Chandra Grahanam சந்திர கிரஹண Lunar Eclipse

ஆகஸ்ட் 7ம் தேதி சந்த்ர க்ரஹணம். இந்த க்ரஹணம் திருவோணம் நட்சத்திரத்தில் வருவதால் இந்த நட்சத்திரக்காரர்கள் மற்றும் மகர ராசியை சேர்ந்தவர்கள் விதிப்படி செய்து கொள்ள வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. "த்ரிஷட்டஸாயோபகதே நராணாம் ஸுபப்ரதம் ஸ்யாத்க்ரஹணம் ரவீந்த்வோ: த்விஸப்த ஸந்தேஷு ச மத்யமம் ஸ்யாச்சேஷேஷ்வ நிஷ்டம் முனயோ வதந்தி" என்பதால் ஜன்ம ராசியிலிருந்து 3, 6, 10, 11 ஸ்தானங்களில் க்ரஹணம் ஸம்பவித்தால் அது சுபம். 2, 7, 9 ராசிகளுக்கு மத்யம பலன். 1, 4, 5, 8, 12ல் அசுபம் என்று மஹரிஷிகள் தெரியபடுத்துகிறார்கள். அதனால் மஹரிஷிகளின் வாக்கின்படி மிதுனம், கன்னி, துலாம், கும்பம் ராசிக்காரர்களும் சாந்தி செய்து கொள்ள வேண்டும். ஜோதிட சாஸ்த்திரத்தின் படி பல்வேறு ராசிகளின் பலன்கள். மேஷம் - சுகம், ரிஷபம் - மானக்கேடு, மிதுனம் - மரணபயம், கடகம் - பெண்களினால் கஷ்டம், சிம்மம் - ஸௌக்கியம், கன்னி - கவலை, துலாம் - சரீர உபாதை, விருச்சிகம் - தனலாபம், தனுசு - காயம், மகரம் - மூளையதிர்ச்சி, கும்பம் - கேடு, மீனம் - லாபம். மேலே கூறிய பலன்கள் 6 மாதங்களில் ஏற்படும். 2) என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? க்ரஹண சாந்திக்கு ஜோதிட, தர்மசாஸ்திர நூல்கள் 3 வகையான சாந்திகளை பரிந்துரைக்கின்றன. அவை 1) பிம்ப தானம் 2) மந்த்ர ஸ்நானம் 3) ஓஷதி ஸ்நானம். இவற்றில் ஏதாவது ஒன்றை செய்து கொள்ளலாம். 3) க்ரஹண நாளன்று செய்யக் கூடியவை என்ன? செய்யக்கூடாதவை என்ன? இரவில் இரண்டாவது ஜாமத்தில் க்ரஹணம் ஏற்படுவதால் முதல் மூன்று ஜாமங்கள் க்ரஹணத்தின் தாக்கம் இருக்கும். அதனால் மதியம் 12.10 லிருந்து க்ரஹணத்தின் தாக்கம் இருப்பதால் அதற்குள் சாப்பிட வேண்டும். ஆனால் வயதானவர்கள், வியாதியஸ்தர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மாலை 4.56மணி வரை அவகாசம் உள்ளது. அதன் பிறகு அவர்களும் எதுவும் சாப்பிடக்கூடாது. முடியாதவர்கள் இரவு 8.08மணி வரை ஏதாவது ஸாத்வீகமான பதார்த்தங்களை எடுத்துக் கொள்ளலாம். 4) இரவு 12.48மணிக்கு மோக்ஷானந்தரம் மோக்ஷ ஸ்நானத்தை ஆசரித்து எல்லோரும் மிதமான ஆகாரத்தை எடுத்துக் கொள்ளலாம். 5) க்ரஹண சமயத்தில் தூங்கினால் வியாதியும், மூத்ர விஸர்ஜனம் செய்தால் தரித்திரமும், மல விஸர்ஜனம் செய்தால் கிருமி வியாதியும், உடல் உறவு மூலம் பன்றி பிறப்பும், ஸ்நானம் மூலம் குஷ்டரோகமும், சாப்பிடுவதன் மூலம் நரகமும் கிடைக்குமென்று பல சாஸ்திரங்கள் கூறுகின்றன. 6) க்ரஹணத்திற்கு முன் சமைத்தவை பின்னர் உபயோகப்படாதா? க்ரஹணத்திற்கு மமுன் சமைத்தவை க்ரஹணம் முடிந்த பிறகு சாப்பிடக்கூடாது. ஆனார் இதில் சில விலக்குககள் உள்ளன. கஞ்சி, மோர், நெய், பால் இவற்றிற்கும் மற்றும் இவற்றை கொண்டு சமைத்த பதார்த்தங்களுக்கும் தோஷம் இல்லை. ஆனால் "குஸாந்தராளம் குர்வீத" என்பதிற்கேற்ப அவற்றில் தர்ப்பைகள் போட்டிருக்க வேண்டும். 7) க்ரஹண சமயத்தில் மந்திர ஜபம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்களே? "ஸ்வஸ்வேஷ்ட தேவதா மந்த்ர ஜபம் குர்யாத் ப்ரயத்னத: யதாசக்தி ஜபேத்தேவீம் காயத்ரீம் ப்ரயதஸ்ஸதா சந்த்ர ஸூர்யோபராகேது மாலின்யமபாத் பவேத்" என்று புராண, தாந்த்ரீக வசனங்களின்படி க்ரஹண சமயத்தில் இஷ்ட தேவதா மந்த்ர ஜபம் செய்யவில்லை என்றால் மந்திரம் சக்தியற்று போய்விடும் என்று கூறியுள்ளபடியால் குருமுகமாக உபதேசிக்கப்பட்ட மந்திரத்தை விதிப்படி ஜபிக்க வேண்டும். எந்த மந்திரமும் தெரியாதவர்கள் உபநயனமாகி இருந்தால் காயத்ரி மந்திரத்தை விதிப்படி ஜபிக்க வேண்டும். மற்றவர்கள் பகவானை நினைத்து தியானம் செய்ய வேண்டும். 8) இந்த க்ரஹணத்திற்கு வேறு ஏதாவது விசேஷம் உண்டா? இருக்கிறது. சந்த்ர க்ரஹணம் திங்கட்கிழமை அன்று ஏற்பட்டால் அதற்கு சூடாமணி க்ரஹணம் என்று பெயர். இதைப் பற்றி சாஸ்திரம் "வர்ஷேஷன்வேஷு யத்புண்யம் க்ரஹணே சந்த்ர ஸூர்யயோ: தத்புண்யம் கோடிகுணிதம் க்ராஸே சூடாமணௌ ஸ்ம்ருதம்" சாதாரண சந்த்ர க்ரஹணத்தை விட இந்த சூடாமணி க்ரஹணம் ஸ்நானம், தானம், ஜபம், ஹோமம் ஆகியவற்றின் மூலம் கோடிக்கணக்கான பலனை தந்தருளும் என்பது வியாஸ மஹரிஷியின் வாக்கு.

