Saiva Siddantha Books

SivagnanaSiddhiyarSupakkamOfArulnandhiSivam(1948) by J M Nallaswami Pillai
Thiruvarutpayan Of Umapathi Sivacharya by J M Nallaswami Pillai
The Siddanta Deepika or The Light of Truth Volume 1 by J M Nallaswami Pillai
The Siddanta Deepika or The Light of Truth Volume 2 by J M Nallaswami Pillai
The Siddanta Deepika or The Light of Truth Volume 3 by J M Nallaswami Pillai
The Siddanta Deepika or The Light of Truth Volume 4 by J M Nallaswami Pillai
The Siddanta Deepika or The Light of Truth Volume 5 by J M Nallaswami Pillai
The Siddanta Deepika or The Light of Truth Volume 6 by J M Nallaswami Pillai
The Siddanta Deepika or The Light of Truth Volume 7 by J M Nallaswami Pillai
The Siddanta Deepika or The Light of Truth Volume 8 by J M Nallaswami Pillai
The Siddanta Deepika or The Light of Truth Volume 9 by J M Nallaswami Pillai
The Siddanta Deepika or The Light of Truth Volume 10 by J M Nallaswami Pillai
The Siddanta Deepika or The Light of Truth Volume 11 by J M Nallaswami Pillai
The Siddanta Deepika or The Light of Truth Volume 11 by J M Nallaswami Pillai
The Siddanta Deepika or The Light of Truth Volume 12 by J M Nallaswami Pillai
The Siddanta Deepika or The Light of Truth Volume 13 by J M Nallaswami Pillai
The Siddanta Deepika or The Light of Truth Volume 14 by J M Nallaswami Pillai

ஸ்ரீ லலிதா அன்னையின் ஆயுதங்கள்

ஸ்ரீலலிதா அம்பிகையின் ஆயுதங்கள் By Kadanthethi B Sivaganesan
=================================
1.பாசம்
=======
ஆசையின் வடிவம் பாசம். "பற்றுக பற்றற்றான் பற்றினை" என்பர்.அம்பிகையிடம் பற்றாகிய பக்தியையும்  அவள்காலடியில் ஆசைவைத்தால் மற்ற பற்றுகளும்  ஆசையும் அறுபடும்.
அம்பிகையிடம் உண்மையான பக்தி செலுத்துவோர்க்கு நற்கதிஅடைய வழி வகுக்கும் ஆயுதம்.

ராகஸ்வரூப பாசாட்யை நம ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம நாமம்
ஆசையின் வடிவமான பாசத்தை இடது கையில் தாங்கி நிற்பவள்

"இச்சாசக்தி மயம் பாசம் அங்குசம் ஞானரூபிணம்
கிரியாசக்திமயே பாணதனுஷீ ததஜ்வலம்"
 என்ற ஸ்லோகத்தின் படி பாசம்=இச்சாசக்தி ஆகும்.
இந்த இச்சாசக்தி,ஞானசக்தி,கிரியாசக்தியாக மூன்று சக்திகளும்  எல்லா   தெய்வங்களும் இயங்க காரண சக்திகள்.சில புருஷ தெய்வங்களுக்கு மூன்று சக்தியின் ஒன்றே.
சில புருஷ தெய்வங்களுக்கு இரண்டு அம்பிகை இம்மூன்று சக்தியாக விளங்குவர்.
(அம்பிகைஎன்பது அந்தந்த தெய்வங்களின் பத்னிகள்)

ஸ்ரீசாஸ்தாவிற்கு  தனி விசேஷம்
----------------------------------------------------------
"இச்சாசக்திமயீம் பூர்ணாம் கிரியாசக்தீச புஷ்களாம்  த்வயம்ச பார்ச்வயோர் தேவ்யௌ  ஞான சக்தி சக்தி மயம் ப்ரபும்"
இச்சாசக்தி ஸ்ரீபூர்ணாதேவி,கிரியாசக்தி ஸ்ரீபுஷ்களாதேவி
ஸ்ரீசாஸ்தாவே ஞானசக்தி ரூபமாகவும் விளங்குகிறார் என இந்த ஸ்லோகம் சொல்கிறது
இதே கருத்தை ஸ்ரீசுப்ரமணியருக்கு ஞானசக்தியையே தேஹமாக கொண்டவர் என ஸ்ரீதத்வ நிதி கூறுகிறது

பாசத்தின் அதிஷ்டானதேவதை.ஸ்ரீஅன்னையின் பாசத்திலிருந்து  தோன்றிய ஸ்ரீஅஸ்வாரூடாதேவி
ஸ்ரீஅம்பிகையோட குதிரைப்படதலைவி, குதிரையின் பெயர் அபராஜிதம்.அபராஜிதம் என்றால் வெல்ல முடியாதது

"அஸ்வாரூடா அதிஷ்டத அஸ்வ கோடி கோடி பிராவ்ருதா"
ஸ்ரீஅஸ்வாரூடாவின் தலைமையில் இயங்கும் கோடிக்கான குதிரைப் படைகளால் சூழப்பட்டவள்  அன்னை
ஸ்ரீஅன்னையின் பாசாயுதத்தை தியானித்தால் மனக்குதிரை என்று கூறப்படும் மனத்தில் தோன்றும் தீய எண்ணங்கள், விபரீத கற்பனைகள் நீங்கி எண்ணங்களை நெறிப்படுத்தி நற்கதி தரும் பாதையில் செல்லலாம்.

