvashtakam
100. Narmada Ashtakam
101. Yamuna Ashtakam
102. Ganga Ashtakam
103. Manikarnika Ashtakam
104. Nirguna Manasa Pooja
105. Eka Sloki
106. Yati Panchakam
107. Jeevan Mukta Ananda Lahari
108. Dhanya Ashtakam
109. Upadesa (Sadhna) Panchakam
110. Sata Sloki
111. Maneesha Panchakam
112. Advaita Pancharatnam
113. Nirvana Shatakam
114. Devyaparadhakshamapana Stotram

Jaya Jaya Sankara! Hara Hara Sankara!

Hari Om.

பள்ளியறை பூஜையின் மகத்துவங்களும்,அதன் பெருமைகளும்

பள்ளியறை பூஜையின் மகத்துவங்களும்,அதன் பெருமைகளும்

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என்று அனைத்திலும் ஊடுருவி நிற்பது சதாசிவம் என்ற அருணாச்சலேஸ்வரரே!

20,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் சிவலிங்க வழிபாடு இருந்து வந்தது;தற்போது நமது பாரத நாடு,ஸ்ரீலங்கா,மலேஷியா,சிங்கப்பூர்,நேபாளம்,பாகிஸ்தான் மற்றும் மியான்மர் நாடுகளில் மட்டும் வழக்கத்தில் இருக்கின்றது;தாய்லாந்து,வியட்நாம்,கொரியாவில் வேறு பெயர்களில் சிவலிங்க வழிபாடு இருந்து வருகின்றது;

நமது தமிழ்நாட்டில் இருக்கும் 38,000 பழமையான ஆலயங்களில் 27,000 சிவாலயங்கள் ஆகும்;200 ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளியறை பூஜை அனைத்து ஊர்களிலும்,அனைத்து ஆலயங்களிலும் நடைமுறையில் இருந்து வந்தது;தற்போது மிகவும் அருகிக் கொண்டிருக்கின்றது;

தமிழ்நாட்டில் எந்த ஊர்களில் எல்லாம் பள்ளியறை பூஜை நடைபெறவில்லையோ அந்த ஊர்களில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தம்பதிகள் பெருமளவு குறைந்துவிட்டார்கள்;

சேக்கிழார் மன்றம்,உழவாரப் பணி மன்றங்கள்,திருநாவுக்கரசர் அடியார்கள்,அப்பர் சங்கம்,சுந்தரர் திருப்பணிக் குழு என்ற பெயர்களில் பலவிதமான சிவனடியார்கள் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றார்கள்;அவரவர் ஊர்களில் இருக்கும் சிவாலயங்களில் பள்ளியறை பூஜையைத் துவங்கிட முயற்சி செய்வது அவசரம்;அவசியம்;

பல சிவாலயங்களில் பள்ளியறையே இல்லை;அதை உடனடியாக கட்டிட முயற்சிப்பது அவசியம்;பள்ளியறைப் பூஜைக்கு சிவபாத பூஜை என்று ஒரு பெயர் உண்டு;

பள்ளியறை பூஜை செய்யும் முறை:

இரவுக் கால பூஜை சிவாலயத்தில் நிறைவு ஆனப் பின்னர்,ஈசனுடைய திருப்பாதத்திற்கு அரிய அலங்காரம் செய்ய வேண்டும்;அந்த அலங்காரம் செய்த திருப்பாதத்தை பல்லக்கில் வைத்து கோவிலுக்குள் வலம் வரவேண்டும்;அப்படி வலம் வரும் போது,நாதஸ்வரம்,சங்கு,உடுக்கை,பேரிகை,துந்துபி,மத்தளம் மற்றும் திருக்கையிலாய வாத்தியம் என்று அழைக்கப்படும் பஞ்சவாத்தியங்கள் இசைக்க வேண்டும்;இவைகளை யார் ஒருவர் சம்பளம் வாங்காமல் ஒரு பிறவி முழுவதும் இசைக்கின்றார்களோ,அவர்களே சிவலோகம் என்று அழைக்கப்படும் திருக்கையிலாயத்தில் இசைக்கும் கணங்களாக பொறுப்பேற்கின்றார்கள்;

ஒவ்வொரு தினமும் ஒரு சில நல்ல செயல்களையாவது செய்தோம் என்ற மன நிறைவு உடன் காலதேவனாகிய மஹாகால பைரவப் பெருமானுக்கு நாம் செய்யும் முறையான வழிபாட்டு தின நிறைவுதான் இந்த பள்ளியறை பூஜை!

பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் ஈசன் வலம் வரும் போது,சிவபுராணம்,பதிகங்கள் பாடி வரவேண்டும்;இதைத் தரிசித்தாலே வளமான வாழ்க்கையை நாம் அமைக்கின்றோம் என்று அர்த்தம்;

பள்ளியறை பூஜைக்கு பல்லக்கு தூக்கி ஈசனைச் சுமந்து வரும் பாக்கியம் எவருக்குக் கிட்டுகின்றதோ,அவர்கள் மறுபிறவியில் பொறியியல் வல்லுநர்களாகவும்,பல மாடிக்கட்டிடங்களுக்குச் சொந்தக் காரர்களாகவும்,பல ஆயிரம்கோடி ரூபாய்களுக்கு அதிபதியாகவும் மாறுவார்கள்;

பள்ளியறை பூஜைக்கு பூக்கள்,பூச்சரங்கள்,நிவேதனம் செய்து தருபவர்கள் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கக் காரணமாக இருக்கும்;

பள்ளியறை பூஜைக்கு பசும்பால் தருபவர்களுக்கு அருமையான வாரிசுகள் இப்பிறவியிலேயே கிட்டும்;

பள்ளியறை பூஜைக்கு எண்ணெய்,நெய்,மின் விளக்கு தானம் செய்பவர்களுக்கு பல ஆயிரக் கணக்கானவர்களுக்கு கல்வி தரும் பாக்கியத்தை அடுத்த பிறவியில் பெறுவார்கள்;

திங்கட்கிழமை அன்று பள்ளியறை பூஜைக்குரிய பொருட்களை தானம் செய்து,அதில் கலந்து கொள்பவர்கள் அதன் பிறகு தமது வாழ்க்கையில் மகத்தான திட்டங்களை தங்கு தடையின்றி செயல்படுத்தி வெற்றி காண்பார்கள்;

ஆயில்யம்,கேட்டை,மூலம்,பூராடம் நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்கு மிகவும் சிரமப்பட்டே வாழ்க்கைத் துணை அமையும்;எனவே,இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு வருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்;ஆயில்யம் நட்சத்திரமும்,செவ்வாய்க்கிழமையும் வரும் நாளன்று தமது வருமானத்தில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை அன்பளிப்பாக தந்து,அவசியம் கலந்து கொள்ள வேண்டும்;

அரசு மற்றும் தனியார்த் துறையில் பதவி உயர்வுக்குக் காத்திருப்பவர்கள் புதன் கிழமையன்று பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதோடு,கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்;

அனைத்துவிதமான சித்திகளும் கிடைக்க பலர் பல பிறவிகளாக முயற்சி செய்து கொண்டே இருக்கின்றார்கள்;அவர்கள் ஒருவருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்;மேலும் அனுஷம் நட்சத்திரமும் வியாழக்கிழமையும் வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை தம்மால் முடிந்த அளவுக்கு வாங்கித்தரவேண்டும்;கலந்து கொண்டு மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்;

கணவனுடைய நோய் பல காலமாக இருந்தால் அது தீர,அவருடைய மனைவியானவர், வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையை சிறப்பிக்க தம்மால் ஆன முயற்சியில் ஈடுபடவேண்டும்;

அற்புதமான வாரிசு மகனாகவோ அல்லது மகளாகவோ பெற விரும்பினால் சனிக்கிழமையன்று பள்ளியறை பூஜையில் கலந்து கொள்வதோடு,அதற்குத் தேவையான பொருட்களை வாங்கி அன்பளிப்பாகத் தரவேண்டும்;

பிரிந்த வாழ்க்கைத் துணை சேரவும்,காணாமல் போய் பல ஆண்டுகள் என்ன ஆனார்கள் என்பதை அறியவும்,அறிந்த பின்னர் திரும்பி வரவும் மூன்றாண்டுகள் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்;அசுபதியும் ஞாயிற்றுக்கிழமையும் வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பூக்கள்,பால்,நைவேத்தியம் போன்றவைகளை வாங்கித் தரவேண்டும்;(ஒரு போதும் பாக்கெட் பால் வாங்கித் தரக் கூடாது என்பதை நினைவிற் கொள்க)

பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கட்டித் தருபவர்கள் மறுபிறவியில் அதிகமான சம்பளம் தரும் வேலையில் சேருவர்;அவர்களது மகனும்,மகளும் மற்றும் பேரன் பேத்திகள் அதிக சம்பளம் தரும் வேலையில் இருப்பார்கள்;குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் வரை இப்படிச் செய்தால் மட்டுமே இப்படிப்பட்ட பலன் கிட்டும்;

பள்ளியறை பூஜைக்கு பால்,நைவேத்தியங்கள் செய்து கொடுப்பவர்களும்,பள்ளியறை பூஜை நிறைவடைந்த பின்னர்,ஏழைகளுக்கு தானமாக நைவேத்தியத்தைத் தருபவர்களுக்கு ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த குழந்தைகள் இப்பிறவியிலும்,மறுபிறவியிலும் பிறப்பார்கள்;

பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டு,அதன் முடிவில் பசுவுக்கு பழங்கள் கொடுத்துக் கொண்டு வந்தால்,சுகப்பிரசவம் ஏற்படும்;நைவேத்தியப் பாலை பலருக்கும் தந்தால் அவர்களுக்கு வலியில்லாத பிரசவம் உண்டாகும்;குழந்தை பிறக்கும் தருணத்தில் இறை சிந்தனை உண்டாகும்;இப்படிப்பட்ட சிந்தனை உண்டானால்,அவர்களுக்கு பிரசவ வைராக்கியம் உருவாகுவற்குப் பதிலாக முக்தி வைராக்கியம் உண்டாகும்;

பள்ளியறை பூஜையிலும்,அதன் நிறைவுப்பகுதியிலும் அன்னதானம் செய்பவர்கள் தொழிலில் அமோக வளர்ச்சியை அடைவார்கள்;பல மடங்கு லாபம் அவர்களைத் தேடி வரும்;

பள்ளியறை பூஜைக்கு எண்ணெய்,நெய் தொடர்ந்து தருபவர்களுக்கு முதுமைக்காலத்தில் கண் சார்ந்த வியாதிகள் ஒருபோதும் வராது.

