Gokulashtami Krishna Stotram

வசுதேவ சுதம் தேவம் கம்ச சாணூர மர்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

அதசீபுஷ்ப சங்காசம் ஹார நூபுர சோபிதம்
ரத்ன கங்கண  கேயூரம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

குடிலாலக சம்யுக்தம் பூர்ண சந்த்ர நிபானனம்
விலசத் குண்டலதரம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

மந்தார கந்த சம்யுக்தம் சாருஹாசம் சதுர்புஜம்
பர்ஹி பிச்சாவ சூடாங்கம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

உத்புல்லபத்ம பத்ராக்ஷம் நீலஜீமுத சன்னிபம்
யாத்வானாம் ஷிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ருக்மிணீ கேலி சம்யுக்தம் பீதாம்பர சுஷோபிதம்
அவாப்த துளசிகந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

கோபிகானாம் குசத்வந்தவ குங்குமான்கித வக்ஷசம்
ஸ்ரீநிகேதம் மகேஷ்வாசம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ஸ்ரீவத்சாங்கம் மகோரஸ்கம் வனமாலா விராஜிதம்
சங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

கிருஷ்னாஷ்டகம் இதம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத்
கோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி .
-----------------------------------------------------------------------------------------------------------------------
प्रेमार्द्र विह्वल गिर पुरुषा:पुरीणा:
      त्वां तुष्टुवु: मधुरिपो! मधुरैर्वचोभि:।
वालों विडम्बितमिदं मम नीचवाच :
      क्षान्तिरस्तु ते सविषया मम दुर्वचन:।।

ப்ரேமார்த்த விஹ்வலகிர: புருஷா: புராணா :
த்வாம் த்ஷ்டுவு: மதுரிபோ! மதுரைர்வசோபி: |
வாசோ விடம்பிதமிதம் மம நீச வாச:
க்ஷாந்திஸ்து தே ஸவிஷயா மம துர்வசோபி: ||

மது என்கிற அசுரனை அழித்த மதுஸுதனா!
முந்தைய காலம் தொடங்கி பல ஸத்புருஷர்கள் உன்னை துதி பாடி மகிழ்கின்றனர்....
அவர்களோ ப்ரேமபாவம் மேலிட்டு அதனால் குரல் தழுதழுக்க,  தங்களது இனிய ஈர சொற்களால் உன்னை பாடினர்....
 நான் நீசன் ,
என்னுடைய இந்த துதி முந்னோர்களை பார்த்து வேடம் பூண்டு கொண்டதே.
 இளைய புன்கவிதை  ஆகும்.

அப்படி இருக்க நீ ஏன் துதி செய்கிறாய் என்று கேட்டால்,

எந் புன்கவிதை மூலம் உன்னுடைய தயா குணம் (பொறுமை குணம்)  ஒரு இலக்கு பெற்று இன்னும் தெளிவாக அனைவருக்கும் தெரியுமே!

( இப்படி ஒரு நீசன் எழுதும் கதைகளை படித்து வந்து ஆதரவு தரும் அனைவரின் பொறுமையான தன்மைக்கும் அடியேனுடைய க்ருத்க்ஞை...)