2.அங்குசம்
==========
க்ரோதாகாராங்கு ஶோஜ்வலா=குரோதத்தின் வடிவமான அங்குசத்தை தாங்கி ப்ரகாசிப்பவள்=ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம்

அங்குசம்  என்பது யானையை அடக்கும் கருவி.மதங்கொண்ட யானையை அங்குசம் அடக்குவது போல் நமது அடங்காத ஆணவத்தை ஸ்ரீஅம்பிகை அடக்கி அருள்புரிவார்.

நாம் பாவங்களை செய்ய காரணமாக இருப்பது
" காமம்,குரோதம்,லோபம்,மதம், ஆச்சர்யம்" இவைகளின் மிகுதியால் பாவங்களை செய்து
அதனால்   வரும்    கர்மவினையால்துன்பப்படுகிறோம்.

காமம்   என்றால் ஆசை  அதனால் பாவங்களையும்,துர்மோக ஆசையையும்   பாசத்தினால் ஸ்ரீஅம்பிகை நீக்குகிறாள்.
குரோதத்தை போக்கி அதனால் வரும் பாவ கர்மவினையை   ஸ்ரீஅம்பிகை   அங்குசத்தால் நீக்கி நம்மை ஆட்கொள்கிறாள்

மூன்று சக்திகளில் அங்குசம் ஞானசக்தி ஆகும்

அங்குசத்தின் அதிஷ்டான தேவதை= ஸ்ரீ சம்பத்கரி.
ஸ்ரீஅம்பிகையின் அங்குசத்திலிருந்து தோன்றிய சக்தி ஸ்ரீசம்பத்கரி ஸ்ரீஅம்பிகையின் யானைப்பட தலைவி.வாஹனம் யானையின் பெயர் "ரணகோலாகலம்" யானைப்படையை வழிநடத்துபவள்.

"ஸம்பத்கரி ஸமாரூட ஸிந்தூர வ்ரஜஸேவிதா"ஸ்ரீலலதா ஸஹஸ்ரநாமம்.
ஸ்ரீசம்பத்கரியின் யானைப்படைகளால் சூழப்பட்டவள்
ஸ்ரீசம்பத்கரி பெயர் விளக்கம்
----------------------------
சகல சம்பத்து மயமான விருத்திக்கு சம்பத்கரி என்று பெயர்.
ஞானம்,ஞாத்ரு,ஞேயம் முறையே அறிவு,அறிகிறவன், அறிவிக்கப்படும் பொருள் இம்மூன்றுக்கும் திரிபுடி என்று பொருள்.
இம்மூன்றினுடைய வித்யாசங்களை தெரிந்து கொண்டு அவைகளை சம்பந்தப்படுத்தும் ஞான ரூபமான சித்த விருத்திக்கு   ஸுக சம்பத்கரி    என்று பெயர்.
ஸ்ரீசம்பத்கரி தேவியை  வணங்கி குரோதங்களை விட்டு  ஞானம்  பெற்று சகலவித சம்பத்துடன் ஐயமின்றி வாழ்வோம்.

3 .புஷ்பபானம்
==============
சப்தம்,ஸ்பரிசம்,ரஸம்,ரூபம்,கந்தம் என்ற பஞ்சதன்மாத்திரைகளே ஸ்ரீஅன்னையின் புஷ்ப பானம்
 புஷ்பபானத்தின் அதிஷ்டான தேவதை ஸ்ரீ வாராஹி.
 அம்பிகையின் புஷ்ப பானத்திலிருந்து தோன்றிய அன்னை ஸ்ரீவாராஹி. அன்னையின் சதுரங்க படையின் தலைவி.. க்ரியா சக்தியின் வடிவம்
ஸ்ரீலலிதா அன்னை தன் புருவ நெறிப்பிலிருந்து ஒரு தண்டத்தை உருவாக்கி ஸ்ரீவாராஹி தேவிக்கு கொடுத்தாள்.அதனால் தண்டநாதா என்ற பட்டம் ஸ்ரீவாராஹி தேவிக்கு வந்தது.

கோபம் வந்தால் நாம் என்ன செய்கிறோம் நமக்கு தெரியாது. மஹாபாவங்களை செய்ய தூண்டுவது கோபம்
"க்ருத்தோ ஹன்யாத் குரூன்னபி" இந்த வாக்யத்திற்கு அர்த்தம் சொல்ல விரும்பவில்லை ஏனென்றால் கோபத்தினால் செய்யபடும் இப்பாவத்திற்கு உலகம் அழியும் வரை நரக வாசத்தை தருவது. மனதால் கூட நினைக்க கூடாத பாவம்.

எல்லா பிராணிகளை  விட வராகத்திற்கு பலம் ஜாஸ்தி.அதனால் இந்த ரூபம் அன்னைக்கு.

கோபத்தை அடக்குவதற்கும்  சத்ரு ஜெயம் ஏற்பட ஸ்ரீவாராஹி அன்னையை வணங்குதல் வேண்டும்.
சத்ரு என்பது மனித எதிரிகள் மட்டும் அல்ல நாம் செய்த பாவகர்மவினையே  நமக்கு  உண்மையான சத்ரு.அதனால் எதிரிகள் உருவாகின்றனர்.
" பூர்வ ஜன்ப க்ருதம் பாபம் சத்ரு ரூபேன பாததே" என்கிறது சாஸ்திரம்.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தில்
"கிரி சக்ர ரதாரூட தண்ட நாதா புரஸ்கிருதா"
கிரி என்றால் காட்டுப்பன்றி.காட்டு பன்றிகள் பூட்டிய ரதத்தில் வரும் தண்ட நாதாவால் வழிகாட்டவள் .அதாவது பண்டாஸுர யுத்தத்தில் சதுரங்க படையுடன் ஸ்ரீஅன்னைக்கு முன் சென்றவள்.

