சீமந்தம் என்பது முதல் குழந்தைக்கு மட்டும்தானா?

சீமந்தம் என்பது முதல் குழந்தைக்கு மட்டும்தானா?

கர்பத்தில் இருக்கும் குழந்தையை உத்தேசித்து செய்யும் ஸம்ஸ்காரங்கள் இரண்டு. அவை பும்ஸவனம், சீமந்தம். அநேகமாக இப்பொழுது எல்லோரும் இரண்டையும் சேர்த்து "பும்ஸவன சீமந்தோந்நயன ஸுபமுஹூர்த்தம்" என்று ஒன்றாக செய்வதால் இதுபற்றி பலருக்குத் தெரிவதில்லை. பும்ஸவனம் என்பது கர்பம் நிஸ்சயம் என்று தெரிந்தவுடன் செய்யவேண்டியது. இது நேரடியாக கர்பத்திலிருக்கும் சிசுவுக்கான ஸம்ஸ்காரம். சீமந்தம் கர்பத்திலுள்ள சிசுவை உத்தேசித்து தாயாருக்கு செய்யும் ஸம்ஸ்காரம். முதலாவது காலத்தில் செய்ய தவறிவிட்டால் இரண்டையும் சேர்த்து செய்யலாம் என சாஸ்த்ரம் அனுமதிக்கிறது. பும்ஸவனம் சிசுவிற்கானதால் ஒவ்வொரு குழந்தைக்கும் செய்யவேண்டியது. சீமந்தம் தாயாருக்கு என்பதால் ஒருமுறை செய்துவிட்டால் அந்த ஸம்ஸ்காரம் செய்த கர்பத்தில் அடுத்த குழந்தை உதிப்பதால் மீண்டும் மீண்டும் செய்யவேண்டியதில்லை. இதுபற்றி பும்ஸவனம் என்ற தலைப்பில் கனபாடிகள் செய்த இன்னொரு உபந்யாஸம் you tube - ல் உள்ளது. அதையும் சேர்த்து கேளுங்கள். நன்றாக புரியும்.

நன்றி : ஹரிஹரன், லௌகீகஶ்ரீ