காயத்ரி மந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது?

From Periva forum

காயத்ரி மந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது?

சதா ஏன் காயத்ரி பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறேன்? காயத்ரி மந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது?- காஞ்சி மஹா பெரியவர்

சாஸ்திரப் பிரகாரம் செய்ய வேண்டிய கார்யங்களுக்குள் எல்லாம் முக்கியமான காரியம் காயத்ரீ ஜபம்.

த்ரிபம் ஏவது வேதேப்ய:பாதம் பாதமதூதுஹம் (மநுஸ்மிருதி)
காயத்ரீ மூன்று வேதத்திலிருந்து ஒவ்வொரு பாதமாக எடுத்தது என்று மநுவே சொல்கிறார். வேதத்தின் மற்றதையெல்லாம் விட்டுவிட்ட நாம் இதையும் விட்டால் கதி ஏது?

ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த essence (ஸாரம்) காயத்ரீ மஹாமந்திரம்.

காயத்ரீ என்றால், "எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது"என்பது அர்த்தம்.

காயந்தம் த்ராயதே யஸ்மாத் காயத்ரீ (இ) த்யபிதீயதே !

கானம் பண்ணவதென்றன்றால் இங்கே பாடுவதில்லை; பிரேமயுடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப்பெயர் அதற்கு வந்தது. வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது,

காயத்ரீம் சந்தஸாம் மாதா

என்று இருக்கிறது. சந்தஸ் என்பது வேதம். வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயார் ஸ்தானம் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. 24 அக்ஷரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பாதங்கள் இருக்கின்றன. அதனால் அதற்கு 'த்ரிபதா' காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது.

காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும்.

மந்திரசக்தி குறையாமல் இருக்க தேஹத்தை சுத்தியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தேஹோ தேவாலய:ப்ரக்தோ ஜீவ:ப்ரோக்தோ ஸநாதன:|

தேஹம் ஒரு தேவாலயம். அந்த ஆலயத்துக்குள் இருக்கிற உயிரான ஜீவன் ஈச்வரஸ்வரூபம். ஆலயத்தில் அசுத்தியோடு போகக்கூடாது. அங்கே அசுத்தமான பதார்த்தங்களை சேர்க்கக் கூடாது. மாம்ஸம், சுருட்டு முதலியவைகளை கொண்டு போனால் அசுத்தம் உண்டாகும். ஆகம சாஸ்திரங்களில் தீட்டோடும் தேஹ அசுத்தத்தோடும் ஆலயத்துக்குப் போகக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அப்படியே மனித தேஹம் ஒரு தேவாலயமானால் அதிலும் அசுத்தமான பதார்த்தங்களைச் சேர்க்கக்கூடாது. குறிப்பாக, மந்திரசக்தி இருக்க வேண்டிய தேஹத்தில் அசுத்தமானவைகளைச் சேர்த்தால் அது கெட்டுப் போய்விடும். வீட்டுக்கும் தேவாலயத்திற்கும் வித்தியாஸம்இருக்கிறது. ஆனாலும் தேவாலயத்தைப் போல அவ்வளவு கடுமையாக அசுத்தம் வராமல் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு மூலையிலாவது வாய் கொப்புளிக்கவும்,ஜல மல விஸர்ஜனத்துக்கும், பஹிஷ்டா (மாதவிடாய்) ஸ்திரீக்கும் இடம் வைக்கிறோம். Flat system -ல் கடைசியில் சொன்னது போய், அநாசார மயமாகி விட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆலயத்தில் கொஞ்சங்கூட இடமில்லையல்லவா?

ஒரு தேசத்தில் வீடும் வேண்டும், ஆலயமும் வேண்டும். அதே மாதிரி ஜனசமூகத்தில் லோக காரியங்களைச் செய்யும் வீடு மாதிரியான தேகங்கள், ஆத்ம காரியத்தைச் செய்யும் ஆலயம் மாதிரியான தேகங்கள் இரண்டும் வேண்டும். தேஹங்களுக்கு ஆத்மாவை ரக்ஷிப்பவை தேவாலயத்தைப் போல பாதுகாக்கப்பட வேண்டிய பிராம்மண தேஹங்கள். வேத மந்திர சக்தியை ரக்ஷிக்க வேண்டியவைகளாதலால் ஆலயம்போல் அதிக பரிசுத்தமாக அந்த தேகங்கள் இருக்க வேண்டும். அசுத்தியான பதார்த்தங்களை உள்ளே சேர்க்கக் கூடாது.