"விசுக்ரப்ராண ஹரண  வாராஹி வீர்ய நந்திதா"
விசுக்ரனை கொன்ற வாராஹியின் வீர்யத்தை மெச்சுபவள் அன்னை ஸ்ரீலலிதா தேவி என்கிறது.

விசுக்ரன் என்ற பண்டாசுரனின் தம்பிகளில் ஒருவன் .பண்டாசுர படைத்தலைவனை அழித்தவள்
(பண்டாசுரனின் அமைச்சர்களான ஏழு பிலாஸ்கரர் கண்களை குருடாக்கி அழித்தவள் .ஒன்றைப்பங்கு அக்ஷௌகினி சேனையையும் அழித்தவள் ஸ்ரீ வாராஹி)

தமோ குணத்தையும்,தீய சக்திகளையும் அழிப்பவள் ஸ்ரீவாராஹி

திருவானைக்காவல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி கோயில் சக்தி பீடங்களில் ஸ்ரீவாராஹி பீடமாக போற்றப்படுகிறது.
ஸ்ரீ வாராஹி அன்னையை உபாசனை இல்லாதவர்கள் ஆலயம் சென்று வழிபடலாம் ஏனென்றால்  வீட்டில்  வழிபட ஆசார அனுஷ்டாங்கள்  தேவை   என்பது  பெரியோர்கள் வாக்கு
சப்த மாதாக்களில் ஒரு மாதா அதனால் சப்த மாதா ஆலயத்திலும்  வழிபடலாம்  (சப்த கன்னியர்கள் வேறு)
இந்த அன்னையைப் பற்றி பிறகு விரிவாக காண்போம்
 ஸ்ரீஅன்னையை வணங்குவோம் ஐயமின்றி வாழ்வோம்.

4.கரும்பு வில்
--------------------------
ஞானிகள் தொழில்படுவதற்காக புற உலகினரால் காணப்படும்   மனமே ஸ்ரீஅன்னையின் கரும்புவில்

ஸ்ரீஸ்யாமளா என்றால் பச்சை நிறத்தில் ஜ்வலிப்பவள்

ஸ்ரீ ச்யாமளா தேவி அம்பிகையின் கரும்பு வில்லிலிருந்து தோன்றியவள்.
ஸ்ரீலலிதா அன்னைக்கு ப்ரியமான  தேவி.அன்னையால் மந்திரிணியாக நியமிக்கப்பட்டவள்                                            .ஸ்ரீலலிதா தேவி ஆக்ஞையின்படி எல்லா லோகங்களான ராஜ்யத்தை  ஆள்பவள்
.ஸ்ரீஅன்னைக்கு அடுத்த நிலையில் உள்ள தேவி.

ஸ்ரீஸ்யாமளாவின் மூன்று உபாங்க தேவதைகள் லகு மாதங்கி, வாக்வாதினி, லகுலி என்பர்
ஸ்ரீவராஹி தேவிக்கு தண்டம் அளித்தது போல் ஸ்ரீஅன்னை  ஸ்ரீ மந்திரிணி தேவிக்கு ஸர்வலோக அன்னையின் சாம்ராஜ்ய பரிபாலன த்திற்கு பிரதிநிதியாக  நியமித்தின்  அடையாளமாக "முத்ரை மோதிரத்தை  அளித்தாள்.

 ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமத்தில்
"மந்திரிணீ ந்யஸ்த ராஜ்ய தூ:=ஸ்ரீமந்திரிணீ தேவியிடம் அரசாட்சி பொறுப்பை ஒப்படைத்தவள் ஸ்ரீ அன்னை

"கேய சக்ர ரதா ரூட மந்திரிணி பரிஸேவிதா"
கேயம் என்றால் இசை .ஏழு ஸ்வரங்களையும் ஏழு தட்டுகளுடைய கேய சக்ரம் என்ற மந்திரிணியின் ரதம்
மந்திரிணி தேவியின் கேய சக்ர ரதத்திற்கு நான்கு வேதங்களும் சக்கரங்களாக உள்ளது.சதுர்வித புருஷார்த்தங்களும்  குதிரைகளாக
உள்ளது.அந்த கேயசக்ர ரதத்தில் ஏறிய மந்திரிணியால் ஸவிக்கப்படுபவள் ஸ்ரீலலிதா தேவி
.
"மந்திரிணி அம்பா விரசித விஷங்கவத தோஷிதா"
மந்திரிணி தேவி விஷங்கனை அழித்ததை கண்டு மகிழ்ந்தவள் அன்னை
பண்டாஸுர யுத்தத்தில் பண்டாஸுரன் ருத்ரனின் அருளால் இடது தோளிலிருந்து விஷங்கனையும் வலது தோளிலிருந்து விசுக்ரனையும் படைத்து தனது சகோதரனாக போற்றினான்.
கன்ம மலத்தின் பிரதிநிதி யான  தீய செயல்கள் புரியும் விஷங்கனை அமைச்சராக்கினனான்.கன்ம மலரூப விஷங்கனை மந்திர சக்தியான ஸ்ரீச்யாமளா என்கிற மந்திரிணி அழித்தாள்

ஸ்ரீ கதம்ப வன வாஸினி மதுரை மீனாக்ஷி அன்னை ஸ்ரீஸ்யாமளா தேவியே.
(அதைப்பற்றி ஸ்ரீமீனாக்ஷி தேவியைப்பற்றி கூறும் போது விரிவாக காண்போம்)