"காமாக்ஷி" - பொருள் விளக்கம் - Courtesy SRS Mani

"காமாக்ஷி". -பொருள்  விளக்கம் .

1) காமனுக்கு கண்களாலே உயிர்பிக்ஷை அளித்து ரதியின் மாங்கலயத்தை ரக்ஷித்ததால் இவள் "காமாக்ஷி".

2) நமஸ்கரிப்போரின் காமங்களை ( விருப்பம்) தனது பார்வையாலேயே பூரணம் செய்விப்பதால் இவள் "காமாக்ஷி"

3)கா -- காலம், மா -- மாயை காலத்தையும் மாயையையும் க்ஷீணமடையச்(அழியச்) செய்வதால் இவள் "காமாக்ஷி". காலத்தையும் மாயையையும் கடந்த மஹாத்ரிபுரஸுந்தரி என்பது பொருள்.

4) கா -- ஸரஸ்வதி, மா -- லக்ஷ்மீ லக்ஷ்மியையும் ஸரஸ்வதியையும் நேத்ரங்களாய் உடையதால் இவள் "காமாக்ஷி"

5) காமன் -- காமேச்வரனான ஏகாம்ரநாதன் ஏகாம்ரநாதனின் நேத்ரமாக விளங்குவதால் இவள் "காமாக்ஷி"

6)காம என்பதற்கு கடபயாதி ஸங்க்யா ரீதியாக அர்த்தம் ஐம்பத்து ஒன்று. ஐம்பத்தியோரு அக்ஷரங்களையும் கண்களாக கொண்டதால் இவள் "காமாக்ஷி"

7)கா -- ஸரஸ்வதீ, மா -- மலைமகள், க்ஷீ -- க்ஷீரஸாகரகன்யையான லக்ஷ்மீ. தான் ஒருவளே லக்ஷ்மீ, ஸரஸ்வதீ, பார்வதியாக விளங்குவதால் இவள் "காமாக்ஷீ"

8) கா -- ஒன்று, மா -- பதினைந்து, ஷோடஷீ மஹாமந்த்ரத்தை தனது கண்களாய் தரிப்பதால் இவள் "காமாக்ஷி"

9) கா -- ஒன்று, மா -- ஐந்து, க்ஷீ -- ஆறு, ஓரே வஸ்துவான லலிதாம்பாளே
தனது பஞ்ச ரூபங்களான "த்ரிபுரா", "ராஜராஜேச்வரீ", மஹாகாமேசவல்லபா", "காமாக்ஷீ", "காமகோடி" என ஐந்து வடிவங்களிலும்( ஒவ்வொரு வடிவத்திற்கும் தனித்தனி ஆவரண மந்த்ரங்கள் உண்டு), மூன்று சக்தி பேதங்கள், இரண்டு சிவ பேதங்கள், ஒரு விஷ்ணு பேதம் என ஆறு வடிவங்களிலும் உறைவதால் இவள் "காமாக்ஷி".

10)தான் ஒருவளே பஞ்சகோசாதீதையாகவும், ஷட்பாவரஹிதையாகவும் ஜ்வலிப்பதால் இவள் "காமாக்ஷீ".

11) தான் ஒருவளே "பஞ்சபஞ்சிகா" வடிவினளாகவும், ஷடாம்ணாய தேவதா ரூபமாகவும் ஜ்வலிப்பதால் இவள் "காமாக்ஷி".

12) தான் ஒருவளே பஞ்சபூத மயமான இந்த சரீரத்தில் ஷட்சக்ர யோகினி வடிவாக ஜ்வலிப்பதால் இவள் "காமாக்ஷீ"

13)தான் ஒருவளே பஞ்சப்ரஹ்ம மஹாமஞ்சத்தில் ஷடன்வயீ சாம்பவீ வித்யையாக ஜ்வலிப்பதால் இவள் "காமாக்ஷி".

14) தான் ஒருவளே பஞ்சமுக மஹாசம்புவால் அர்ச்சிக்கப்பட்ட "துரீய வித்யையாகவும்" ஆறுமுக ஸுப்ரமண்யனால் பூஜிக்கப்பட்ட ஸ்கந்தவித்யாவாகவும் இருப்பதால் இவள் "காமாக்ஷி".

15) தான் ஒருவளே பஞ்சாயதன கணபதி, அம்பிகா,சூர்ய, விஷ்ணு,சிவ வடிவான பஞ்சாயதன ரூபிணியாகவும், சைவ, வைஷ்ணவ, சாக்த, கௌமார, காணாபத்ய, ஸௌர ஷ்டதர்சணங்களுக்கும் ஆதார மஹாவித்யையாக இருப்பதாலும் இவள் "காமாக்ஷி".