{ உங்களது பொறுமை குணம் நன்றாக ப்ராக்கசிக்கிறது }...
--------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ க்ருஷ்ண ஜனன உத்ஸவம்
~~~~~~~~~~

கோப்ய:ஸும்ருஷ்ய மணிகுண்டல நிஷ்க கண்ட்ய:
சித்ராம்பரா:பதி சிகாச்சுத மால்யவர்ஷா:|
நந்தாலயம் லவலயா வ்ரஜதீர் விரேஜீர்
வ்யாலோல குண்டல பயோதர ஹாரசோபா :||

கோகுலம் அழகான சின்ன கிராமம்,
யமுனை நதிக்கரையில் உள்ளது அந்த கிராமம்.
பிருந்தாவனமும் இதன் அருகிலேயே உள்ளது.
நல்ல செழிப்பும்,  வனப்பும் உடையது..

ஒவ்வொரு வீட்டிலும் ஆயிரக்கணக்கான பசுக்கள் உள்ளது.  அவை அனைத்தும் வள்ளல் பெரும் பசுக்கள்...  இரவு முழுவதும் மழை பெய்ததின் காரணமாக இன்னும் கோபிகள் பசுக்களில் பால் கறக்க வரவில்லை...  ஆகையால் மாடுகள் அனைத்தும் உறுமி உறுமி பாலை கக்குகிறது.
ஆகவே அந்த பால்களெல்லாம் நடுவீதியில் வந்து க்ஷீராப்தி நாதன் இங்கு குழந்தையாக வந்திருக்கிறான் என்று காட்டுவது போல் உள்ளதாம்...  பொழுது விடிந்ததும் வாசலில் கோலமிட வந்த கோபிகள் எல்லாம் பேசிக்கொள்கிறார்களாம்....  யசோதைக்கு போய் பார்த்தியாடீ என்ன குழந்தை பிறந்து இருக்கு என்று ஒருத்தி ஒருத்தியிடம் கேட்க,  அதற்கு அவள்,
என் மாமி போனார் இன்னும் வந்த பாடில்லை என்கிறாளாம். இன்னொரு கோபி பெண் குழந்தை பிறந்தது என்று சொல்கிறாளாம்,  இன்னொரு கோபி ஓடிவந்து  "பெண் குழந்தை இல்லைடீ அது ஆண் குழந்தை தான் ". நான் பார்த்து விட்டு வந்துட்டேன்.  இன்னொரு கோபி சொல்ராலாம் எங்க மாமியார் பெண் குழந்தைனா பிறந்திருக்கு சொன்னாள்.  அதெல்லாம் இல்லைடீ ஆண் குழந்தை பிறந்துள்ளது நான் நன்றாக பார்த்தேன்,   அந்த குழந்தை எப்பிடி இருக்கு தெரியுமோ?  அது இப்போ வந்து பிறந்த குழந்தை மாதிரி இல்லைடீ,  பிறந்து ஒரு வருஷம் ஆன குழந்தை மாதிரி இருக்கு.  தொட்டில்ல படுக்க வச்சா எழுந்து உட்கார்ந்து கொண்டு விளையாடர்த்து,  வரவா,  போறவா எல்லோரையும் அது விசாரிக்கிறது இங்கு இங்கு ன்னு பேசறதுடீ.
அழகா இருக்கு,  பார்த்தா திரும்பி வரணும்னே தோணல.  இப்படி சொன்னாலோ இல்லையோ அந்த அத்புத பாலகனை பார்க்கணும்னு நினைத்து கொண்டு,  கோபிமார்கள் எல்லாம் துள்ளி ஓடி வருகிறார்களாம்...  அப்படியே உதிரி பூவை எடுத்து தலையில் வைத்து கொண்டாளாம் ஒருத்தி.
கண்ணாடி பார்காமலேயே குங்குமத்தை அப்பீண்டாலாம் இன்னொரு கோபி...  கைகளில் சில பேர் வெல்லம் எடுத்து கொண்டு வருகிறார்களாம்.  சிலபேர் கற்கண்டு எடுத்து கொண்டு வருகிறார்களாம். சிலபேர் பால் எடுத்து கொண்டு வருகிறார்களாம். சிலபேர் மஞ்சள் எடுத்து கொண்டு வருகிறார்களாம்.  இப்படி மங்களமான த்ரவ்யங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு ஓடி வருகிறார்களாம். அவர்கள் ஓடி வரும் போது கைகளில் இருக்ககூடிய வளையல் கிணுக் கிணுக்னு சப்தம் கேட்கிறதாம்,  கால்களில் இருக்ககூடிய கொலுசு மெட்டி எல்லாம் ஜல் ஜல் சப்தம்தர,  இது போதாது என்று இவர்கள் ஒருவருக்கு ஒருவர் கூப்பிட்டு கொள்ளும் சப்தம் வேறு.  (அவ்வளவு சந்தோஷம் என்று அர்த்தம்). இவர்கள் அனைவரும் சந்தோஷமாக ஓடி வந்தாலும்,  இன்னிக்கு தானே க்ருஷ்ணன் பிறந்துள்ளான்,  12ம் நாள்தானே புண்யாஹாவாசனம் செய்து தொட்டிலிடுவார்கள்...  பார்க்க வந்தால் கண்ணணை காட்டுவார்களா என்ன?  இவர்களோ எதையும் லட்சியம் செய்யாதபடி நந்தகோபனுடைய மாளிகைக்குள் வந்தும் விட்டார்கள்..