ஒரு பிரளய காலத்தில், பிரம்மதேவன் யானை வடிவில் சிவபெருமானைக் குறித்து தியானம் செய்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில் பிரம்மாவின் மனத்திலிருந்து தோன்றியவர் மதங்க முனிவர் (மதங்கம் என்றால் யானை).
பிரம்மதேவரின் உத்தரவை ஏற்று மதங்க முனிவர், திருவெண்காடு எனப்படும் ஸ்வேதாரண்யம் என்ற வனத்தில் ஈசனை நோக்கி கடும் தவம் இயற்றியபோது இறைவனின் காட்சி கிடைத்தது. என்ன வரம் வேண்டும்? என இறைவன் கேட்டபோது, ஆதிபராசக்தியே தன் மகளாகப் பிறந்திட வேண்டும் என்று வேண்டினார் மதங்கர். இறைவனும் அப்படியே வரம் தந்தார். பின்னர், சிவனாரின் ஆசியோடு அவர் அருளிய  பஞ்சதக்ஷாரி   மந்திரத்தை ஒரு சோலையில் அமர்ந்து ஜெபம் செய்தார் மதங்கர். அங்கே, முனிவருக்குக் காட்சி தந்த பராசக்தி. என் மனதின் வாக்கின் படி மந்திரிணியே உமக்கு மகளாய் பிறப்பாள் என்று வரமருளினாள்.  மதங்க முனிவரின் மகளாக தோன்றியதால் ஸ்ரீமாதங்கி என்று அழைக்கப்பட்டாள்

ஸ்ரீராஜமாதங்கி என போற்றப்படும் அன்னையை பூலோகம் மட்டுமில்லாமல்  தேவலோக, மங்கைகள்,யக்ஷ, கந்தர்வ,கின்னர மங்கைகள் சித்தலோகவாசிகள்  தினமும் பூஜிப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

சங்கீதம்,கல்வி,ஞானம்,விஞ்ஞானம்,மேதாவிலாசம் .ஞாபக சக்தி   தைர்யம் ஆளுமை திறன் போன்ற எல்லாவித நன்மையை தரும் ஸ்ரீ ச்யாமளா அன்னையை வணங்குவோம் ஐயமின்றி வாழ்வோம்.
(ஸ்ரீவாராஹி,ஸ்ரீச்யாமளா தேவிகளின் பெருமைகளை சதுர்வித நவராத்திரி, ஸ்ரீ பஞ்சகம், ஸ்ரீபுரத்தை பற்றி கூறும் விரிவாக காண்போம்)

Learn Tamil From TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Collection of links from http://www.tamilvu.org/en/

Primary Course

Certificate சான்றிதழ்க் கல்வி - Certificate Course

Higher Certificate மேற்சான்றிதழ்க் கல்வி - Higher Certificate Course
  HG10. நிலை 1 - Grade 1
  HG20. நிலை 2 - Grade 2
  HG30. நிலை 3 - Grade 3

Diploma  I. பட்டயம் - Diploma
  C011. இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் இருவர்
    C0111. பாரதியார் கவிதை உலகம் - 1
    C0112. பாரதியார் கவிதை உலகம் - 2
    C0113. பாரதிதாசன் கவிதை உலகம் - 1
    C0114. பாரதிதாசன் கவிதை உலகம் - 2
  C012. இடைக்கால இலக்கியம்
    C0121. அறநூல்கள் - 1 (கீழ்க்கணக்கில் அறம்-திருக்குறள் நீங்கலாக)
    C0122. அறநூல்கள் - 2 (ஏனைய அற நூல்கள்)
    C0123. சிற்றிலக்கியங்கள் - 1 (அக இலக்கியங்கள்)
    C0124. சிற்றிலக்கியங்கள் - 2 (புற இலக்கியங்கள்)
  C021. இலக்கணம் - 1 (எழுத்து)
    C0211. மொழி அமைப்பு
    C0212. எழுத்தின் பிறப்பும் பத இலக்கணமும்
    C0213. புணர்ச்சி - 1
    C0214. புணர்ச்சி - 2
  C031. தமிழகப் பண்பாட்டு வரலாறு
    C0311. பண்பாட்டு வரலாறு - 1
    C0312. பண்பாட்டு வரலாறு - 2
    C0313. பண்பாட்டு வரலாறு - 3
    C0314. காசும் கல்வெட்டும் காட்டும் பண்பாடு

Higher Diploma II. மேற்பட்டயம் (கூடுதல் தாள்கள்) - Higher Diploma
  A011. காப்பிய இலக்கியம்
    A0111. ஐம்பெருங் காப்பியங்களும் ஐஞ்சிறு காப்பியங்களும்
    A0112. பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லி பாரதம், பெருங்கதை
    A0113. தேம்பாவணி, சீறாப்புராணம், பிற கிறித்தவ இசுலாமியக் காப்பியங்கள்
    A0114. 20.ஆம் நூற்றாண்டுக் காப்பியங்கள்
  A021. இலக்கணம் - 2 (சொல்)
    A0211. பெயர்ச்சொல்
    A0212. வினைச்சொல்
    A0213. இடைச்சொல், உரிச்சொல்
    A0214. சொற்றொடரியல்
  A031. தமிழக வரலாறு
    A0311. சங்க காலம்
    A0312. இடைக்காலம் - 1
    A0313. இடைக்காலம் - 2
    A0314. ஐரோப்பியர் காலம், தற்காலம்
  A041. இலக்கிய வரலாறு
    A0411. இலக்கிய வரலாறு - 1 (தொடக்கம் முதல் கிபி. 5 ஆம் நூற்றாண்டு வரை)
    A0412. இலக்கிய வரலாறு - 2 (கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் கிபி. 10 ஆம் நூற்றாண்டு வரை)
    A0413. இலக்கிய வரலாறு - 3 (கி.பி. 11 ஆம் நூற்றாண்டு முதல் கிபி. 15 ஆம் நூற்றாண்டு வரை)
    A0414. இலக்கிய வரலாறு - 4 (கி.பி. 16 ஆம் நூற்றாண்டு முதல் கிபி. 20 ஆம் நூற்றாண்டு வரை)
  A051. மொழி வரலாறு - 1
    A0511. மொழி அமைப்பும் வரலாறும்
    A0512. பழங்காலத் தமிழ்
    A0513. இடைக் காலத் தமிழ்
    A0514. தற்காலத் தமிழ்
  A061. நாட்டுப்புறவியல்
    A0611. நாட்டுப்புறவியல் - வரலாறு
    A0612. நாட்டுப்புறவியல் - கதைப்பாடல்கள்
    A0613. நாட்டுப்புறவியல் - இலக்கியங்கள்