16)தான் ஒருவளே பஞ்சஞானேந்த்ரியங்களுக்கும் புலனாகாது, ஆறு ஆதாரங்களைக் கடந்து ஸஹஸ்ரகமலத்தில் பரப்ரும்ஹ மயமாக ப்ரகாசிப்பதாலும் இவளே "காமாக்ஷி".

"காமாக்ஷி" எனும் அக்ஷரம் பரமசிவனுக்கும் கிடைக்காதது. மங்கலமே வடிவானது. இக்காமாக்ஷி எனும் விலைமதிக்க முடியா ரத்னம் பேரொளி வீசிக் கொண்டிருக்கின்றனது

Courtesy SRS Mani

குளிக்கும் முறை ( அகத்தியர் கூற்று )

குளிக்கும் முறை  (  அகத்தியர் கூற்று )

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள்.

 (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம்.  மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்).

தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும்.  குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் "ஓம்" என்று த்யானம் செய்து எழுதுங்கள்.  அந்த நீர் அப்போதுமுதல் கங்கை நீராக மாறிவிடும்.

ஒரு நிமிட த்யானத்தில் "இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும்.  குளிப்பது, உண்மையிலேயே நாமாக இருக்காது.

அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும்.  உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல்  ஏறுவதுதான் சரி.

  தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும்.

நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு.

  காலிலிருந்து பரவும் குளிரிச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும்.  அதுவே சரியான முறை.

 தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை "பிரஷ்டம்" என்பர்.  அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது.  அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும்.

ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.

துவலையை (துண்டு) குளிக்கும் நீரிலே நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம்.  அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள்.  உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவச்செய்து பல வித உள் நோவுகளை உருவாக்கும்.

பிறருடன் வாய் திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளிக்கும் நேரம்.  மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.

         குளிப்பதினால், பஞ்ச இந்த்ரியகளால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களையப் பெறுகிறது.

 தண்ணீர் உடலை தழுவி, கழுவி சுத்தப்படுத்தி, நம்மை, நம் மூலத்திற்கு அழைத்துச் செல்லுகிறது.  குளித்தபின் நாம் இருக்கும் நிலையே மனிதனின் சுத்த நிலை.  அதை உணரவேண்டும்.

குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கண்டத்துக்குமேல் (கழுத்துக்கு) வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம்.  வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்துவிடும்.

நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள்.  நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள்.

ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.

நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது.  நீரின்றி ஒரு உயிரும் இல்லை.

நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.
உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும்.  வெள்ளியன்று குளிப்பது நல்லது.

நான் ஒரு இந்து. இந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன்

ஈ வே ராமசாமி (பெரியார்) சேலத்தில் நடத்தியது போல் சென்னையிலும் ஒரு ஆபாச ஊர்வலம் நடத்த முயன்ற போது கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை இது. இதை தொடர்ந்து அந்த ஆபாச ஊர்வலம் கைவிடப்பட்டது.
(கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் என்ற நூலிலிருந்து!)