மந்திர சக்தியை ரக்ஷித்து அதனால் லோகத்துக்கு நன்மையை உண்டாக்க வேண்டுவது பிராம்மணன் கடமை. அதனால்தான் அவனுக்கு அதிகமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. "மற்றவர்கள் அது பண்ணுகிறார்களே, நாமும் ஏன் பண்ணக்கூடாது?"என்று அசுத்தியைத் தரும் காரியங்களை பிராம்மணன் பண்ணக்கூடாது. அவர்களெல்லாம் சரீரத்தை வைத்துக் கொண்டு ஸந்தோஷமான அநுபவங்களை அடைகிறார்களே என்று இவன் தனக்குத் தகாதவற்றைச் செய்யக்கூடாது. "பிராம்மணனுக்கு தேஹம் ஸந்தோஷத்தை அநுபவிப்பதற்காக ஏற்பட்டதல்ல.

லோக உபகாரமாக வேதத்தை ரக்ஷிக்க வேண்டிய தேஹம் அது. அது மஹா கஷ்டப்படவே ஏற்பட்டது"என்று (வாஸிஷ்ட ஸ்ம்ருதி'யில்) சொல்லியிருக்கிறது:"ப்ராஹ்மணஸ்ய சரீரம் து நோபபோகாய கல்பதே!இஹ க்லேசாய மஹதே". லோக க்ஷேமத்திற்காக மந்த்ரங்களை அப்யஸிக்க வேண்டும் என்பதற்காகவேதான் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செய்து கொள்வது. வேத மந்திரங்களை ரக்ஷிப்பதற்காகவே-

அதன் மூலம் ஸகல ஜீவ ஜந்துக்களையும் ரக்ஷிப்பதற்காகவே - தேஹத்தை வைத்துக் கொள்ள வேண்டும். 'எல்லோரும் ஸெளகரியமான தொழில் பண்ணுகிறார்களே!ஏன் நாம் செய்யக் கூடாது?என்று பிராம்மணன் நினைக்கக் கூடாது. தன்னுடைய கடமையை நன்றாகச் செய்துவிட்டுப் பிறகுதான் ஜீவனோபாயத்தை நினைக்க வேண்டும். முன்பு இவன் பிராம்மண தர்மங்களைச் செய்தாலே போதுமென்று ராஜாவும் ஸமூஹமும் இவனுக்கு மானியம், ஸம்பாவனை செய்து வாழ வசதி தந்தார்கள்.

இப்போது நிலைமை மாறிவிட்டதால், பணத்துக்கும் கொஞ்சம் பிரயத்தனப்பட வேண்டியதுதான். ஆனால் நிரம்பப் பணத்தை ஸம்பாதிக்க வேண்டுமென்று ஆசைப்படக்கூடாது. இதற்காக அநாசார வழிகளில் பிரவேசிக்கக் கூடாது. பிராம்மணர்களுக்கு தரித்திர நிலை வேண்டியதுதான். இன்பங்களைத் தேடாமல் காயக் காயக் கிடந்தால்தான் இவனுக்கு ஞானப் பிரகாசம் உண்டாகும். அதனால் லோகம் வாழும். கண்ட தேசங்களுக்குச் சென்று ஆசார அநுஷ்டானங்களை விட்டுவிட்டு ஸம்பாதிக்கிற ஐச்வர்யம் இவனுக்கு வேண்டாம். அதுபடி ஸம்பாதிக்காவிட்டால் ஒன்றும் முடியாது என்பது இல்லை.