    A0614. நாட்டுப்புறவியல் - மரபுகள்

Degree இளநிலை (தமிழியல்) - B.A. (Tamilology)
  பகுதி 1 - Part 1
    P101. சிறுகதையும் புதினமும்
      P1011. சிறுகதை - 1
      P1012. சிறுகதை - 2
      P1013. புதினம் - 1
      P1014. புதினம் - 2
    P102. உரைநடையும் நாடகமும்
      P1021. உரைநடை - 1
      P1022. உரைநடை - 2
      P1023. நாடகம் - 1
      P1024. நாடகம் - 2
    P103. இக்காலக் கவிதையும் சிற்றிலக்கியமும்
      P1031. இக்காலக் கவிதை - 1
      P1032. இக்காலக் கவிதை - 2
      P1033. சிற்றிலக்கியம் - 1
      P1034. சிற்றிலக்கியம் - 2
    P104. காப்பியங்களும் சங்க இலக்கியமும்
      P1041. காப்பியங்கள் - I
      P1042. காப்பியங்கள் - II
      P1043. சங்க இலக்கியம் - I
      P1044. சங்க இலக்கியம் - II
  பகுதி 2 - Part 2
    P201. மொழிபெயர்ப்பியல்
      P2011. மொழிபெயர்ப்பியல் அறிமுகம்
      P2012. மொழிபெயர்ப்பு - வரலாறு
      P2013. மொழிபெயர்ப்பியல் சொல்லாக்கம்
      P2014. மொழிபெயர்ப்பு வகைகள்
    P202. மசமயத்தமிழ் இலக்கியம்
      P2021. சைவம்
      P2022. வைணவம்
      P2023. சமணம், பௌத்தம்
      P2024. கிறித்தவம்,  இஸ்லாம்
    P203. படைப்பிலக்கியம்
      P2031. கவிதை
      P2032. புதினம்
      P2033. சிறுகதை
      P2034. நாடகமும் உரைநடையும்
    P204. இதழியல்
      P2041. இதழியல் - ஓர் அறிமுகம்
      P2042. செய்தி சேகரித்தலும் எழுதுதலும்
      P2043. இதழ்களின் உள்ளடக்கம்
      P2044. அச்சிடுதலும் பதிப்பித்தலும்
  III. பட்டம் (கூடுதல் தாள்கள்) - Degree
    D011. பண்டைய இலக்கியம்
      D0111. நற்றிணையும் குறுந்தொகையும் (அக இலக்கியம் - 1)
      D0112. ஐங்குறுநூறும் அகநானூறும் (அக இலக்கியம் - 2)
      D0113. சிறுபாணாற்றுப்படை (புற இலக்கியம் - 1)
      D0114. புறநானூறும் பதிற்றுப்பத்தும் (புற இலக்கியம் - 2)
    D021. இலக்கணம் - 3 (பொருள்)
      D0211. நம்பி அகப்பொருள் - 1
      D0212. நம்பி அகப்பொருள் - 2
      D0213. புறப்பொருள் வெண்பாமாலை - 1
      D0214. புறப்பொருள் வெண்பாமாலை - 2
    D031. இலக்கணம் - 4 (யாப்பு, அணி)
      D0311. யாப்பருங்கலக்காரிகை - 1
      D0312. யாப்பருங்கலக்காரிகை - 2
      D0313. தண்டியலங்காரம் - 1
      D0314. தண்டியலங்காரம் - 2
    D041. மொழி வரலாறு - 2
      D0411. எழுத்து மாற்ற வரலாறு
      D0412. சொல் மாற்ற வரலாறு
      D0413. பொருள் மாற்ற வரலாறு
      D0414. ஒலி மாற்ற வரலாறு
    D051. தமிழகக் கலைகள்
      D0511. கட்டடக் கலை
      D0512. சிற்பக்கலை, ஓவியக்கலை
      D0513. இசைக்கலை
      D0514. நாடகக் கலை, நாட்டியக்கலை
    D061. இலக்கியத் திறனாய்வு
      D0611. இலக்கியத் திறனாய்வு
      D0612. திறனாய்வும் அணுகுமுறையும்
      D0613. திறனாய்வாளர்கள்
      D0614. புதிய பரிமாணங்கள்
குறிப்பு :
1. C0 தொகுதியின் தாள்களில் மட்டும் தேர்வு எழுதிச் சராசரியாக 2.5 தரப் புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றால் பட்டயம் பெறலாம்.
2. C0 மற்றும் A0 தொகுதியின் தாள்களில் மட்டும் தேர்வு எழுதிச் சராசரியாக 2.5 தரப் புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றால் மேற்பட்டயம் பெறலாம்.