நான் ஒரு இந்து. இந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன். நான் எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன்; ஆனால் இந்துவாகவே வாழ விரும்புகிறேன். நான் கடவுளை நம்புகிறேன்; அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன்; அந்தக் கடவுளைக் கல்லிலும், கருத்திலும் கண்டு வணங்குகிறேன். ஆன்மா இறைவனோடு ஒன்றிவிடும்போது, அமைதி இருதயத்தை ஆட்சி செய்கிறது. நாணயம், சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது. நேரான வாழ்க்கையை இருதயம் அவாவுகிறது. பாதகங்களை, பாவங்களைக் கண்டு அஞ்சுகிறது. குறிப்பாக ஒரு இந்துவுக்குத் தன் மத அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி, வேறு யாருக்கும் கிடைப்பதில்லை. கடைசி நாத்திகனையும், அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது. என்னை திட்டுகிறவன்தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறான்; ஆகவே அவன்தான் முதல் பக்தன்” என்பது இறைவனின் வாக்கு. இந்து மதத்தைப்போல் சகிப்புத்தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எதுவும் இல்லை. நீ பிள்ளையாரை உடைக்கலாம்; பெருமாள் நாமத்தை அழிக்கலாம்; மதச்சின்னங்களை கேலி செய்யலாம்; எதைச் செய்தாலும் இந்து சகித்துக் கொள்கிறான். ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாகப் பிறந்தது போல் எண்ணிக் கொண்டு, பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாஸ்திரத்தைக் கேலி செய்யும் பகுத்தறிவுத் தந்தைகள் இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்துவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம். கடந்த நாற்பது வருசங்களில் ஒரு நாளாவது அதற்கான துணிவு ஏற்பட்டதாக தெரியவில்லையே! பாவப்பட்ட இந்து மதத்தை மட்டுமே தாக்கித் தாக்கி, அதை நம்புகிற அப்பாவிகளிடம் ‘ரேட்டு ‘ வாங்கிச் சொத்துச் சேர்க்கும் ‘பெரிய ‘ மனிதர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் பேசுகிற நாத்திக வாதம், அவர்கள் ‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’ என்பதை அறியாமல், வாழ்கையையே இழந்து நிற்கும் பல பேரை நான் அறிவேன். பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல், ஆரம்ப காலத்தில் இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். நடிகையின் ‘மேக் அப்’ பைக் கண்டு ஏமாறுகிற சராசரி மனிதனைப்போல், அன்று இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். அந்த கவர்ச்சி எனக்கு குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே! என்னை அடிமை கொண்ட கண்ணனும், ராமனும் இன்று சந்திர மண்டலத்துக்குப்பயணம் போகும் அமெரிக்காவையே அடிமைக்கொண்டு, ஆன்மீக நெறியில் திளைக்க வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறிவிட்டது? வேண்டுமானால் ‘பணத்தறிவில்' முன்னேறிவிட்டது என்று சொல்லலாம். ஆளுங் கட்சியாக எது வந்தாலும் ஆதரித்துக் கொண்டு, தன் கட்சியும் உயிரோடிருப்பதாகக் காட்டிக் கொண்டு, எது கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு வாழ்கையை சுகமாக நடத்துவதற்கு, இந்த நாத்திக போலிகள் போட்டிருக்கும் திரை, பகுத்தறிவு! உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர, வென்றதாக இல்லை. இதை உலகமெங்கும் இறைவன் நிரூபித்துக் கொண்டு வருகிறான். அவர்கள் எப்படியோ போகட்டும். இந்த சீசனில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்கள் கோவில்களுக்கு முன்னால் பகுத்தறிவு விளையாட்டு விளையாடிப் பார்க்கலாம் என்று கருதுகிறார்கள். இதை அனுமதித்தால், விளைவு மோசமாக இருக்கும். நம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்கு போக வேண்டாம். நம்புகிறவனை தடுப்பதற்கு அவன் யார்? அப்பாவி இந்துக்கள் பேசாமல் இருக்க இருக்க சமுதாய வியாபாரிகள் கோவிலுக்கு முன் கடை வைக்கத் தொடங்குகிறார்கள். வெள்ளைக்காரனின் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டு ‘போகாதே போகாதே என் கணவா ‘ என்று பாடியவர்களுக்கு நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்? நாட்டு பற்று இல்லாதவர்களுக்கு தெய்வப் பற்று எங்கிருந்து வரும்? தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு நாணயம், நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்? இந்த நாலரை கோடி (அன்று) மக்களில் நீங்கள் சலித்துச் சலித்து எடுத்தாலும், நாலாயிரம்  நாத்திகர்களைக் கூட காண முடியாது. பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

நன்றி: கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி

ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி - Sri Sivaganesan, Kadanthethi

ஸ்ரீ லலிதா அன்னையின் கருணையின் வடிவமே ஸ்ரீபாலாதேவி.
ஒன்பது வயது குமாரி வடிவம் என்றும் ஸர்வ வித்தைகளுக்கும் நித்யமானவள்.சிவந்த நிறமுடையவள், ஸ்ரீமஹாராக்ஞி அன்னையின் பாதகமலங்களில் ஸதா வசிப்பவள் , ஸ்ரீலலிதாஅன்னையின் நான்காவது நேத்ரம்,வெளியில் சஞ்ஞரிக்கும் ஸ்ரீஅன்னையின் ப்ராணனும் இந்த ஸ்ரீ பாலா தேவி என ஸ்ரீலலிதோபாக்யானம் கூறுகின்றது

ஸ்ரீஅன்னையின் தேஹத்திலிருந்து தோன்றியவள்.
"பண்டபுத்ர வதோக்யுக்த பாலா விக்ரம நந்திதா"ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம்
ஸ்ரீ பண்டாசுர வதத்தின் போது பண்டனின் முப்பது புத்ரர்களையும் பாலாதேவி அழித்த வீரத்தைக்கண்டு மகிழ்ந்தவள் ஸ்ரீஅன்னை

"ஸ்ரீ பாலாயை நம: ஸ்ரீலலிதாம்பிகை பாலாம்பிகை வடிவினள்
 இதற்கு அடுத்த நாமம் "லீலா வினோதினி" இந்த ப்ரபஞ்சவிளையாட்டில் அதாவது உலகனைத்தையும் படைத்தல்,காத்தல், அழித்தல் ஸ்ரீலலிதா தேவியின் விளையாட்டு ஆகும்.
இந்த ஸ்ரீபாலாம்பிகா   (தீக்ஷை பெற்று) உபாஸிக்கும் பக்தர்களிடம் பல லீலா வினோதங்களை புரிந்து காப்பவள்.
( பாலா  -பால லீலா வினோதினி).