லோகத்தில் மந்திர சக்தியைக் காப்பாற்றிக் கொண்டு தன்னுடைய தர்மத்தை அநுஷ்டிப்பது முதல் கடமை. ஸம்பாதிப்பது secondary (இரண்டாவது) தான். மந்திர சக்தி என்ற அக்கினியை இவன் காப்பாற்றிக் கொண்டு வந்தால் அது எல்லோருக்கும் க்ஷேமத்தை உண்டாக்கும். லோகத்தில் எவருக்குக் கஷ்டம் வந்தாலும் அதை நிவர்த்திக்கும் சக்தி பிராம்மணனுக்கு மந்திர சக்தியின் மூலம் இருக்க வேண்டும். யாராவது கஷ்ட காலத்தில் வந்து பிரார்த்தித்தால், அவன் பண்ணுவதைத்தான் நானும் பண்ணுகிறேன், உனக்கு இருக்கிற சக்திதான் எனக்கும் இருக்கிறது"என்று ஒரு பிராம்மணன் சொன்னால் அவனுடைய ஜன்மா வீண்.

மந்திர சக்தியாகிய அக்கினி இப்பொழுது பெரும்பாலும் அணைந்திருக்கிறது. பிராம்மண தேஹம் விகாரம் ஆகிவிட்டது. அதில் அசுத்தமான பதார்த்தங்கள் சேர்க்கப் படுகின்றன. ஆனால், ஒரு பொறி மட்டும் அணையாமல் இருக்கிறது. அதை விருத்தி பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் எப்பொழுதாவது பற்றிக்கொள்ளும். அந்த நெருப்புப் பொறிதான் காயத்ரீ. அது பரம்பரையாக வந்திருக்கிறது.

மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டு விட்டவன் பிராம்மணனாக மாட்டான். அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்ரஹாரம் ஆகாது. அது குடியானவர் தெருதான். ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் ப்ராம்மணர்கள் என்று பெயரளவாது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்ப்ராம்மணன்; கெட்டுப்போன ப்ராம்மணன். கெட்டாலும் 'ப்ராம்மணன்' என்ற பேராவது இருக்கிறது! மறுபடியும் பிராம்மணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் காயத்ரீயை மூன்றுதலைமுறையாக விட்டுவிட்டால் பிராம்மணத்வம் அடியோடு போய் விடுகிறது. அவன் மறுபடியும் பிராம்மணனாக மாட்டான். அவன் பிரம்மபந்துதான்;அதாவது, பிராமணர்களை உறவுக்காரர்களாக உடையவன்தான்!அப்படியே க்ஷத்ரியன் காயத்ரீயை விட்டுவிட்டால் க்ஷத்ரிய பந்துவாகிறனான்; வைசியன் வைசிய பந்துவாகிறான்.

ஆகையால் அந்த நெருப்புப் பொறியை ஊதிப் பெரிசு பண்ண வேண்டும். சின்ன நெருப்புப்பொறி எதற்கும் உபயோகப்படாது. ஆனால் உபயோகப்படுமாறு பெரிசாக்கப் படுவதற்கு அதில் ஆதாரம் இருக்கிறது.

ஆகையால் ஞாயிற்றுக்கிழமையாவது பூணூல் உள்ளவர்கள் ஆயிரம் காயத்ரீ பண்ண வேண்டும். கண்ட இடத்தில் கண்ட ஆஹாரத்தை உண்ணலாகாது. இது வரைக்கும் அநாசாரம் செய்ததற்குப் பிராயசித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

Problems arose because you all gave up Gayathri Mantra!

Experiences with Maha Periyava: "Problems arose because you all gave up Gayathri Mantra!"

Once over forty Brahmins from the area, Vanniya Teynampet in Madras came to have darshan of Maha Periyava. After their obeisance to the Sage, they expressed their common mental agony that Brahmins were not able to go around in that area with respect as some atheists made fun and showed animosity whenever they came across the hair tufts, sacred threads, and Vaishnavite marks that adorned the body of a Brahmin.

As He heard this, Sri Maha Periyava asked them, "Do you people do the Gayatri Japam every day?" There was silence. He then advised them, "Continue to do the Gayatri Japam daily. Everything will be all right."