Other
  பயிற்சி - Exercise
    தமிழ்ச் சொல்லாற்றல் பயிற்சி - Tamil Word Power Exercise
    கணினி பற்றிய அடிப்படைப் பாடங்கள் - Course On Computer Concepts (CCC) (NIELIT)
  தகவல் தொழில்நுட்பம் - ஓர் அறிமுகம் - (Introduction to Information Technology)
    அறிமுகம் (Introduction)
    அலுவலகத் தானியக்கமாக்கத் தொகுப்புகள் (Office Automation Packages)
    தகவல் தொழில்நுட்பமும் தகவல் தொடர்பும் (Information Technology and Communications)

    தகவல் தொழில்நுட்பப் பயன்பாடுகள் (Information Technology Applications)

அன்னபூர்னேஸ்வரி அஷ்டகம்

ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி அஷ்டகம்
-
நித்யானந்தகரி வராபயகரி ஸௌந்தர்ய ரத்னாகரி
நிர்துதாகில கோரபாபநகரி  ப்ரத்யக்ஷ மாஹீச்வரி
ப்ரலேயாச்சல வம்சபாவநகரி காஸி  புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி.
-
நானா ரத்னா விசித்திர பூஷநகரி ஹேமாம் பராடம்பரி
முக்தாஹாரா விளம்பமான விளாசத் வக்ஷோஜா கும்பாந்தரி
காஷ்மீரா கரு வாசிதா ருசிகரி காஸி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி.
-
யோகா நந்தகரி ரிபுக்ஷயகரி தர்மைக நிஷ்டாகரி
சந்த்ரார் கானல பாஸமான லஹரி த்ரைலோக ரக்ஷாகரி
ஸர்வைஸ் வர்யகரி தப: பலகரி காஸி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி.
-
கைலாசாசல கந்தரா லயகரி கௌரி உமா சங்கரி
கௌமாரி நிகமார்த்த கோசரகரி ஓம்கார பீஜாக்ஷரி 
மோக்ஷத் வாரக வாட பாடனகரி காஸி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி.
-
த்ருஸ்யா த்ருஸ்ஸ வீபூதி வாஹநகரி பிரம்மாண்ட பாண்டோதரி
லீலா நாடக சூத்ர கேளனகரி விக்ஞான தீபான்குரி
ஸ்ரீ விஷ்வேஷ மன: ப்ரசாதனகரி காஸி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி.
-
ஆதிக்ஷாந்த சமஸ்த வர்னனகரி சம்போ ப்ரியே ஷாங்கரி
காஷ்மீர த்ரிபுரேச்வரி த்ரினயணி விஸ்வேஸ்வரி சர்வரி
சுவர்கத் த்வாரக வாட பாடநகரி காஸி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி.
-
ஊர்வி சர்வஜநேச்வரி ஜெயகரி மாதா க்ருபாஸாகரி
வேணி நீலஸமான குந்தலதரி நித்யான்ன தனேஸ்வரி
ஷாக்ஷான் மோக்ஷகரி சதா சுபகாரி காஸி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி.
-
தேவி சர்வ விசித்திர  ரத்னா ரசிதா தாக்ஷாயணி சுந்தரி
வாமாஸ் வாது பயோதர ப்ரியகரி சௌபாக்ய மஹேஸ்வரி
பக்தா பீஷ்டகரி சதா சுபாகரி காஸி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி.
-
சந்த்ரார் கானல கோடி கோடி சத்ருசி சந்த்ரம்சு பிம்பாதரி
சந்த்ரார் காக்னி சமான குண்டலதரி சந்த்ரார்க்க வர்னேச்வரி 
மாலா புஸ்தக  பாஷ சாங்குஷதரி காஸி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி.
-
க்ஷத்ர த்ரானகரி மஹா பயகரி மாதா க்ருபாசாகரி   
சாக்ஷான் மோக்ஷகரி சதா சிவகரி விஷ்வேச்வரி ஸ்ரீதரி
தக்ஷ க்ரந்தகரி நிராமயகரி காஸி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி.
-
அன்னபூர்ணே சதா பூர்ணே சங்கர ப்ராண வல்லபே
ஞானவைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி
மாதா ச பார்வதி தேவி பிதா தேவோ மகேஸ்வரஹ  :
பாந்தவ சிவபக்தாஸ் ச ஸ்வதேசோ புவநத் த்ரயம்

||இதி ஸ்ரீ அன்னபூர்ண ஸ்தோத்ரம் சம்பூர்ணம் ||

ஜாக்ரதா ஜாக்ரதா

வடநாட்டில் காசிக்குச் செல்லும் வழியில் சக்கிலியன் ஒருவன் வசித்து வந்தான். அவன் திருமணமாகி நெடு நாளாய் புத்திரன் இல்லாமல் இருந்தான். சக்கிலியன் ஒரு பெரியவரிடம் தன் குறையைக் கூறினான். அவர் தர்மம் செய்தால் அதன் பயனாக புத்திரன் உண்டாவான் என தேற்றினார்.

சக்கிலியன் எந்த முறையில் தர்மம் செய்ய வேண்டுமென்று கேட்டான். அக்காலம் கோடை காலம். அவ் வழியாக காசிக்குப் போகும் ஓர் அந்தணனுக்கு ஒரு குடை, ஒரு மிதியடி, ஒரு விசிறி இம் மூன்றையும் தானமாகக் கொடுத்தால் அவர்களுடைய ஆசியால் புத்திரன் உண்டாகும் என்றார்.

