ஸ்ரீ.சபரி பஞ்சகம்

ஸ்ரீ சபரி பஞ்சகம் : 1

கருணாகரக் கடவுள் ஹரனாரிடம்
ஸுர்ப்பகாஸுரன் தவமிருந்து
தன் கை வைத்த பேர் சிரசு துய்ய
நீராகவே கருதினான் ஒரு வரத்தை
வரம் கிடைத்தவுடன் பரமகுருவாம்
ஹரன் சிரசில் தன் கரம் வைத்திடச் சென்றெடுத்தான்
வள்ளல் ஐவரளியுள் ஒளிந்தாரென்று
மாலறிந்து ஓடி ஓடி ஓடி வந்து
சரஸ மோஹினியாகி அஸுரனை
வெண்ணீராக்கி சம்புவை அணைந்து
பெற்ற சந்ததிப் பொருளாக வந்த என்கண்மனியே எங்கள் சங்கடம் தீருமைய்யா
சரணம்ஐயப்பா சரணம்ஐயப்பா சரணம்ஐயப்பா
என்று உருகும் அன்பர் தமக்கு நீர்
ஸகல ஸௌபாக்யங்களும் தந்துதவும்
தபயோக ஸித்தாந்த சபரிபீடாஸ்ரம ஸ்தான மெய்ஞ்ஞான குரவே குரவே குரவே சரணம் சரணம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா.

ஸ்ரீ சபரி பஞ்சகம் : 2

பண்டு ஹாலாஸ்யபதி கொண்ட மீனாக்ஷி
நிஜ பக்தனாம் உக்ரபாண்டியன் பாலவரம்
வேண்டுமென்று ஈசனாம் சம்புவை ப்ரார்த்தித்து
அமோக வரமும் கொண்டு மனமகிழ பூபன்
அண்டையில் மாலரனும் கூடியொரு மனமிசைய
மூர்த்தியாகி குமர வேஷத்தினால் அவரை
மோஹம் செய்து கொஞ்சிட தஞ்சமென்று
தொண்டு செய்கின்ற நாளன்று கள்ளர்களாம்
துஷ்டர்களை நிக்ரஹித்த தீரனே தீனபரிபாலனே
எந்தன் துயரமெல்லாம் அகற்றி அபீஷ்டம் உதவும்
சண்ட ப்ரசண்ட கோதண்ட உத்தண்ட
சாஸ்த்ராதி தேவன் என்ற தபயோக ஸித்தாந்த சபரி பீடாஸ்ரம ஸ்தான
மெய்ஞ்ஞான குரவே குரவே குரவே ஸ்வாமியே சரணம் ஐயப்பா.

ஸ்ரீ. சபரி பஞ்சகம் : 3

பச்சை நிறமெச்சும் ஒரு நற் புரவி
மீதினில் சவாரி வரும் தீரனென்றும்
பந்தளத்தரசர்க்கு அந்தி பகல்
தரிசனம் பாலிக்கும் ஈசனென்றும்
கச்சவடம் மெச்சமுறும் கொச்சி
தெக்கேத்தான கர்த்தனாம் கேமனென்றும்
கண்டிருக்கின்றதொரு தொண்டனுக்காக
கால்தனில் விலங்கு பூட்டி தூக்ஷணம்
செய்யாமல் யக்ஷியை இருத்தி உன்
சொல்லுறுதி கேட்க வைத்தீர்
தொண்டிமையாம் என் துயர் தீர்த்து
அனுக்ரஹம் உறுதியாய் செய்யும் ஐயா
ஸச்சிதானந்த ஹரி சங்கரானந்த ஜெய
ஸம்மோஹனாங்கன் என்ற
தபயோக ஸித்தாந்த சபரி பீடாஸ்ரம ஸ்தான
மெய்ஞ்ஞான குரவே குரவே குரவே ஸ்வாமியே சரணம் ஐயப்பா
குதிரைக் கொடியுடையோனே சரணம் ஐயப்பா


ஸ்ரீ. சபரி பஞ்சகம் : 4

மாயானுபூதியாலே யானும் உந்தன்
பதம் மறந்திருந்தேன் இதுவரை
மற்றொருவர் இல்லையே இத்தரணி
மீதினில் என் வம்சவழியான தெய்வம்
நீ ஆதரிக்கின்ற நிஜரூபன் என்றுன்னை
எனதுள்ளம் தெளிவு கொண்டு நின்
சரண தூளியை எந்தன் சிரமணிந்தேன்
உன் நிஜ பக்த ப்ருத்யனாம் என்
காயாம்புரித் தலைவனே யான் கவலை
கொண்டு கண்ட இடமெல்லாம் சுற்றி வந்தேன்
கண்காக்ஷி தந்து எனது பண்பாடறிந்து
உதவும் காருண்ய வாரி நிதியே
தாயான பூரணி புராதனி மகிழ்ந்தருளும்
தர்ம சாஸ்த்ரைய்யன் என்ற
தபயோக ஸித்தாந்த சபரி பீடாஸ்ரம ஸ்தான
மெய்ஞ்ஞான குரவே குரவே குரவே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா என் தெய்வமே சரணம் ஐயப்பா

ஸ்ரீ. சபரி பஞ்சகம் : 5

மங்களானந்த சரணங்களை வணங்கி அருள்
வாக்கினால் பஞ்சரத்ன மாலை போல் ஓதினேன்
மலை வளரும் ஆதி கவிவாணர் தம்
திருவருளினால் எங்கும் நிறைந்த ஈசனே
நீ மனதிரங்கி இந்த ஏழைமீதுன் திருக்கருணை
ரசமழை பொழியும் மீன லோசனத்தை நாட்டி
இப்பொங்கு புவிமீதினில் எங்கு சென்றாலும்
உம் புகழ் பாடி யான் வாழவே
புத்ர மித்ர களத்ர பக்தி முக்தி ஞான
புருஷார்த்தமும் தந்து உதவுவீர்
பங்குனியில் ஈராறு நாளில் உதித்த
மணிதாஸ குலதாஸனென்ற
தபயோக ஸித்தாந்த ஸபரி பீடாஸ்ரம ஸ்தான
மெய்ஞ்ஞான குரவே குரவே குரவே ஸ்வாமியே சரணம் ஐயப்பா