As advised, they started doing the Gayatri Japam daily. Within two months the situation changed to their complete satisfaction. They met Periyava happily and conveyed the news. Periyava told them, "All the problems are due to your giving up the Gayatri mantra. The power of Gayatri mantra is immeasurable."

"All the problems are due to your giving up Gayatri mantra"!

If each one of us followed our respective Dharma sincerely, daily, then society will respect everyone (not only Brahmins) automatically.

சாமி, மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?

சாமி, மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?

தெரிஞ்சிக்கிறது ரொம்ப சிம்பிள்!

இறைவன் உள்ளானா, மந்திரங்களில் பலன் உள்ளதா, ஜோதிட சாஸ்திரங்கள் உண்மைதானா என்ற சந்தேகங்கள் மனிதர்கள் பலருக்கும் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக கஷ்டப்படும் காலங்களில் இந்த சந்தேகம் நீக்கமற நிறைத்திருக்கும்.

இதையும் சோதித்து பார்த்து உறுதி செய்ய வழியுள்ளதாமே.. எப்படி தெரியுமா?

திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.

மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..
மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..
சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..

இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..

விளக்கம் சிம்பிள்தாங்க.. மணி மந்திரம் என்ற ஒரு மந்திரத்தை சொன்னால் படம் எடுத்து நிற்கும் பாம்பும் ஸ்தம்பித்துவிடுமாம். மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மணி மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

இப்போ, உங்க மைண்ட்வாய்ஸ் என்ன நினைக்கும் அப்படீங்கிறது நல்லாவே கேட்குதுங்க.. பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்லவிட்டு நீங்கள் வேண்டுமானால் ஏதாவது ஏணியின் மீது ஏறி நின்று கொண்டு பாருங்களேன்.

மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு: வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் கரிமருந்துதான், அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாணவேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள்.

சாஸ்திரம்தான் பொய்யானால் கிரகணம் பாரு: ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்படைந்திருப்பர். எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்பது அதன் பொருள்.

சாமிதான் பொய்யானால் சாணம் பாரு: இது ரொம்ப சுவாரசியமான விஷயம். நெல்லை மாவட்டத்து கிராமங்களில் முன்பெல்லாம் செம்மண் கலந்து வீட்டு சமையலறையில் அவ்வப்போது அடுப்பு செய்வார்கள். அதன்மீது சாணத்தை பூசுவார்கள். ஒரு அடுப்பு பிய்ந்தவுடன் புதிதாக அடுப்பு உருவாக்கும்போது, பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள். அதன்பிறகே அடுப்பு செய்வார்கள்.      

இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டுவிடுவார்கள். அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி, அதை சாப்பிடும். விநாயகர் என்று நாம் உருவேற்றிவிட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்துகொள்ளலாம் என்பதுதான் இந்த பழமொழியின் கருத்து.!!!

பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன?

பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன?

பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி அழகாக சொல்லப்பட்டுள்ளது.

ஸ்ரீமத் பாகவதம் 3:20:46 ல் பிரம்மமுகூர்த்தத்தைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறது. ரிக்வேதத்திலும் முகூர்த்தம் பற்றிய விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கிறது

முகூர்த்தம் எப்படி வரையறுக்கப்படுகிறது எனப் பார்க்கலாம். வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகங்களுக்கு வியாக்யானம் அதாவது உரையும் விளக்கமும் சொல்லும் நூலுக்கு பிராஹ்மனம் என்று பெயர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவை ஆகும்.

இதில் தைத்ரீய பிராஹ்மனத்தில் மூன்றாம் பாகத்தில் 10:1:1 லும், சதபாத பிராஹ்மனத்தில் X 4-2-18.25-27; 3,20; XII 3,2,5 மற்றும் X 4,4,4 லும் பிரம்மமுகூர்த்தம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. கர்கசம்ஹிதையில் 4:8:19, 4:18:14, 5:15:2, 8:10:7 ஆகிய ஸ்லோகங்களில் பிரம்ம முகூர்த்தம் பற்றியும் அதன் சிறப்பையும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவற்றில் மேற்குறிப்பிட்டுள்ள ஸ்லோகங்களில் ஒரு அஹோராத்ரத்தை அதாவது பகலும் இரவும் சேர்ந்த ஒரு நாளை முப்பது சம பாகங்களாகப் பிரிக்க வேண்டும் எனவும் அவ்வாறு பிரிக்க வரும் இரண்டு நாழிகைக் காலம்(48 நிமிடம்) ஒரு முகூர்த்தம் எனவும் குறிப்பிட்டுள்ளதோடு அவற்றின் பெயர்களையும் சொல்லியுள்ளது.