Chandra Grahanam on August 07, 2017
Begins : 10:50 PM, Middle: 11:47 PM, Ends 12:44 AM
Those born in the the stars Rohini, Hastam, Uttiradam, Thiruvonam, Avittam, Rohini should perform Shanthi
ग्रहण पीडा परिहार श्लोक:
योसौ वज्रधरो देव: आदित्यानां प्रभुर्मत:।
सहस्रनयन: चन्द्र:  ग्रहपीडाम् व्यपोहतु।।
க்ரஹண பீடா பரிஹார ஸ்லோகம்
யோஸௌ வஜ்ரதரோ தேவ: ஆதித்யானாம் ப்ரபுர்மத: I
ஸஹஸ்ர நயனஸ்சந்த்ர:  க்ரஹபீடாம் வ்யபோஹது II

க்ரஹணம் பற்றி சில குறிப்புகள்
1.ஸூர்ய க்ரஹணம் பிடிப்பதற்கு 4 ஜாமத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.
2.சந்த்ர க்ரஹணம் பிடிப்பதற்கு 3 ஜாமத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.
3.க்ரஹணம்  பிடிக்கும் போது சமுத்திர கரையில் தீர்த்தாமாடலாம்(க்ரஹணம்  விட்ட ஸ்நானம் ப்ரதமையாக இருந்தால்  சமுத்திரத்தில் கூடாது)
4.பஹிஷ்டாஸ்த்ரீ ( தூரமனாள்)கூட க்ரஹன ஸ்நானம் செய்ய வேண்டும்.
5.க்ரஹணம் காலத்தில் எல்லா தீர்த்தமும் கங்கைக்கு சமம். எல்லா ப்ராஹ்மணர்களும் வஸிட்டருக்கு சமம்.
6.க்ரஹணம் விடும் வரை தீபம் ஏற்றி வைக்க வேண்டும் ⚘மேலும் காயத்ரி ஜபம் செய்யணும்.
7.க்ரஹண காலத்தில் கர்ப்பிணிகள் வெளியில் வரக்கூடாது
8.க்ரஹணத்திற்கு முன் பக்வம் செய்த அன்னம் மீண்டும்  பயன்படுத்த கூடாது.
9.க்ரஹணத்தில் ஜபம்/ தானம்  அபரிமிதமான பலனை தரும்.
10.ஸூர்ய க்ரஹணத்தில் தர்ப்பணம் செய்த அன்று பலகாரம் பண்ண வேண்டாம்.
11.க்ரஹண தர்ப்பணம் மிக விசேஷமானது
12.சூர்ய க்ரஹணம் பிடித்த உடனேயும்/ சந்திர கிரகணம் பின் பாதியில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
13.சமுத்திர ஜலத்தில்  பித்ரு தர்ப்பணம்செய்யலாம், ஆனால் ஆசமனம் செய்ய கூடாது (தீர்த்தாமாடி மடியாக ஜலம் எடுத்துக் கொண்டு சென்று தான் ஆசமனம் செய்ய வேண்டும்.
குறிப்பு: மீண்டும் பயன்படுத்த வேண்டியப்பொருள்களில் தர்ப்பயை சேர்க்கவும்.

க்ரஹண ஸ்லோகம்
=========== ============
இந்த்ரோ நலோ, யமோ, ரக்ஷோ வருணோ வாயு ரேவச குபேர ஈஸோ நிக்நந்து  உபராகோத்த வ்யதாம் மம ||

கிரஹண புண்யகாலம் இரவு 10.53 மணி முதல் 12.48 மணிவரை
இரவு 10.54 உபராக ப்ராரம்ப ஸ்நானம்
மந்திர ஜபங்கள்
இரவு 11.50 மணி உபராக பித்ரு தர்ப்பணம் தானங்கள்
இரவு 12.50. மணிக்கு மேல் உபராக பூர்த்தி ஸ்நானம்

உபராக என்றால் என்ன?.
ஸோம உபராக - ஸோமோபராக என்றால் சந்த்ர க்ரஹணம்.

க்ரஹணம் ஆரம்பித்தவுடன் ஸ்நானம் செய்து க்ரஹண காலம் முழுவதும் ஜபம் செய்யலாம். பின் க்ரஹணம் முடிந்தபின் ஸ்நானம் செய்ய வேண்டும். இது எல்லோருக்கும் - ப்ரஹ்மசாரி, க்ருஹஸ்தர், தாய்-தந்தை உள்ளவர், அல்லாதவர் எல்லோருக்கும் பொருந்தும்.

today's star is thiruvonam. i am able to understand that pariharam is required for uththiradam, thiruvonam and avittam being the previous and next stars. how rohini and hastham are included. நக்ஷத்ரங்கள் ஒன்பது ஒன்பதாக பிரிக்கப்பட்ட மூன்று சுற்றுகளாக கணக்கிடப்படும். ஒவ்வொரு நக்ஷத்ரத்திற்கும் பத்தாவது மற்றும் பத்தொன்பதாவது ஜன்ம, அனுஜன்ம நக்ஷத்ரங்கள் எனப்படும். பலவிதமான பலன்கள் இந்த நக்ஷத்ரங்களுக்கு ஒரே விதமாக இருக்கும்.
இன்று க்ரஹணம் ஸம்பவிக்கும் ச்ரவண நக்ஷத்ரத்தின் ஜன்ம, அனுஜன்ம நக்ஷத்ரங்கள் ரோஹிணி மற்றும் ஹஸ்தம். ஆகவே அவர்களும் சாந்தி பரிஹாரம் செய்து கொள்ள வேண்டும்.