 ஆனால் அங்கு ஒரு பாட்டி தனியாக உட்கார்ந்து கண்ணணை மடியில் போட்டு கொண்டு உள்ளாள். (அவ மட்டும் தான் இருக்கலாமாம்  வேற யாரும் வரகூடாதாம்).

எல்லாருமா ஒன்று கூடி பாட்டீ ன்னு கூப்படராலாம்....  பாட்டி கோவத்தோடு என்னடீ வேணும் என்று கேட்க, கொஞ்சம் குழந்தையை காட்டுங்கோ பாட்டி ன்னு சொல்ல,  "போடி போடி இன்னிக்கு குழந்தை காட்டுவதா?  இன்னிக்கு காட்டவே மாட்டேன், புண்யாஹாவாசனம் செய்து தொட்டிலிடுவார்கள் அன்று பார்த்து கொள்ளுங்கள் " என்று சொல்லி  எல்லோரையும் போங்கடீ என்று விரட்டி விரட்டி சொல்கிறாளாம் அந்த பாட்டி,  விரட்டினாலும் இவர்கள்
இல்ல பாட்டி கொஞ்சம் காட்டுங்கோ,  பார்த்ததுட்டு ஓடி போய்டரோம், யார் கிட்டகயும் பார்த்தேன்னு கூட சொல்ல மாட்டோம் பாட்டி என்று சொல்லும்போதே தூரத்தில் இருந்து அனுபவிக்கும் போதே கண்ணனின் சின்னூன்டு விரல் தெரிகிறதாம்,  துக்குனூண்டு பாதம் தெரியர்தாம்,
இதை பார்த்த கோபிகள் நானும் பார்க்கணும் நானும் பார்க்கணும்னு  அடித்து கொள்கிறார்கள்....   நான் பார்க்கல பாட்டி,  எந் கையில கொடுங்கோ பாட்டி,  என் மடியில கொஞ்சம் விடுங்கோ பாட்டி என்று கத்தி கதறுகிறார்களாம் கோபிகள்.  எதையுமே காதில் வாங்காமல் அவள் ஒருத்தியாகவே நம் கண்ணனை வைத்துக் கொண்டு உள்ளாலாம்.. அவள் யாருக்கும் தரமாட்டேன் "போங்கடீ அசடுகளா " என்று சொல்ல....

அஹோ சிரஸி தாரயே,
நயநயோ: முகஸ்பர்ஸயே
ஹ்ருதி ப்ரசுரம் அர்பயே,
ஹ்ருதய மத்ய மாவேசயே என்று கூறி அழுகிறார்கள் கோபிகள்...

அஹோ சிரஸி தாரயே.:-
யசோதா ராணி கொஞ்சம் சொல்லுங்கள் இந்த பாட்டியிடம், இந்த கண்ணனை பார்க்காமல் இருக்க முடியாது
பத்து நாட்கள் வரையில் எப்படி இருக்கும் எங்களுக்கு மூச்சு திணறி விடும், ஆகையால் உடனே கொடுங்கோ பாட்டி என்கிறாள் ஒருத்தி,
பாட்டி என்னடீ பண்ணுவ என்று கேட்க
அஹோ சிரஸி தாரயே -தலையில் வைத்து கொண்டு குதிப்பேன் என்று ஒருத்தி சொல்ல அட சீ போடீ பூவா இவன்
உன் தலையில் வைத்துக் கொள்ள,
இன்னொருத்தி அந்த சின்ன கால்களை கண்ணுல ஒத்திக்கறேன்,
அவனோட பிஞ்சு கைகளை முத்தம் கொடுக்கிறேன் நயநயோ:முகஸ்பர்ஸயே என்று,

 ஹ்ருதி ப்ரசுரம் அர்பயே கண்ணுல ஒத்தீண்டா போதுமாடீ என் மார்போட மார்பா  சாத்திக்கணும்டீன்நு ஒருத்தி சொல்ல,
மற்றொருத்தி மேல சாத்தீண்டா போதுமாடீ ஹ்ருதய மத்ய மாவேசயே
ஹ்ருதய கமலத்துக்குள்ளே வைக்க வேண்டும் அவனை.

 இப்படி தரிசனம் பண்ணிய மாத்திரத்திலேயே கையும் காலும் பறக்கிறது அவர்களுக்கு....

 இவர்களுடைய ஆசைகளை பார்த்த நந்தகோபன் முதலான அனைவரும் சரி,  எல்லோரும் பார்க்கும் படியாக இன்றைக்கே தொட்டில் போட்டு விடுவோம் என்று,  தொட்டில் போட்டு,  அதில் குழந்தை கண்ணனை விட்டால்
எல்லாரும் அவரவர் இஷ்டபடி குழந்தையை பார்க்கிறார்களாம்

மாணிக்கம் கட்டி வைரமிடைகட்டி  ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறு தொட்டில்  பேணி உனக்கு பிரம்மன் வீடு தந்தான் மாணி குரலனே தாலேலோ
வையமளந்தானே தாலேலோ  என்று அனைவரும் தாலாட்ட கண்ணன் கண்கள் துயில்கிறான்.... நாமும் கண்ணனை தாலாட்டுவோம்....

தாஸானு தாஸன் ரமணா..