அவையாவன :
1. ருத்ர முஹுர்த்தம்- 06.00AM – 06.48AM.

2. ஆஹி முஹுர்த்தம்- 06.48am –07.36am.

3. மித்ர முஹுர்த்தம்- 07.36am – 08.24am.

4. பித்ரு முஹுர்த்தம்- 08.24am – 09.12am.

5. வசு முஹுர்த்தம்- 09.12am – 10.00am.

6. வராஹ முஹுர்த்தம்- 10.00am – 10.48am.

7. விச்வேதேவா முஹுர்த்தம்- 10.48am – 11.36am.

8. விதி முஹுர்த்தம்- 11.36am – 12.24pm.

9. சுதாமுகீ முஹுர்த்தம்- 12.24pm – 01.12pm.

10. புருஹூத முஹுர்த்தம்- 01.12pm – 02.00pm.

11. வாஹிநீ முஹுர்த்தம்- 02.00pm – 02.48pm.

12. நக்தனகரா முஹுர்த்தம்- 02.48pm – 03.36pm

13. வருண முஹுர்த்தம்- 03.36pm – 04.24pm.

14. அர்யமன் முஹுர்த்தம்- 04.24pm – 05.12pm.

15. பக முஹுர்த்தம்- 05.12pm – 06.00pm.

16. கிரீச முஹுர்த்தம்- 06.00pm – 06.48pm.

17. அஜபாத முஹுர்த்தம்- 06.48pm – 07.36pm.

18. அஹிர்புத்ன்ய முஹுர்த்தம்- 07.36pm – 08.24pm.

19. புஷ்ய முஹுர்த்தம்- 08.24pm – 09.12pm.

20. அச்விநீ முஹுர்த்தம்- 09.12pm – 10.00pm.

21. யம முஹுர்த்தம்- 10.00pm – 10.48pm.

22. அக்னி முஹுர்த்தம்- 10.48pm – 11.36pm.

23. விதாத்ரு முஹுர்த்தம்- 11.36pm – 12.24am.

24. கண்ட முஹுர்த்தம்- 12.24am – 01.12am.

25. அதிதி முஹுர்த்தம்- 01.12am – 02.00am.

26. ஜீவ/அம்ருத முஹுர்த்தம்- 02.00am – 02.48am.

27. விஷ்ணு முஹுர்த்தம்- 02.48am – 03.36am.

28. த்யுமத்கத்யுதி முஹுர்த்தம்- 03.36am – 04.24am.

29. பிரம்ம முஹுர்த்தம்- 04.24am – 05.12am.

30. சமுத்ரம் முஹுர்த்தம்- 05.12am – 06.00am.

மேலே சொல்லியுள்ளவற்றில் 29வதாகச் சொல்லப்பட்டிருப்பதுதான் பிரம்ம முகூர்த்தமாகும். அனைத்து சுப காரியங்களுக்கும் உகந்ததாகும்.

மேலும், 26வது முஹூர்த்தமான ஜீவ/அம்ருத முஹூர்த்தம் மற்றும் 29வது முஹூர்த்தமான ப்ரம்ம முஹூர்த்தம் ஆகியவை இறைவழிபாடு மற்றும் திருமண வைபவங்களுக்கு மிகவும் சிறப்பான முகூர்த்தங்களாகும்.

