ஸ்ரீ ஆரியங்காவு பஞ்சகம்

ஸ்ரீ ஆரியங்காவு பஞ்சகம் : 1

கருணாம்புதே உமது கமல பொற்பாதமே
கதியென்று காத்திருக்கும்
கம்பங்குடிக்கு உடமை உன்
பொன்னடிக்கு அடிமை கண்ட
விகிதப்படிக்கு உன் சரணார விந்தமே
ஸர்வதா ஸ்துதி செய்து வம்ச வழியாய் நடந்தும் சற்றாகிலும் மனமிரங்காதது
ஏனென்று சாற்றி எம்மை ஆட்கொள்வீர் ஐயா
ஒரு நாளும் எளியனை கை விடேன் என்ற
உமது உறுதியை மறக்கலாமோ
ஓங்காரமான பொருளாகும் என் ஐயனே ஸ்ரீம்கார தீப ஒளியே திருமாரன் பெற்ற பெருமானே
எனக்குற்ற தீவினைகள் போக்கியருள்வாய்
திக்கெல்லாம் புகழ் பரவும் பூரணை புஷ்கலை மருவும்
திருவாரியக் கடவுளே

ஸ்ரீ ஆரியங்காவு பஞ்சகம் : 2

அனவரதமும் அம்புவிக்கு
ஆதாரமான உமது அரவிந்த பாத தூளிக்கு ஆசையாய்
நேசித்து பூஜிக்கும் பக்தருக்கு
அடிமையாய் தொண்டு செய்யும்
எனது சங்கடம் அறிந்து இப்பொழுது இரங்குவீர் ஏந்தலே
புகலும் ஐயா இன்னமும் சகிப்பதற்கு
இடமில்லை என்பதுன் திருவுள்ளம்
அறியாததோ கனவு கண்டது போல்
இருக்கின்ற தாஸன் என் இஷ்ட
காம்யங்கள் தரவே காலம் கடத்தாமல்
இது சமயம் எந்தனை கண்
பார்த்து இரங்குமையா தினமும் உமதன்பர்க்கு உதவி செய்வதில்
கண்கண்ட தேவாதி தேவனென்றும்
திக்கெல்லாம் புகழ் பரவும் பூரணை புஷ்கலை மருவும் திருவாரியக் கடவுளே

ஸ்ரீ ஆரியங்காவு பஞ்சகம் : 3

தயவினால் அன்பர் தம் துயர் தீர்த்து
வருகின்ற தர்ம சாஸ்த்ரைய்யன் என்று சந்ததமும் உன்னைத் தொழும்
கரந்தையர் பாளையத்தில்
அதி ஸுமுகன் பய நிவாரணம் செய்ய
மத வாரணத்து பரி பவனி வந்து
பவனியாளும் பக்த பரிபாலனே
முக்தி புரி சீலனே பாண்டியனுக்கு அனுகூலனே
நயமான உந்தன் திரு நயனாரவிந்த
திருக் கருணாம்ருதம் பொழிகுவாய்
நாவினால் உந்தன் ஸ்துதி பாடிடும்
எனக்குன் நாம ஸந்தானம் அருள்
ஜெய வீரமணிகண்டர் பத பக்தனாம் தொண்டன் எனை ஆளும் குண பூஷணா திக்கெல்லாம் புகழ் பரவும் பூரணை புஷ்கலை மருவும் திருவாரியக் கடவுளே

ஸ்ரீ ஆரியங்காவு பஞ்சகம் : 4

உன் தாரகப் பெருமை கூறவென்றால்
கட்செவியரசனாலும் ஆகுமோ ஒப்புமை சொல்வதற்கு இப்புவிதனில்
உனையன்றி வேறில்லை கண்டீர்
பந்தாடும் மோஹினி பரந்தாமனும்
பரமனும் தந்த பரமமென்றும்
பாரினில் அவதாரனென்று
ஆரணர் தினம் தொழும் பக்தரங்கனென்றும் உன் சிந்தாமணிக்குள் வளர் செந்தாமரைக் கமல பொற்பாத தூளி தருவாய்
தேடு நிதி உன்னை நாடுமென்னை
ஆதரித்தடிமை கொண்டருள்வாய்
மந்தாரை முல்லை சம்பங்கி குடமல்லி
மலர் மணமேறு குணமேருவோம்
திக்கெல்லாம் புகழ் பரவும் பூரணை புஷ்கலை மருவும் திருவாரியக் கடவுளே

ஸ்ரீ ஆரியங்காவு பஞ்சகம் : 5

பொன்னம்பலத்தில் இலகும் உன்
பாத பத்மத்தில் பூஜாதி பக்தி செய்யும் போதாக்கள் என்றுனது ஜாதாக்கள்
தருவம்ச பூர்வீக பக்தராகும் என்
நெஞ்சத்துயரை உன் நெஞ்சம்
அறியாதிருக்குமோ என்ன விதமோ
ஏழைப் பங்காளர் எனும் கேள்வி உந்தன் விருது எந்தன் மட்டுக்கும் இல்லையோ
சோகத்தில் மூழ்கலாமோ சொந்தமாய் ஒரு
சந்தானமும் தந்து எந்தன் வேதனை தீருமையா
இன்னமும் மணிதாஸன் அடி வணங்குவேன்
சின்மயானந்தனெனும் திக்கெல்லாம் புகழ் பரவும்
பூரணை புஷ்கலை மருவும் திருவாரியக் கடவுளே