ஒரு உதாரணம்  காஞ்சியில் மஹாகவி காளிதாசரின் மறுபிறவியாக கூறப்படும்  ஊமையான ஸ்ரீ மூகரை மஹாகவியாக்கி "மூக பஞ்சசதி" என்ற அன்னையைப்பற்றி 500 ஸ்லோகங்கள் கூற வைத்தவள் ஸ்ரீஅன்னையின் பாலாஸுரூபம்
(ஸ்ரீ மூகரைப்பற்றி ஸ்ரீகாமாக்ஷி கருணையில் விரிவாக காண்போம்)

தமிழில் இந்த அன்னையை ஸ்ரீ வாலை என்பர்
திருமூலர் திருமந்தரத்தில்
"சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண்பிள்ளை
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்" என்றும்
"ஓங்காரி என்பாள் ஒரு பெண் பிள்ளை என்று புகழந்துள்ளார்.
கருவூரார் தனது பாடலில்
"ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சர்யம் மெத்த மெத்த அது தான் பாரு" என பாடியுள்ளார்.
சித்தர்கள் வணங்கும் இந்த அன்னையை கொங்கணச்சித்தர்
வாலைக்கும்மி என்ற பாடல்களை பாடியுள்ளார்.
இந்த அன்னையின் உபதேச மந்திரத்தை ஸ்ரீலகு வித்யா,,  என்பர்.
ஸ்ரீவித்யா  உபாஸனையில்  ஸ்ரீகணபதி மந்திரத்திற்கு அடுத்து முதல் மந்த்ரம் ஸ்ரீபாலா மந்த்ரம்..விருக்ஷத்தின விதை போன்றது. .இதனுடைய விரிவாக்கம் அடுத்த மந்திரம் என்பர்   ஸ்ரீபாலா அன்னையின் உபாஸனை செய்து அருள்பெற்று எல்லா நலமுடன் வாழ்வோர்.கோடானு கோடி பக்தர்கள்.மற்றவை குருவின் மூலமாக அறியவேண்டியவை
இந்த அன்னை  உபாஸனையால் மட்டும் அடைய தகுந்தவள் என்பதால்  மந்திரோபதேச பெறாதவர்கள் ஆலயங்களிலோ அல்லது அனைத்தும் சக்திகளின் மூலமான ஸ்ரீலலிதா பரமேஸ்வரியை வணங்கி நலமுடன் வாழ்வோம்.

ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் ஸுரூபம் ஸ்ரீபுவனேஸ்வரி.எல்லா புவனங்களுக்கும் ஈஸ்வரி ஸ்ரீபுவனேஸ்வரி ஆகும்.ஈரேழு பதிநான்கு லோகத்திற்கும் ஈஸ்வரி.இந்த புவனம் ஒரு அண்டம். ஸ்ரீலலிதா த்ரிசதியில் "லக்ஷகோட்யண்ட நாயிகா " என்ற நாமம் ஒரு லக்ஷம் கோடி அண்டங்களுக்கு ஈஸ்வரி ஸ்ரீலலிதா பரமேஸ்வரி.

தேவி பாகவதம் ஸ்ரீபராசக்தி அன்னையின் பரத்துவ ப்ரவாவக மஹிமையை கூறுவது அனைவரும் அறிந்ததே.

அதில் ஜனமே ஜயன் வியாசரைப் பார்த்து  இந்த தேவி  யார்?மும்மூர்த்திகள் யார்? அவர்களை இயக்குவது யார்? எனக்கேட்டதற்கு ஸ்ரீவியாஸ பகவான் கூறியத் சில வற்றைக்காண்போம்.

தேவி தன்னை தந்தை ஹிமவானிடம் கூறியதை கூறுகிறேன்  என்று
தேவி உலகம் உண்டாவதற்கு முன்பு இருந்தேன்.அவ்வப்போது வேற ஒன்றும் இல்லை என்றும் தன்னுடைய பரப்ரம்ம ப்ரவாகத்தை கூறி தன் விஸ்வரூபத்தைக்காட்டி ப்ரபஞ்சமான எல்லா லோகத்தை  தன் தேகமாக காட்டியருளியதைக்கூறி  இந்த தேவி பராசக்தி புவனேஸ்வரி என்றார்.
 மும்மூர்த்திகளும் உருவாதல், அன்னையை வழிபடுதல்,அவர்களுக்கு மூன்று சக்தியை அளித்தல் பற்றி கூறும்போது..  ஸ்ரீப்ரம்மா ஆதிசக்தியை நோக்கி தாயே உன்னை ஸ்ரீசிவனின் அருள் ரூபமென்றும், வேத சாஸ்திரங்களை நன்கு ஆராய்ந்தால் மாயா ஸுருபினியான நீயும் மாயையைக்கடந்த பரமசிவத்தை தவிர்த்து வேறு பொருளில்லை அதனால் நீங்கள் சிவனா? ஆணா பெண்ணா  வேறு ஏதாவதா எனக்கு கூறியருங்கள் என வேண்டினார்.