108 உபநிஷதங்கள்

108 உபநிஷதங்கள் பெயர்களும், அவற்றைக்கொண்ட வேதமும் ஒரு சிந்தனை -

1. ஈஸ உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
2. கேந உபநிஷத் - ஸாம வேத,
3. கட உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
4. ப்ரஸ்ந உபநிஷத் - அதர்வ வேத,
5. முண்டக உபநிஷத் - அதர்வ வேத,
6. மாண்டுக்ய உபநிஷத் - அதர்வ வேத,
7. தைத்திரீய உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
8. ஐதரேய உபநிஷத் - ருக் வேத,
9. சாந்தோக்ய உபநிஷத் - ஸாம வேத,
10. ப்ருஹதாரண்யக உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
11. ப்ரஹ்ம உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
12. கைவல்ய உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
13. ஜாபால உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
14. ஸ்வேதாஸ்வதர உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
15. ஹம்ஸ உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
16. ஆருணேய உபநிஷத் - ஸாம வேத,
17. கர்ப உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
18. நாராயண உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
19. பரமஹம்ஸ உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
20. அம்ருதபிந்து உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
21. அம்ருதநாத உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
22. அதர்வஸிர உபநிஷத் - அதர்வ வேத,
23. அதர்வஸிக உபநிஷத் - அதர்வ வேத,
24. மைத்ராயணி உபநிஷத் - ஸாம வேத,
25. கௌஷீதாகி உபநிஷத் - ருக் வேத,
26. ப்ருஹஜ்ஜாபால உபநிஷத் - அதர்வ வேத,
27. ந்ருஸிம்ஹதாபநீ உபநிஷத் - அதர்வ வேத,
28. காலாக்நிருத்ர உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
29. மைத்ரேயி உபநிஷத் - ஸாம வேத,
30. ஸுபால உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
31. க்ஷுரிக உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
32. மாந்த்ரிக உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
33. ஸர்வ-ஸார உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
34. நிராலம்ப உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
35. ஸுகரஹஸ்ய உபநிஷத்- க்ருஷ்ண யஜுர்வேத,
36. வஜ்ரஸூசி உபநிஷத் - ஸாம வேத,
37. தேஜோபிந்து உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
38. நாதபிந்து உபநிஷத் - ருக் வேத,
39. த்யாநபிந்து உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
40. ப்ரஹ்மவித்யா உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
41. யோகதத்த்வ உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
42. ஆத்மபோத உபநிஷத் - ருக் வேத,
43. பரிவ்ராத் (நாரதபரிவ்ராஜக) உபநிஷத் - அதர்வ வேத,
44. த்ரி-ஷிகி உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
45. ஸீதா உபநிஷத் - அதர்வ வேத,
46. யோகசூடாமணி உபநிஷத் - ஸாம வேத,
47. நிர்வாண உபநிஷத் - ருக் வேத,
48. மண்டலப்ராஹ்மண உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
49. தக்ஷிணாமூர்தி உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
50. ஸரப உபநிஷத் - அதர்வ வேத,
51. ஸ்கந்த உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