should the dhanam / shanthi / pariharam to be given or done during the grahanam or after the completion of grahanam after taking the bath?  க்ரஹண ஸமயத்தில் செய்யும் ஜபங்கள், தானங்கள், தர்ப்பணம் இவையெல்லாம் அபரிமிதமான  பலன் கொடுக்கும். ஆகவே க்ரஹணம் ஆரம்பித்தவுடன் ஸ்நானம் செய்து விட்டு க்ரஹணம் முடிவதற்குள் இவைகளையெல்லாம் செய்து விட்டு க்ரஹணம் முடிந்தபின் மீண்டும் ஸ்நானம் செய்ய வேண்டும். க்ரஹண நேரத்தில் தானம் வாங்கிக்கொள்ளக்கூடியவர்கள் யாரும் கிடைக்கவில்லை என்றால், அந்த நேரத்திலேயே ஸங்கல்பம் செய்து தத்தம் செய்து எடுத்து வைத்துவிட்டு மறுநாள் உரியவரிடம் கொடுத்துவிடலாம்.

க்ரஹண தர்ப்பணம், க்ரஹண ஆரம்பத்தில் செய்ய வேண்டுமா அல்லது முடியும் பொழுது செய்ய வேண்டுமா? சூர்ய க்ரஹணத்திற்கு இது வேறுபடுமா?  ஆம். ஸூர்ய க்ரஹணத்தில் க்ரஹணம் ஆரம்பித்தவுடன் செய்ய வேண்டும். சந்த்ர க்ரஹணத்தில் க்ரஹணம் விட ஆரம்பித்தவுடன் முடிவதற்குள் செய்யவேண்டும். (thanks & courtesy sri.t.s.hariharan, lowkikasree)

கிரஹன நேரத்தில் சந்திரனை பார்க்கலாமா? பார்க்கலாம். (courtesy sri.t.s.hariharan, lowkikasree)

உணவு பொருட்கள் அல்லது தயிர்,பால் போன்றவைகள் மீதிஇருந்தால் கிரஹணம் பிடிப்பதற்கு முன்பு அவற்றில் தர்ப்பையை சேர்த்து விட்டால் உபயோகப்படுத்தலாம். - சர்மா சாஸ்த்ரிகள்                      
கிரஹண காலத்தில் தானம் செய்வது பல மடங்கு பலன் தரும். தர்ப்பணம் செய்பவர்கள் தாம் தானம் செய்யவேண்டும் என அவசியமில்லை. - சர்மா சாஸ்த்ரிகள்                      

இன்றைய கிரஹணத்தில் மதியம் 12 மணிக்குள் ஆஹாரம். வயதானவர்களும், உடல் நலம் சரியில்லாதவர்களும் திரவ்ய்மாக  மாலை 6 மணிக்கு முன்பு உட்கொள்ளலாம். - சர்மா சாஸ்த்ரிகள்                      
க்ரஹணம் தானம் எதெல்லாம் கொடுக்கலாம்?
ஸ்வர்ணம், தான்யங்கள், தேங்காய், பழம் தக்ஷிணை உட்பட எது வேண்டுமானாலும் கொடுக்கலாம். (நன்றி : ஹரிஹரன், லௌகீகஶ்ரீ)                      
க்ரஹணம் முடிந்த பிறகு உடனே குளிக்க வேண்டுமா, இல்லை கை கால் அலம்பி ப்ரோக்க்ஷனம் செய்து விட்டு காலையில் குளித்தால் போதுமா?
க்ரஹணம் முடிந்தவுடன் ஸ்நானம் அவச்யம். இதற்கு ப்ரோக்ஷணம் எல்லாம் போதாது. முடியாதவர்கள் காலையில் எழுந்தவுடன் ஸ்நானம் செய்ய வேண்டும். (நன்றி : ஹரிஹரன், லௌகீகஶ்ரீ)                      

பணம் இருந்தால் என்ன படிப்பு வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் வேதம் படிக்க வேண்டுமானால் தாய் தகப்பன் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே குழந்தைகள் வேதம் படிக்க முடியும்.                      

Namaskaram Mama. I have my periods so I cannot chant any mantras so how can I clear my Dosham? Should I have to shower twice too? Kindly advice.
Ladies having periods can not chant any slokas. Do not worry. After the 'periods' you can chant the slokas. No dosham. However let me hasten to add that the ladies in the periods are supposed to take the 'Moksha snanam' ie at the end of grahanam. - Sarma Sastrigal

சந்திர கிரஹண தர்ப்பண ஸங்கல்பம்
நாள்:  திங்கட் கிழமை 07-08-2017
ஹேவிளம்பி நாம ஸம்வத்ஸரே தஷிணாயணே க்ரீஷ்மருதௌ கடக (ஸ்ராவண) மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்யதிதௌ இந்துவாஸர  யுக்தாயாம்  ஸ்ரவண நக்ஷத்ர யுக்தாயாம் ஆயுஷ்மான்  யோக பத்ர  கரண ஏவங்குண விஶேஷண விஶிஷ்டாயாம் அஸ்யாம், வர்த்தமானாயாம் பூர்ணிமாயாம் புண்யதிதௌ ........................................
உபய வம்ஶ பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் ஸோமோபராக புண்யகாலே ஸோமோபராக  புண்யகால   ஶ்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

07.08.17 திங்கள் ஆடி  22. சந்திரகிரஹண புண்ய கால தர்பணம் இரவு 11.50 க்கு மேல் காலை .00.30 க்குள் செயவேண்டும்

பித்ரு தர்ப்பண மந்திரங்கள்

முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா.

பவித்ரம் (மூன்று புல்)வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும்.

இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும்.

ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.

ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்

அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி

மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம்

ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ

ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச

யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த

அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய

ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே

அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ:

தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம்

மத்யே ஹேமலம்ப

நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே  கிரிஷ்ம ருதெள கடகமாஸே சுக்ல பக்ஷே. பெளர்ணம்யாம் புண்ய திதெள இந்துவாஸர யுக்தாயாம்  ஸ்ரவன நக்ஷத்ர யுக்தாயாம் .  ஆயுஷ்ய நாமயோக   பத்ரைகரன ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டானாம் வர்தமானாயாம்

பெளர்ணம்யாம் புண்ய திதெள (பூணல் இடம்) ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் ……………ஸர்மணாம் வஸு ருத்ர

ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம்————

—-(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ

ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய

ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும்.