தான் தாழ்த்தப்பட்டவன் ஆதலால் அந்தணனுக்கு எவ்வாறு தானம் செய்ய முடியும் என சிந்தித்தான். ஒருநாள் ஒரு குடை, ஒரு மிதியடி, ஒரு விசிறி இம் மூன்றையும் தயாரித்து எதிரிலுள்ள மரத்தடியில் வைத்து விட்டு தன் தொழிலில் ஈடுபட்டான்.

பக்தியில் மேம்பட்ட அந்தணர் ஒருவர் தன் இறுதிக் காலம் நெருங்குவதற்குள் காசிக்குச் சென்று வர வேண்டுமென்ற வைராக்கியத்தோடு கால்நடையாகப் புறப்பட்டார். அது சமயம் வெயில் காலமாதலால் வெப்பத்தால் துடிதுடித்துச் சென்று கொண்டிருந்தார்.

வழியில் ஒரு மரத்தடியில் வைத்திருந்த குடை, செருப்பு, விசிறி இம் மூன்றையும் கண்டார். அதை மகிழ்ச்சியோடு எடுத்துக் கொண்டு அம் மூன்றையும் வைத்தவனை வாழ்த்திக் கொண்டே சென்றார். அந்தணர் காசிக்குச் சென்று திரும்பி வரும் வழியில் உயிர் துறந்தார்.

மூன்று பொருட்களையும் தானஞ் செய்த சக்கிலியன் வீட்டில் மகனாகப் பிறந்தார். சக்கிலியன் தனக்கு மகப்பேறு உண்டானது கண்டு மகிழ்ந்தான். குழந்தை பிறந்து பேச ஆரம்பித்த பருவத்தில் யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்தது. அது கண்டு பெற்றோர்கள் கவலைப் பட்டனர். குழந்தை ஞான நெறிக்கேற்ப வளர்ந்து பதினாறு வயது அடைந்தது.

காசி அருகிலுள்ள ஊரில் கள்வர்கள் பயம் அதிகமாக இருந்தது. மக்கள் அமைதியாக வாழ முடியவில்லை.அவ்வூர் அரசனிடம் சென்று அனைவரும் முறையிட்டனர். அரசன், நாள் தோறும், தினம் ஒருவராக ஊர் சுற்றி வந்து நான்கு ஜாமங்களும் பறை கொட்டி வரும்படி ஆணை பிறப்பித்தார். அவ்வாறே மக்களும் வீட்டிற்கு ஒருவராகப் பறை கொட்டி வந்தனர்.

ஒரு நாள் சக்கிலியன் முறை வந்தது. அன்று அவன் முக்கியமாக வெளியில் செல்ல நேர்ந்தது. மனைவியிடம் ஊமை மகனை பறை அடிக்க அனுப்பும் படிச் சொல்லி விட்டுச் சென்றான். அன்றிரவு தாய் மகனை அழைத்தாள். அவன் கையில் பறையைக் கொடுத்து சாம சாமத்திற்கு அடிக்கும் படி ஜாடை காட்டினாள். ஊமைச் சிறுவன் பறையை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட இடத்திலிருந்து அடித்துக் கொண்டே சென்றான்.

பிறந்தது முதல் பதினாறு பிராயம் வரையிலும் பேசாமல் இருந்தவன் முதல் ஜாமம் முடிந்ததும் பறையை நிறுத்தி வடமொழியில் ஒரு ஸ்லோகத்தைச் சொன்னான். அந் நாட்டு அரசன் அதைக் கூர்ந்து கேட்டார். இவ்வாறு சிறுவன் நான்கு ஜாமங்களுக்கும் பறை கொட்டி நான்கு ஸ்லோகங்கள் சொல்லி முடித்தான்.

பொழுது புலர்ந்தது. வீட்டிற்குச் சென்றான். பறையை வைத்தான். பழைய படி மௌனமாயிருந்தான். அன்றிரவு முழுவதும் விழித்திருந்து அச் ஸ்லோகங்களைக் கேட்ட அரசன், அவைகளின் பொருளை ஆராய ஆவல் கொண்டான்.

விடிந்ததும் தந்தை [சக்கிலியன்] வீட்டிற்கு வந்தான். மகன் தன் கடமையை ஆற்றினானா என்பதைப் பற்றி மனைவியிடம் விசாரித்தான்.

அரசனும் காலையில் அரசவைக்கு வந்தார். மந்திரியிடம் நேற்றிரவு பறை கொட்டியவனை அழைத்து வரும்படி ஆணையிட்டார். அவர்கள் சேவகர்களுக்குக் கட்டளையிட்டனர். அவர்கள் சேரியில் சென்று சக்கிலியனை அழைத்து அரசர் முன் நிறுத்தினர்.

சக்கிலியன் அரசரைக் கண்டு நடுக்கமடைந்தான். அரசன் சக்கிலியனை ஆசனத்தில் அமரச் செய்து, “நேற்றிரவு பறை கொட்டும் போது நான்கு ஜாமத்திற்கும் நான்கு ஸ்லோகங்கள் சொன்னீர்களே அதன் பொருள் என்ன?” என ஆவலுடன் கேட்டார். சக்கிலியன் வியப்புடன், “அரசே! நேற்றிரவு பறை கொட்டியவன் என் மகன் அவன் பேச மாட்டான் ஊமையன்!” என்றான்.

உடனே அரசன் அச் சிறுவனை அழைத்து வரும் படிச் சொல்லச் சேவகர்கள் அவனை அழைத்து வந்தனர். அரசனது மனம் பக்குவம் பெற்றிருந்தது.