52. மஹாநாராயண உபநிஷத் - அதர்வ வேத,
53. அத்வயதாரக உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
54. ராமரஹஸ்ய உபநிஷத் - அதர்வ வேத,
55. ராமதாபணி உபநிஷத் - அதர்வ வேத,
56. வாஸுதேவ உபநிஷத் - ஸாம வேத,
57. முத்கல உபநிஷத் - ருக் வேத,
58. ஸாண்டில்ய உபநிஷத் - அதர்வ வேத,
59. பைங்கல உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
60. பிக்ஷுக உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
61. மஹத் உபநிஷத் - ஸாம வேத,
62. ஸாரீரக உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
63. யோகஸிகா உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
64. துரீயாதீத உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
65. ஸம்ந்யாஸ - ஸாம வேத,
66. பரமஹம்ஸபரிவ்ராஜக உபநிஷத் - அதர்வ வேத,
67. அக்ஷமாலிக உபநிஷத் - ருக் வேத,
68. அவ்யக்த உபநிஷத் - ஸாம வேத,
69. ஏகாக்ஷர உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
70. அந்நபூர்ண உபநிஷத் - அதர்வ வேத,
71. ஸூர்ய உபநிஷத் - அதர்வ வேத,
72. அக்ஷி உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
73. அத்யாத்மா உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
74. குண்டிக உபநிஷத் - ஸாம வேத,
75. ஸாவித்ரி உபநிஷத் - ஸாம வேத,
76. ஆத்மா உபநிஷத் - அதர்வ வேத,
77. பாஸுபத உபநிஷத் - அதர்வ வேத,
78. பரப்ரஹ்ம உபநிஷத் - அதர்வ வேத,
79. அவதூத உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
80. த்ரிபுராதபநி உபநிஷத் - அதர்வ வேத,
81. தேவி உபநிஷத் - அதர்வ வேத,
82. த்ரிபுர உபநிஷத் - ருக் வேத,
83. கடருத்ர உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
84. பாவந உபநிஷத் - அதர்வ வேத,
85. ருத்ரஹ்ருதய உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
86. யோக-குண்டலிநி உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
87. பஸ்ம உபநிஷத் - அதர்வ வேத,
88. ருத்ராக்ஷ உபநிஷத் - ஸாம வேத,
89. கணபதி உபநிஷத் - அதர்வ வேத,
90. தர்ஸந உபநிஷத் - ஸாம வேத,
91. தாரஸார உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
92. மஹாவாக்ய உபநிஷத் - அதர்வ வேத,
93. பஞ்சப்ரஹ்ம உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
94. ப்ராணாக்நிஹோத்ர உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
95. கோபாலதபணி உபநிஷத் - அதர்வ வேத,
96. க்ருஷ்ண உபநிஷத் - அதர்வ வேத,
97. யாஜ்ஞவல்க்ய உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
98. வராஹ உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
99. ஸாத்யாயநி உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
100. ஹயக்ரீவ உபநிஷத் - அதர்வ வேத,
101. தத்தாத்ரேய உபநிஷத் - அதர்வ வேத,
102. காருட உபநிஷத் - அதர்வ வேத,
103. கலிஸண்டாரண உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
104. ஜாபால உபநிஷத் - ஸாம வேத,
105. ஸௌபாக்ய உபநிஷத் - ருக் வேத,
106. ஸரஸ்வதீரஹஸ்ய உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
107. பஹ்வ்ருச உபநிஷத் - ருக் வேத,
108. முக்திக உபநிஷத்- ஸுக்ல யஜுர்வேத.
நூற்றியெட்டாம் உபநிஷத்தாகியதும், ஸ்ரீசிவபக்த இராமரால் ஆஞ்சநேயருக்கு உபதேசிக்கப்பட்டதுமாகிய 'முக்திகோபநிஷத்தைக்' கொண்டு விரிக்கப்பட்டது.
Works of Adi Shankarcharya