…………கோத்ராணாம்…………. சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ:

மாது:ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்தம்  ஸோமோபராக கேதுகிரஸ்த புண்ய கால ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

கையில் பவித்ரதுடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.

பூணல் இடம்: தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும் .அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச னூதனாஹா

அதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை.

தர்பையை எறிந்து விடவும் கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் இரைக்கவும்.

இந்த மந்த்ரம் சொல்லி.

அபஹதா அசுரா ரக்ஷாகும்ஸி பிஸாசா யே க்ஷயன்தி ப்ருதிவி மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன:

பூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)

அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுவோ

பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.

பூணல் இடம்: தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் ஸம்ப்ரதாயப்படி போட்டு ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும் ..

“ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச”

அஸ்மின் கூர்ச்சே ……………கோத்ரான் ………..ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான்…………

கோத்ரா:…………தா வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி. ஜீவனுடன்

இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.

மற்றொரு கூர்ச்சத்தில் அல்லது ஒரே கூர்ச்சத்தில் (ஸம்ப்ரதாய வழக்க படி) ……………

(அம்மா ஆத்து கோத்ரம்)………….ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு

ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. என்று “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்.

.

ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ்

ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ. என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி

ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்மூன்று

தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.

வர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்

இடது காலை முட்டி போட்டு கொண்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் தர்பணம் செய்யவும்.

1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ்தேனோ வந்து

பிதரோஹ வேஷூ…………கோத்ரான் ……..ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே

ஸெளமனஸே ஸ்யாம ……….கோத்ரான்……சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே

அவந்த் வஸ்மான் ………….கோத்ரான்……….ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் ………..சர்மணஹ

ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .

2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா

விப்யஸ் ஸ்வதா நமஹ …………கோத்ரான்……….ஸர்மனஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

.

2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ்

ஸ்வதயா மதந்தி. ………….கோத்ரான்……….ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ ……………கோத்ரான்…………..ஸர்மணஹ ஆதித்ய ரூபான்

ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.2: மது நக்த முதோஷஸீமது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா ………கோத்ரான்……….சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா

மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந:………..கோத்ரான் ………….ஸர்மனஹ ஆதித்ய ரூபான்

ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி \

மாத்ரூ வர்க்கம்:

…………….கோத்ராஹா……….தாஹா வஸு ரூபாஹா மாத்ரூ:ஸ்வதா நமஸ் தர்பயாமி…….மூன்று முறை

கோத்ராஹா………….தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை;

கோத்ராஹா………தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

மாதா மஹ வர்க்கம் தர்பணம்:

1.1: உதீரதாம்+ஹவேஷு …………கோத்வதான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.2 அங்கிரசோ+ ஸ்யாம……….கோத்ரான் ………..சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.3 ஆயந்துனஹ+அச்மான்………கோத்ரான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1 ஊர்ஜம் வஹந்தீர்+பித்ரூன் ……….கோத்ரான்………ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.2 பித்ருப்யஸ்+நமஹ ………கோத்ரான்……..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.3 யே சேஹ +மதந்து……….கோத்ரான்…..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1 மதுவாதா+ஓஷதீ ………..கோத்ரான்…….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.2 மது நக்தம்+பிதா……….கோத்ரான்……..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.3 மது மான்+பவந்துநஹ ………கோத்ரான்………..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

…………..கோத்ராஹா………….தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

……………கோத்ராஹா…………தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

……….கோத்ராஹா……..தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

பூணல் வலம்

நமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை,

நமோவ: பிதரோ மன்யவே,நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் லோகேஸ்த யுஷ்மாகுஸ்தேனுயே

அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம் வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம்

வஸிஷ்டோ பூயாஸம்.

இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.

பூணல் இடம்.;

உத்திஷ்ட்த பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தாமன்வேதா புராணம் தத்தாதஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத்

பாகதான்தேவதாஸு. அல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி அஸ்மாத் கூர்ச்சாத்

பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான்

யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

பவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து

கையில் எடுத்து, யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத்

ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.

Kayena vacha Manesendryarva Budhyahmanath Prakrthe Swabavaath,

Karomi Yath Thath Sarvam Sriman Narayanethi Samarppayami.

காயேன வாசா மனசேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதிஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணா யேதி சமர்பயாமி.

--

A.N.RAVI(vedicravi)

GRAHANA (ECLIPSE) RULES AND OBSERVANCES AS PER HINDU DHARMA SHASTRA

UPCOMING CHANDRA GRAHANA (LUNAR ECLIPSE)  ON 7TH AUGUST 2017

Namaskaram. An eclipse is a rare divine phenomenon which has a very high significance in Hindu Dharma Shashtra. On 7th August 2017 Chandra Grahana will be visible in India and this celestial opportunity should not be missed for performing anshtanas recommended in the Dharma Shastras. These are Snana (Bath), Japa (mantra chanting), Tarpana (oblations to ancestors) and Dana (Donation) and again a bath after the eclipse.

The eclipse is a period where whatever you do multiplies by more than a 1000 times. For example if you do a Japa of “Om Namah Shivaya” once this will be equal to 1000 times. Similar for Dana and Tarpana. There is a very important speciality of this particular Grahana on 7th August 2017.

This Chandra Grahana occurs on a Monday which is the day of Moon so a special yog (celestial occurrence) is created. This yog is called Choodamani Yog as per Shastras. Therefore any Japa, Tarpana or Dana done during Choodamani yog will be automatically multiplied by 100,00,000 (one crore times). This means that the merits you will fetch by performing these anushtanas are more can a crore times. I list down the procedure to observe this Chandra Grahana with timings applicable for India.

Chandra Grahana sets on 7th August 2017 at 10.52pm and ends on 8th August 2017 at 00:48am (Total duration 1 hour 55 minutes). During Chandra Grahana all will get an Asoucham/Theetu/Impurity 9 hours before the prahar/yamam in which the grahana occurs. You need not worry about this calculation, as the time is already calculated. The Grahana/eclipse impurity with start from 12:43pm (afternoon) of 7th August 2017. This time is important to keep in mind as you cannot consume any food on 7th August 2017 after 12:43pm till end of eclipse. This means you should remain fasting from 12:43pm upto the end of Grahana. For the elderly, sick, children and pregnant women there is a relaxation that they can start their fast from 07:11pm on that day upto end of the grahana post midnight. Since from the beginning of this impurity 9 hours before the grahana the kitchen should be closed and no food should be cooked, the food cooked earlier in the day before 12:43pm can be consumed by these special category of people before 07:11pm.