அதற்கு அன்னை நானும் சிவனும் ஒன்றே நானே அவர்.அவரே  நான் உலகை படைக்கும் இரண்டாக பிரிந்தோம்.அந்த இரண்டும்  ஒரு கண்ணாடியின்     முன் ஒரு தீபத்தை வைத்தால் இரண்டாக  தோன்றும் ஆனால் ஒன்றே அது போன்று நாங்கள் இதுவே த்ருஸ்யம்,அத்ருச்யம் எனப்படும் எனக்கூறியருளினாள்

தசமஹாவித்யாவில் புவனேஸ்வரி வித்யா ஒன்று.இந்த அன்னையின் மந்திரம் ஏகாக்ஷரி.மிகவும் சிறந்ததது. அன்னையின் பீஜமந்திரத்திலிருந்து தான் அனைத்து புவனங்களும் ஏற்பட்டிருக்கிறது. ஸ்ரீவித்யையின்  ரத்னம்என்று அம்மந்திரம் புகழப்படுகிறது.
.
உபாஸனை மார்க்கமாகவும், உபாஸனை இல்லாதவர்களானாலும்  இந்த அனனை வணங்குபவர்கள் கேட்டதை  உடனே  காரணம் பாராமல் அருளும் அவ்யாஜ கருணை வடிவம்.

நமக்கு நன்கு தெரிந்த   அன்னையின் ஸ்லோகம், பாடல்,நாமங்களால் அன்னையை  வணங்கி ஆத்மஞானம் மற்றும் எல்லாவித சுகம் பெற்று நலமுடன் வாழ்வோம்.


தஞ்சை பெரிய கோயில கட்டினது யாரு?

தஞ்சை பெரிய கோயில கட்டினது யாருன்னு கேட்டா,, 

எல்லோரும் யோசிக்காமல் பதில் சொல்லிடுவாங்க ராஜா ராஜா சோழனு. ஆனா ராஜா ராஜா சோழன் அந்த கோயில கட்டினது நான் இல்லைன்னு சொல்றாரே.

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்க பட்டு விட்ட நேரம் அது. கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோசத்துல ராஜா ராஜா சோழன் நிம்மதியா தூங்கும் போது கனவுல இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார். ராஜா ராஜா என்று அழைக்க --- ராஜ ராஜ சோழன் "இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது ,,,,தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம் ,,எப்படி இருக்கிறது தங்களுக்கு நான் கட்டிய கோயில் இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன் அதற்கு தஞ்சை பெரிய கோயில் என்று பெயர் சூட்ட போகிறேன் மகிழ்ச்சி தானே தங்களுக்கு என்று கேட்டான் ஆனந்தமாக. இறைவன் சிரித்து கொண்டே ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம். ஒரு மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம் என்று கூறி மறைந்தார். ராஜ ராஜனின் கனவும் கலைந்தது. விழித்தெழுந்த ராஜ ராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான். யாருக்கும் பதில் தெரியவில்லை. பின் நேராக கட்டி முடிக்க பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றான். கோயில் சிற்பியிடம் தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான். சிற்பி தயங்கியவாறே அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை மூதாட்டி தினமும் மதிய வேளையில் இங்கு வருவார் ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும் பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க கொடுப்பார் நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார். ஏதோ இந்த ஏழை கிழவியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார். இப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள். ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை. நாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது. எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம். அப்பொழுது இந்த மோர் விற்கும் மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே ஏன் கவலையாய் இருக்கிறீர்கள் என்ன விஷயம் என்று கேட்டார்கள். நாங்களும் கல் சரி ஆகாத விசயத்தை சொன்னோம். அதற்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது. நான் அதைதான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம். என்ன ஆச்சரியம். கருவறையின் மேற் கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிக சரியாக இருந்தது. அதைதான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறன் என்றான் சிற்பி. இதை கேட்டதும் ராஜ ராஜனுக்கு எல்லாம் புரிந்தது. எவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியை தான். ஆரவாரமாக பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும் அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த மூதாட்டி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாளே என்று கண்ணீர் மல்க அழுது, பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள் நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். இந்த கோயில் கட்டியது அந்த அம்மையார் தான் நான் அல்ல இதற்கு இறைவனே சாட்சி என்றான். இதற்கு இறைவனே சாட்சி என்றான்”

”அன்பே சிவம்” என உணர்வதே தவம்

மஹாலக்ஷ்மிக்கே தெரியாத பக்தி ராதிகாவின் பக்தி

#முக்கூரார் சாென்ன கதை

ஒருநாள் யமுனை நதி தீரத்தில் பரமாத்மா குடிசை போட்டுக் கொண்டு ருக்மணியுடன் இருக்கிறான். பிசுபிசுவென்று மழைத் தூறல். குளிர்காற்று அடிக்கிறது.#பரமாத்மா #தூங்கவேயில்லை. ருக்மணி பிராட்டி பரமாத்மாவின் பாதத்தைப் பிடித்து தூங்கப் பண்ண வந்தாள். எவ்வளவு நேரம் ஆகியும் பரமாத்மா தூங்கவேயில்லை.ஏன் நித்திரை கொள்ளவில்லை என்று #கேட்டாள் #ருக்மணி.
படித்தில்பிடித்து
யமுனையின் #அக்கரையில் என்னிடத்தில் ஆழ்ந்த பக்தி கொண்ட #ராதிகா இருக்கிறாள். #அவள் #தூங்கவில்லை; அதனால் நான் தூங்கவில்லை என்றான் பரமாத்மா.