சக்கிலியன் மகனைக் கண்ட அரசன் தம் சிம்மாசனம் விட்டிறங்கினார். அச்சிறுவனை எதிர் கொண்டு அழைத்தார். ஆசனத்தில் அமரும் படி பணிவுடன் சொன்னார். இக் காட்சியைக் கண்ட அனைவரும் பிரமித்தனர். அரசர் சிறுவனை உணர்ந்தார். அவனது உள்ளக் கிடக்கையை அறிய அவாக் கொண்டு நேற்றிரவு நான்கு ஜாமங்களிலும் சொன்ன ஸ்லோகங்களின் பொருளை விளக்கும் படி வேண்டினன்.

சிறூவன் முதல் ஸ்லோகத்தைச் சொல்லி விளக்கம் செய்தனன்

“காம; குரோதச்ச லோபச்ச தேஹே நிஷ்டந்தி தஸ்கரா;
ஞான ரத்நாப ஹாராய தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா!”

சரீரத்தில் மதிப்பிடற்கரிய ரத்தினம் போன்ற மணிகள் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. காமம், குரோதம், லோபம் ஆகிய திருடர்கள் ஞானமாகிய ரத்தினத்தை அபகரிக்கும் பொருட்டு சரீரத்தில் வசிக்கிறார்கள். ஆகையால் எச்சரிக்கையாக இருங்கள்.

சிறுவன் ஞான நெறியில் ஈடுபட்டு அந்தரங்கத்திலுள்ள ஆன்மாவை அறிந்தவன். அவ் ஆன்மாவைக் கொண்டு பரமாத்மா தரிசனம் காண முயற்சிப்பவன். ஆதலால் அவன் பார்வையும், சொற்களும் மன்னன் மதிக்கும் நிலையில் இருந்தது. மன்னன் மேலும் கேட்க அவாக் கொண்டான்.

சிறுவன் இரண்டாம் ஸ்லோகம் சொல்லி பொருள் கூறினன்

“ஜன்மதுக்கம் ஜராதுக்கம் ஜாயாதுக்கம் புந;புந:
சம்ஸார ஸாகரதுக்கம் தஸ்மாத் ஜாக்ரதா: ஜாக்ரதா”

“பிறத்தல் மிகவும் துன்பம். பின்பு விருத்த பருவம் பெருந்துன்பம். இதனிடையில் வாலிப காலங்களில் மாதரின் மோகத்தால் அடிக்கடி உண்டாகும் துன்பங்கள் மிகப் பெரியதாகும். இவையன்றி ஜனன, மரண சம்சாரமாகிய சமுத்திரத்தில் படும் துயரம் அளவிறந்தனவாம். ஆகையால் ஆன்மாக்களே ஜாக்கிரதையாக இருங்கள்”

இரண்டாம் ஸ்லோகத்தின் மூலம் சம்சார சாகரம் தீராத துக்கம் என்றும் இதனின்று விலக அறிவு தனித்திருக்க வேண்டும் என்றும் தெளிந்தார் மன்னர். சிறுவன் சொன்ன மொழிகளைக் உபதேசமாகக் கொண்டு வாழ்நாளில் அடைய வேண்டிய மெய்ப் பொருளை அடைய ஆவல் கொண்டு அடுத்த ஸ்லோகத்தின் பொருளைக் கூறும் படி வேண்டினார்.

“மாதா நாஸ்தி பிதா நாஸ்தி பந்து ஸஹோதரா
அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா”

“ஈன்று வளர்த்த அன்னையும், தந்தையும் அநித்தியம். இவையன்றி தனக்குரிமை என்றெண்ணும் பொருள்களும் அநித்தியம். தனக்குச் சொந்தம் என்றெண்ணும் வீடு முதலியவைகளும் அநித்தியம். ஆகையால் எச்சரிக்கையாய் இருங்கள்! எச்சரிக்கையாய் இருங்கள்!!

அரசன் சிறுவன் சொன்ன அறிவுரைகளைக் கேட்டு ஆனந்தம் அடைந்தார். நான்காம் ஸ்லோகத்தின் பொருளைக் கூறும் படி வேண்ட, அவ்வாறே சிறுவன் கூறினன்.

“ஆயசா பத்தே லோகே கர்மணா பஹு சிந்தையா
ஆயுக்ஷீணம் நஜாநாதி தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா”

“இந்த உலகில் மனிதர்கள் நானாவித சிந்தைகளாகிய கர்ம சம்பந்தமான ஆசைகளினாலே கட்டுப்பட்டுள்ளார்கள். இதனால் தனது ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அறிகின்றதில்லை. ஆகையினால் எச்சரிக்கையாய் இருங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். கர்மாவை வெல்ல முயலுங்கள்”

சிறுவனின் ஞான உரைகளைக் கேட்ட மன்னர் மிக வியந்தார். சிறுவனின் தந்தையை அழைத்து, “உன் மகன் ஊமையன் அல்லன். பெரிய ஞானி நான் அவன் ஞான மொழிகளைக் கேட்கும் பேற்றைப் பெற்றேன்” என்று ஆனந்தமடைந்தார்.

நம்முள் இருக்கும் திருடர்களை கவனியாது புறத்தேயிருக்கும் திருட்டுகளைப் பற்றி கவலைப்பட்டு காலத்தை வீணாகக் கழிக்கின்றோம் என்பதை இக்கதை வலியுறுத்துகிறது....

Brahmashree Prof Balakrishnan Nair

https://bknairsir.blogspot.in/