What should you do before 12:43pm ? You should finish you morning breakfast and afternoon lunch before 12:43pm on 7th Aug 2017, then you should put minimum 2 blades of darba/kusha (grass) on top of each container of food items like, rice, atta, dal, raw vegetables, ghee, milk, curd, pickle etc. This darba grass is put to prevent the harmful radioactive waves generated during the eclipse from making the food harmful to us. Any food which is cooked on fire that day and has been consumed like, roti, chapatti, rice, sambar, curry etc should be thrown away and not kept in the fridge. Uncooked raw items to be used daily/regularly should be protected with darba grass blades.

Sharp at 10.52pm in the night when the actual Grahana period starts, you should have a head bath with clothes on (dhoti and angavastram/uparna) and during the bath chant the Chandra Grahana protection mantras which I have attached as a pic with this post. This grahana also affects people belonging to Uttarashada, Sravishta, Shravana, Rohini and Hasta Nakshatra. They need to write the “Janma Nakshatra Mantra/slokam” (given in at the end with this post at attachment pic) on a fresh/new white piece of  cloth and tie it around their forehead (paripattam) displaying this mantra outside on their forehead. This will protect them from the ill effects of the Grahana. This should be tied after bath and kept on forehead till the end of Grahana. After eclipse performing another bath they can remove the cloth.

As told earlier that the Grahana period amplifies your mantra japa crores of time. After bath, change to dry clothes (dhoti and angavastra) and sit on a mat and start “Mantra Japa”. Men who have had their upanayan sanskar can do Gayatri Japa. Each Gayatri you chant will give you merits or phal of 1 crore Gayatri chanting. Those who have not had upanayan sanskar/ladies and children can chant any mantra of their Ishta devata. Like “Om Namah Shivaya”, or “Om Vishnave Namaha” or “Om Durgayay Namaha” or even slokas or Sahasranamas. This mantra Japa should continue till the end of Grahana which is at 00:48am on 8th August 2017. In case you have some danam (donation) to give then you might have to cut short your japa at little before the end of the eclipse and make time to give dana.  Please note that this danam should be only done during the Grahana period for earning countless punya as Grahana has multiplying effects of whatever you do. Shastras say that any danam you give during Grahana is equivalent to Bhoomi danam (gifting a land). Shastras mention you can give gold/silver/rice/clothes/money to a needy brahmin. But keeping in mind the current modern time, many people who do not know the value of this time period for danam may express surprise you visiting them at midnight, you could think of an online transfer of money to save time. Please chant the same snana mantras before danam/donation too.

There one more important karma/duty to perform during Grahana which is for men who do not have father or father and mother. That is tarpana with til and water with sesame seeds. Doing a tarpana during the Grahana period satisfies our ancestors for 1000s of years, and more merits/punya is added to your spiritual account. This tarpana should be done 20 to 30 minutes before grahana ends. Since it should be completed before grahana adjust your time accordingly.
Therefore in nutshell during the beginning of Grahana take bath, then sit for mantra japa, danam if possible, then tarpana (only for those who don’t have father/ father and mother) and finally once the Grahana is over at 00:48am you should see the moon and then take another head bath compulsorily, with clothes. Then you can come change into dry clothes. If feeling hungry you can consume some fruits for the night (ensure that fruits also should have been covered by darba grass during the eclipse)

In case any women who is pregnant in the house she has to be extremely careful as Grahana could have harmful effects on the unborn baby and exposure to grahana period even if inside the house can cause deformity in the baby. Shastras mention that the pregnant lady should lie down in the centre of a room away from window on a mat, all doors of the house closed, covering her full stomach with darba grass (darba is scientifically proven to block radioactive Xrays) and covering herself in full blanket from head to toe. No body part should be exposed. She should lie down like this from start to end of Grahana period mentally chanting names of Kuladevata or Ishtadevata.

During Grahana period you also need to follow few more rules. No eating, no sleeping, no going to toilet to pass urine or stools, and no wasteful talking, no sex, no revenge full thoughts and compulsory bath at beginning and end of grahana. Failing to have bath will lead to being born as a leper for next 7 janmas as per Dharma Shastras.

These rules are for all varnas/castes as per Dharma Shastra and all should follow these rules of Chandra Grahana,

Knowingly or unknowingly in Kali Yuga all of us do lot of sins. This eclipse is a golden opportunity to increase your spiritual punya account/merit account. Do not miss this celestial opportunity at any cost. Feel free to write to me at vedaghosham@gmail.com or whatsApp or call on +91 9820711961.