A list of all the works by Shri Adi Shankaracharya ji is given below. Even today many scholars wonder how was it
possible for Acharya to write so much in a very short life span of 32 years. It depicts that he was the greatest scholar and a man on mission to teach & establish the
philosophy of Advaita Vedanta. Though majority of his works concentrate on Advaita, he equally pitches on bhakti since he believed that bhakti was a very essential
step for Chitta Shuddhi without which Self-realization was not possible. Hence he composed verses and hymns in praise of every lord, majority of which were concentrated on Vishnu, Shiva and Shakthi. He wanted the people to worship the lord in any form of their wish, the results of which must finally purify their mind and make it fit for self realization.

From his life history it is evident that he was blessed by Lord Narasimha, Goddess Saraswati and Lord Vishvanatha. Hence one can find a true Vasihnava, Shaiva and Shaakta in him. The most highlighting factor is the baashya for Hastamalakeeyam written by Shri Shankaracharya since rarely a Guru has written baashya for the work of his own disciple. Below is the list of works by Shri Adi Shankaracharya which are widely accepted to be his works.

Bhashya Granthas
1. Brahma Sutras
2. Isavasya Upanishad
3. Kena Upanishad
4. Katha Upanishad
5. Prasna Upanishad
6. Mundaka Upanishad
7. Mandukya Upanishad
8. Mandukya Karida
9. Aitareya Upanishad
10. Taittireeya Upanishad
11. Chhandogya Upanishad
12. Brihad Aranyaka Upanishad
13. Sree Nrisimha Taapaneeya Upanishad
14. Sreemad Bhagawad Geeta
15. Sree Vishnu Sahasranama
16. Sanat Sujateeyam
17. Lalita Tri-satee
18. Hastaamalakeeyam

Prakarana Granthas
19. Viveka Chudamani
20. Aparokshanubhooti
21. Upadesa Sahasri
22. Vaakya Vritti
23. Swaatma Niroopanam
24. Atma-bodha
25. Sarva Vedanta Sara Samgraha
26. Prabodha Sudhakaram
27. Swaatma Prakasika
28. Advaita anubhooti
29. Brahma anuchintanam
30. Prashnouttara Ratnamaalika
31. Sadachara anusandhanam
32. Yaga Taravali
33. Anatmasree Vigarhanam
34. Swaroopa anusandhanam
35. Pancheekaranam
36. Tattwa bodha
37. Prouda anubhooti
38. Brahma Jnanavali
39. Laghu Vakyavritti
40. Bhaja Govindam
41. Prapancha Saaram

Hymns and Meditation Verses
42. Sri Ganesa Pancharatnam
43. Ganesa Bhujangam
44. Subrahmanya Bhujangam
45. Siva Bhujangam
46. Devi Bhujangam
47. Bhavani Bhujangam
48. Sree Rama Bhujangam
49. Vishnu Bhujangam
50. Sarada Bhujangam
51. Sivananda Lahari
52. Soundarya Lahari
53. Ananda Lahari
54. Sivapaadaadi kesaanta varnana
55. Siva kesaadi padaanta varnana
56. Sree Vishnu-paadaadi-kesanta
57. Uma maheswara Stotram
58. Tripurasundari Vedapada Stotram
59. Tripurasundari Manasapooja
60. Tripurasundari Ashtakam
61. Devi shashti upachara-pooja
62. Mantra matruka Pushpamaala
63. Kanakadhara Stotram
64. Annapoorna Stotram
65. Ardhanareshwara Stotram
66. Bhramanaamba Ashtakam
67. Meenakshi Stotram
68. Meenakshi Pancharatnam
69. Gouri Dasakam
70. Navaratna Malika
71. Kalyana Vrishtistavam
72. Lalitha Pancharatnam
73. Maaya Panchakam
74. Suvarna Mala Stuti
75. Dasa Sloki
76. Veda Sara Siva Stotram
77. Siva Panchaakshara Stotram
78. Sivaaparadha Kshamapana
79. Dakshinamoorthy Ashtakam
80. Dakshinamoorthy Varnamala
81. Mrutyunjaya Manasa Pooja Stotram
82. Siva Namavali Ashtakam
83. Kaala Bhairava Ashtakam
84. Shatpadee Stotram
85. Siva Panchakshara Nakshatra Mala
86. Dwadasa Ling Stotram
87. Kasi Panchakam
88. Hanumat Pancharatnam
89. Lakshmi-Nrisimha Pancharatnam
90. Lakshmi-Nrisimha Karunarasa Stotram
91. Panduranga Ashtakam
92. Achyuta Ashtakam
93. Sree Krishna Ashtakam
94. Hari Stuti
95. Govinda Ashtakam
96. Bhagavat Manasa Pooja
97. Praata Smarana Stotram
98. Jagannatha Ashtakam
99. Guruvashtakam
100. Narmada Ashtakam
101. Yamuna Ashtakam
102. Ganga Ashtakam
103. Manikarnika Ashtakam
104. Nirguna Manasa Pooja
105. Eka Sloki
106. Yati Panchakam
107. Jeevan Mukta Ananda Lahari
108. Dhanya Ashtakam
109. Upadesa (Sadhna) Panchakam
110. Sata Sloki
111. Maneesha Panchakam
112. Advaita Pancharatnam
113. Nirvana Shatakam
114. Devyaparadhakshamapana Stotram

Jaya Jaya Sankara! Hara Hara Sankara!

Hari Om.