அவள் ஏன் தூங்கவில்லை என்று கேட்டாள் ருக்மணி பிராட்டி.

அவள் நித்யம் #இரண்டுபடி #பாலைச் சுண்டக் காய்ச்சி #பரிமள #திரவியங்கள் எல்லாம் போட்டு அந்தப் பாலைப் பருகுவது வழக்கம். இன்றைக்கு அவள் பால் #பருகவில்லை. பால் பருகாததால் அவள் தூங்கவில்லை. அதனால் நான் தூங்கவில்லை என்றான்.

அவள் தூங்காததால் பரமாத்மாவின் தூக்கத்திற்குத் தடை. அவள் தூக்கத்திற்குத் தடை பால் பருகாதது. அவள் பால் சாப்பிட்டால் இவனுக்கு தூக்கம் வந்துவிடும் என்று எண்ணி ருக்மணி பிராட்டி கிடுகிடுவென்று ஒரு பசுவைத் #தானே #கறந்தாள்.பரிமள திரவியங்கள் போட்டு பாலைக் காய்ச்சினாள். தானே படகைச் செலுத்திக்கொண்டு #அக்கரைக்குப் போனாள். ராதிகா என்ற #பக்தையின் குடிசைக் கதவைத் தட்டினாள். கதவைத் திறந்த ராதிகா,எதிரே #மஹாலக்ஷ்மி பாத்திரத்துடன் நிற்பதைப் பார்த்து ப்ரமித்துப் போனாள்.

கையில் பாலைக் கொடுத்தவுடன், பாலைப் #பருகினாள்.பாத்திரத்தை வாங்கிக் கொணடு வந்துவிட்டாள் ருக்மணி. 'நித்திரை போவான் போல யோகு செய்யும் பிரான்' பரமாத்மா. தலையோடு கால் போர்த்திக்கொண்டு #படுத்திருந்தான். ருக்மணி வருவதைப் பார்த்ததும் கண்ணை #மூடிக்கொண்டான்.
பரமாத்மா #தூங்கிவிட்டான் என்று #சந்தோஷப்பட்டு ருக்மணி, அவன் #திருவடியைத் #தொட்டு #வணங்க வேண்டும் என்று போர்வையை நீக்கி திருவடியைப் பார்த்தாள்.

இது கர்க பாகவத்தில் சொல்லப்பட்ட சரித்திரம். வடதேசத்தில் இதை நித்யம் பாராயணம் செய்யும் வழக்கம் உண்டு.

திருவடியில் பார்த்தால் ஒரே #கொப்புளங்கள்.பகவானை எழுப்பினாள் ருக்மணி.பிசுபிசுவென்று தூரல் போட்டுக் கொண்டிருக்கிறது. குளிர்காற்று வீசுகிறது. காலையிலிருந்து வெளியில் எங்கும் போகவும் இல்லை. இப்படி திருவடியில் அக்னியில் கால் வைத்ததுபோல் கொப்புளித்து இருக்கே? என்று கேட்டாள்.

ராதிகா பால் பருகினாள் அல்லவா!அதனால்தான்! என்றான் பரமாத்மா.

ராதிகா பால் பருகியதற்கும், கால் கொப்புளித்ததற்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டாள் ருக்மணி.

நீ #சுடச்சுட கொண்டுபோய் கொடுத்தாய். உன்னைப் பார்த்த அதிசயத்தில் அப்படியே பாலைப் பருகிவிட்டாள் அவள். அதனால் என் கால் #கொப்புளித்துவிட்டது என்றான்.

இதைக் கேட்ட ருக்மணி சிரித்துவிட்டாள். சுடச்சுட பாலைப் பருகினாள் என்றால் அவள் நெஞ்சு அல்லவா கொப்புளித்துப் போகவேண்டும். தங்கள் திருவடி ஏன் கொப்புளித்தது? என்று கேட்டாள்.

பகவான் சிரித்துக் கொண்டே சொன்னான்.'அவள் நெஞ்சில் இருப்பது என் திருவடிதானே!பால் சுடச்சுட என் திருவடியில்தானே விழுந்தது! என்றான்.

மஹாலக்ஷ்மியான ருக்மணி தாயார் நடுங்கிவிட்டாள். ருக்மணித் தாயாரான மஹாலக்ஷ்மிக்கே தெரியாத பக்தி ராதிகாவின் பக்தி. அவள் நெஞ்சில் இருப்பது என் திருவடியே என்று சொன்னான் என்றால் இது 'மாமாயத்வம்' இல்லாமல் வேறு என்ன!ருக்மிணியையே ப்ரமிக்க வைத்து பக்தர்களின் உயர்த்தியை எடுத்துக் காட்டினான். எப்படி வேண்டுமானாலும் பேசுவான். எதையும் சாஸ்திரார்த்தமாக்குவான்.தன் வாக்கை நிர்த்தாரணம் பண்ணக்கூடியவன்; உத்தம பக்தியை வெளிக்காட்டக் கூடியவன் . அதனால் மாமாயன்.