Om Somaya Namaha

ஆகஸ்ட் 7ம் தேதி சந்த்ர க்ரஹணம். இந்த க்ரஹணம் திருவோணம் நட்சத்திரத்தில் வருவதால் இந்த நட்சத்திரக்காரர்கள் மற்றும் மகர ராசியை சேர்ந்தவர்கள் விதிப்படி செய்து கொள்ள வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. "த்ரிஷட்டஸாயோபகதே நராணாம் ஸுபப்ரதம் ஸ்யாத்க்ரஹணம் ரவீந்த்வோ: த்விஸப்த ஸந்தேஷு ச மத்யமம் ஸ்யாச்சேஷேஷ்வ நிஷ்டம் முனயோ வதந்தி" என்பதால் ஜன்ம ராசியிலிருந்து 3, 6, 10, 11 ஸ்தானங்களில் க்ரஹணம் ஸம்பவித்தால் அது சுபம். 2, 7, 9 ராசிகளுக்கு மத்யம பலன். 1, 4, 5, 8, 12ல் அசுபம் என்று மஹரிஷிகள் தெரியபடுத்துகிறார்கள். அதனால் மஹரிஷிகளின் வாக்கின்படி மிதுனம், கன்னி, துலாம், கும்பம் ராசிக்காரர்களும் சாந்தி செய்து கொள்ள வேண்டும். ஜோதிட சாஸ்த்திரத்தின் படி பல்வேறு ராசிகளின் பலன்கள். மேஷம் - சுகம், ரிஷபம் - மானக்கேடு, மிதுனம் - மரணபயம், கடகம் - பெண்களினால் கஷ்டம், சிம்மம் - ஸௌக்கியம், கன்னி - கவலை, துலாம் - சரீர உபாதை, விருச்சிகம் - தனலாபம், தனுசு - காயம், மகரம் - மூளையதிர்ச்சி, கும்பம் - கேடு, மீனம் - லாபம். மேலே கூறிய பலன்கள் 6 மாதங்களில் ஏற்படும். 2) என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? க்ரஹண சாந்திக்கு ஜோதிட, தர்மசாஸ்திர நூல்கள் 3 வகையான சாந்திகளை பரிந்துரைக்கின்றன. அவை 1) பிம்ப தானம் 2) மந்த்ர ஸ்நானம் 3) ஓஷதி ஸ்நானம். இவற்றில் ஏதாவது ஒன்றை செய்து கொள்ளலாம். 3) க்ரஹண நாளன்று செய்யக் கூடியவை என்ன? செய்யக்கூடாதவை என்ன? இரவில் இரண்டாவது ஜாமத்தில் க்ரஹணம் ஏற்படுவதால் முதல் மூன்று ஜாமங்கள் க்ரஹணத்தின் தாக்கம் இருக்கும். அதனால் மதியம் 12.10 லிருந்து க்ரஹணத்தின் தாக்கம் இருப்பதால் அதற்குள் சாப்பிட வேண்டும். ஆனால் வயதானவர்கள், வியாதியஸ்தர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மாலை 4.56மணி வரை அவகாசம் உள்ளது. அதன் பிறகு அவர்களும் எதுவும் சாப்பிடக்கூடாது. முடியாதவர்கள் இரவு 8.08மணி வரை ஏதாவது ஸாத்வீகமான பதார்த்தங்களை எடுத்துக் கொள்ளலாம். 4) இரவு 12.48மணிக்கு மோக்ஷானந்தரம் மோக்ஷ ஸ்நானத்தை ஆசரித்து எல்லோரும் மிதமான ஆகாரத்தை எடுத்துக் கொள்ளலாம். 5) க்ரஹண சமயத்தில் தூங்கினால் வியாதியும், மூத்ர விஸர்ஜனம் செய்தால் தரித்திரமும், மல விஸர்ஜனம் செய்தால் கிருமி வியாதியும், உடல் உறவு மூலம் பன்றி பிறப்பும், ஸ்நானம் மூலம் குஷ்டரோகமும், சாப்பிடுவதன் மூலம் நரகமும் கிடைக்குமென்று பல சாஸ்திரங்கள் கூறுகின்றன. 6) க்ரஹணத்திற்கு முன் சமைத்தவை பின்னர் உபயோகப்படாதா? க்ரஹணத்திற்கு மமுன் சமைத்தவை க்ரஹணம் முடிந்த பிறகு சாப்பிடக்கூடாது. ஆனார் இதில் சில விலக்குககள் உள்ளன. கஞ்சி, மோர், நெய், பால் இவற்றிற்கும் மற்றும் இவற்றை கொண்டு சமைத்த பதார்த்தங்களுக்கும் தோஷம் இல்லை. ஆனால் "குஸாந்தராளம் குர்வீத" என்பதிற்கேற்ப அவற்றில் தர்ப்பைகள் போட்டிருக்க வேண்டும். 7) க்ரஹண சமயத்தில் மந்திர ஜபம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்களே? "ஸ்வஸ்வேஷ்ட தேவதா மந்த்ர ஜபம் குர்யாத் ப்ரயத்னத: யதாசக்தி ஜபேத்தேவீம் காயத்ரீம் ப்ரயதஸ்ஸதா சந்த்ர ஸூர்யோபராகேது மாலின்யமபாத் பவேத்" என்று புராண, தாந்த்ரீக வசனங்களின்படி க்ரஹண சமயத்தில் இஷ்ட தேவதா மந்த்ர ஜபம் செய்யவில்லை என்றால் மந்திரம் சக்தியற்று போய்விடும் என்று கூறியுள்ளபடியால் குருமுகமாக உபதேசிக்கப்பட்ட மந்திரத்தை விதிப்படி ஜபிக்க வேண்டும். எந்த மந்திரமும் தெரியாதவர்கள் உபநயனமாகி இருந்தால் காயத்ரி மந்திரத்தை விதிப்படி ஜபிக்க வேண்டும். மற்றவர்கள் பகவானை நினைத்து தியானம் செய்ய வேண்டும். 8) இந்த க்ரஹணத்திற்கு வேறு ஏதாவது விசேஷம் உண்டா? இருக்கிறது. சந்த்ர க்ரஹணம் திங்கட்கிழமை அன்று ஏற்பட்டால் அதற்கு சூடாமணி க்ரஹணம் என்று பெயர். இதைப் பற்றி சாஸ்திரம் "வர்ஷேஷன்வேஷு யத்புண்யம் க்ரஹணே சந்த்ர ஸூர்யயோ: தத்புண்யம் கோடிகுணிதம் க்ராஸே சூடாமணௌ ஸ்ம்ருதம்" சாதாரண சந்த்ர க்ரஹணத்தை விட இந்த சூடாமணி க்ரஹணம் ஸ்நானம், தானம், ஜபம், ஹோமம் ஆகியவற்றின் மூலம் கோடிக்கணக்கான பலனை தந்தருளும் என்பது வியாஸ மஹரிஷியின் வாக்கு.

Thanks to Sri. T. S. Hariharan of LowkikaShree Sri. Sarma Sastrigal and Sri. Vedi Ravi VedaGhosham

கோத்ரம் & ப்ரவரம் - ஒர் அறிமுகம்

கோத்ரம் & ப்ரவரம் - ஒர் அறிமுகம்......

சமீபத்தில் உபநயனம் செய்வித்த ஒரு சிறுவன் தனது பெற்றோரிடத்தில் ஏன் பெரியவர்களுக்கு அபிவாதயே சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்க, அதற்கு பதில் என்னிடம் கேட்கப்பட்டது. இது பலருக்கும் உபயோகம் ஆகும் என்று தோன்றியதால் அங்கு டைப் செய்ததை இங்கும் இடுகிறேன். முதலில் கேள்விக்கான பதில் பிறகு அறிமுகம்.

அபிவாதனம் செய்யும் சமயத்தில் தாத்தா-கொள்ளுத்தாத்தா எல்லாம் வருவதில்லை. வேதகாலத்து ரிஷிகள், அதுவும் குறிப்பிட்ட கோத்திரத்தின் மூல புருஷர்கள் எனப்படும் ரிஷிகளது பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. அவரவர் குல முதல்வர்கள் என்னும்படியான ரிஷிகளைச் சொல்லி அவர்களது வழியில், இந்த கோத்திரம்-ஸூத்ரம் சார்ந்த நான் வணங்குகிறேன் அப்படின்னு சொல்லுகிறோம்.

அபிவாதனம் செய்வதன் மூலம் நாம் நமஸ்காரம் செய்பவருக்கு நம்மைப் பற்றிய ஒருவித வைதீக அறிமுகம் செய்துகொள்கிறோம். இதைச் சொன்னால் இன்றைய தலைமுறை எதற்கு சந்தியாவந்தனத்திலும், நமது கோத்ரம்-ஸூத்ரம் தெரிந்தவர்களுக்கும் இதைச் சொல்லவேண்டும் என்று இன்றைய சிறுவர்கள் கேள்வி கேட்பார்கள்.

சாதாரணமாக கோவிலில் ஒரு அர்ச்சனை செய்தாலேயே அதில் நமது கோத்ரம், பெயர் சொல்லிச் செய்கிறோம். அதாவது கோத்ரம்+பெயர் ஒரு யூனிக் ஐடண்டிட்டி [ஓட்டர் ஐடி, பான் கார்ட் போல] தந்து அதனைச் சொல்லுவதன் மூலமாக கர்மாவினது/அர்ச்சனையின் பலன் நம்மை அடையச் செய்கிறது. இது போன்றே இந்த கோத்ரம்+ஸூத்ரத்தை சார்ந்த நான் உன்னை வணங்குகிறேன் என்று சந்த்யா தேவதை-சூர்யனை வணங்குகிறோம்.

நம்பிக்கை என்பது இருக்குமானால் அது மந்திரத்தின் மீது மட்டுமல்லாது, முழுச் சடங்கின் மீதும் இருக்க வேண்டும். மந்திரத்தை நம்புவோமானால், அதைத் தந்த நமது ரிஷிகள் பெயரைச் சொல்ல யோசனை ஏன் என்று கேட்க வேண்டும். மற்ற செயல்களின்றி மூல மந்திரத்தை மட்டும் நான் ஜபம் செய்கிறேன் என்பது தவறு என்று குழந்தைகளுக்குப் புரியச் செய்ய வேண்டும். அபிவாதனத்தில் ரிஷிகளது பெயரைச் சொல்லுவதன் மூலமாக குல முதல்வர்களான ரிஷிகளை அவ்வப்போது நினைவில் கொண்டு வந்து, அவர்களது அளப்பரிய செயல்களை நமது மனதில் கொண்டு வருவதன் மூலம் நாமும் நமது செயல்களை நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணம். இவ்வாறு மூல ரிஷிகளது வரலாற்றை நாம் முதலில் தெரிந்து கொண்டு உபநயன காலத்தில் சிறுவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.

"ரிஷி" என்ற சொல்லுக்கு 'பார்ப்பவர்' என்ற பொருளுண்டு. சாதாரணமாக நம்மால் பார்க்க முடியாதவற்றையும் தமது தபோ-பலத்தால் ப்ரத்யக்ஷமாகவும், தமது அனுபவத்தாலும் அறிந்து அதனடிப்படையில் தமது கர்மாக்களை வகுத்துக்கொண்டு அதனடிப்படையிலேயே வாழ்ந்தவர்கள். அவர்களது வழி வருபவனான நான் உங்களை நமஸ்கரிக்கிறேன் என்று சொல்லுவதே அபிவாதனம்.

அபிவாதனம் செய்கையில் சொல்லும் மந்திரத்தில் சொல்லுவது நமது கோத்ரம், ப்ரவர ரிஷிகள், நமது ஸூத்ரம் மற்றும் நமது சர்மா நாமா ஆகியவை மட்டுமே. இவற்றில் கோத்ரம் என்பது என்ன?, ப்ரவரம் என்பது என்ன என்று பார்க்கலாம்.

ஆபஸ்தம்பர், போதாயனர் போன்ற மஹரிஷிகள், கோத்ரம் என்ற பதத்திற்கு வம்சம், சந்ததி, குலம், பரம்பரை ஆகியவற்றையே பொருளாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. கோடிக்கணக்கான கோத்ரங்கள் இருப்பதாக ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறதாம். அவற்றில் தற்போது இருப்பவை என்பதாக 49ஐ போதாயனர் வரிசைப்படுத்தியிருக்கிறார்.

'அபிவாதயே' என்று ஆரம்பித்தவுடன் அவரவர் கோத்ரத்திற்கான மூல ரிஷிகளின் பெயரைச் சொல்லுகிறோம், அவர்கள் அந்த கோத்ரத்தின் ரிஷிகள். யாரெல்லாம் கோத்ர ரிஷிகள் என்றால், மொத்தம் பத்து பெயர்களை கோத்ர ரிஷிகளாக ஸ்மிருதியில் சொல்லியிருக்கிறார்கள். சில ஸ்மிருதிகளில் எட்டு (8) என்றும், சிலவற்றில் பத்து (10) என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாக தெரிகிறது.

ப்ரும்மாவின் புத்ரகளான,ப்ருகு, அங்கிரஸ், மரீசி, அத்ரி ஆகிய நால்வர் மற்றும் இவர்களில்,ப்ருகுவின் புத்ரரான ஜமதக்னி, அங்கிரஸரின் புத்ரகளான கெளதமர், பரத்வாஜர், மரீசியின் புத்ரரான கஸ்யபர், வஸிஷ்டர், அகஸ்தியர் மற்றும் அத்ரியின் புத்ரரான விஸ்வாமித்ரரும் கோத்ர ரிஷிகளில் வரும் மூலவர்கள்.

கோத்ர ரிஷிகள் 8 என்று சொல்லும் ஸ்மிருதிகள், மேற்சொன்ன புத்ரர்களான 7 நபர்களையும், அத்ரியையும் சேர்த்து 8 ரிஷிகளாக குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லுகிறார்கள். ப்ருகு மற்றும் அங்கிரஸ் ஆகிய இருவர்கள் பற்றி ஸ்மிருதிகளில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறதால் அவர்களையும் சேர்த்து 10 ரிஷிகள் என்பதாக சில ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக யார் எந்த கோத்ரத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த 10 ரிஷிகளில் ஒருவராவது அபிவாதனத்தில் வரும் ரிஷிகளாக இருப்பார்கள். இவ்வாறு இருப்பதால் இவர்கள் கோத்ர ரிஷிகள் என்றும் பெயர் வந்தது.

திருமணம் மற்றும் மஹா யாக, யஞ்யாதிகள் செய்யும் சமயத்தில் ஹோதாவும், அத்வர்யுவும் அக்னியிடத்தில் ப்ரார்த்தனை செய்கையில் 'இந்த ரிஷியின் வம்சத்தைச் சார்ந்தவர் யாகம் செய்கிறார் என்று கூறி விசேஷமாகப் பிரார்த்தனை செய்கிறார்கள். இன்றும் திருமணங்களில் கன்னிகா தானத்திற்கு முன்பாக இந்த கோத்ரம், ஸூத்ரத்தைச் சார்ந்த, இந்த ரிஷிகள் வழிவந்த இன்னாருடைய பெளத்ரன்/பெளத்ரி, இன்னாருடைய புத்ரன்/புத்ரிக்கு என்று கூறுவதைக் காண்கிறோம். இவ்வாறாக அறிவித்தலே ப்ரவரம் சொல்லுதல் என்பது. ஆக, அபிவாதனம் என்பதே ப்ரவரம். அபிவாதனம் செய்கையில் ரிஷிகளது பெயரும் கர்மா செய்பவர் பெயரும் வரும், ஆனால் ப்ரவரத்தில் கர்மா செய்பவரது பாட்டனார் , முப்பாட்டனார் (பிதா, பிதாமஹன், நப்தா) பெயரும் வரும். அபிவாதனம் செய்பவரே சொல்லுவது; ப்ரவரம் என்பது செய்து வைக்கும் ஆச்சார்யார் சொல்லுவது.

இவ்வாறு சொல்லப்படும் ப்ரவரத்தில் வரும் ரிஷிகள் அவரவர் கோத்ர ரிஷிகளே!, அக்னியிடத்து ப்ரார்த்தனை செய்கையில், மூல ரிஷிகளான மந்த்ர த்ருஷ்டாகளது வம்சத்தவர் என்று கூறுவதால் அக்னி மகிழ்வடைவதாக தர்ம சாஸ்த்ரம் சொல்லுகிறது. ஏன் இப்படி கோத்ரங்களை/ப்ரவரங்களைச் சொல்லுகிறோம் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில;

1. ஸகோத்ரத்தில் பெண் எடுக்க/கொடுக்கக் கூடாது - திருமணங்கள் இன்று நடப்பது போல முன்பில்லை. சிறு வயதில் உபநயனம் செய்வித்து பால்ய விவாஹம் செய்வது அக்காலத்தைய வழக்கம். அதனால் ஒரு பிரம்மச்சாரி அபிவாதனம் செய்கையிலேயே அவனது கோத்ரம் தெரிந்து கொண்டு பெரியவர்கள் அவனுக்கு தகுந்த வரனை நிச்சயிக்க உதவியிருக்கிறது. இது தவிர திருமணங்களில் ஸபையில் இருப்பவர்கள் வது-வரன் ஆகியோரது கோத்ரங்களை அறியச் செய்ய ப்ரவரம் உதவுகிறது.

2. குறிப்பிட்ட சில கோத்ரத்தைச் சார்ந்தவர்களுக்கு அவர்களது கர்மாகளில் சிற்சில வேறுபாடுகள் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறான வேறுபாடுகளை அறிந்து செய்து கொள்ள, செய்து வைக்க கோத்ரம்-ப்ரவரம் உதவுகிறது

3. வயதில் பெரியவர்கள், அத்யயனம் செய்தவர்கள் முன்னிருக்கும் போது சிறியவர்களது ஜீவன் நிலையில்லாது இருக்குமாம், அவ்வாறு இருப்பதைத் தவிர்க்கவே பெரியவர்களைக் கண்டதும் அவர்களுக்கு நமஸ்காரம்.

4. பெரியவர்களுக்கு அபிவாதனம் செய்வதால் ஒருவனுக்கு ஆயுசும், ஞாபக சக்தியும், கீர்த்தியும், நல்ல மனோபலமும் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.

5. தனக்கு முந்தைய 3 தலைமுறைகள் பற்றித் தெரியாதவனுக்கு பெண் கொடுப்பது, ஸ்ராத்தத்தில் வரிப்பது போன்றவை கூடாது, ஆகவே அபிவாதனம்-ப்ரவரம் போன்றவை முக்கியம்.

எங்கே, யாருக்கு அபிவாதனம் செய்யக்கூடாது என்பதும் ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அவை;

1. தீர்த்த பாத்திரம், புஷ்பம், ஜபம், ஹோமம் போன்றவை செய்யும் போதும் அபிவாதனம் செய்யக்கூடாது. ப்ரேத்/பித்ரு கர்மாகள் செய்கையில் பூணூலை வலம் மாற்றிக் கொண்டே அபிவாதனம் செய்ய வேண்டும்

2. ப்ரத்யபிவாதனம் செய்யத் தெரியாதவர்களுக்கு (ஸ்மிருதியில் சொல்லியபடி ஆசிர்வாதம் செய்யத் தெரியாதவர்களுக்கு) அபிவாதனம் தேவையில்லை, வெறும் நமஸ்காரம் மட்டும்.

3. ஸன்யாசிகளுக்கு அபிவாதனம் கூடாது.

4. தம்பதிகளில் பெண்களுக்கு மட்டும் நமஸ்காரம் செய்கையில் அபிவாதனம் கிடையாது.

5. ஆசாரமில்லாதவனுக்கு அபிவாதனம் கூடாது, ஆச்சாரமில்லாத காலத்தில் அபிவாதனம் இல்லாது நமஸ்கரிக்கலாம்.