ஆகாமாவை புண்யகாலம்

ஆகாமாவை புண்யகாலம். ஆகாமாவை என்பது தமிழ் வருடத்தில் வரும் சாந்த்ராயண அடிப்படையில் வரும் மாதப்பெயர்களில் , இது வருகின்றது. அதாவது  ஆ- ஆஷாடம்,   கா-கார்த்திகம், மா- மாகம், வை - வைசாகம் ஆகிய நான்கு மாதத்தின் முதல் எழுத்துக்களாகும். இந்த ஆகாமாவையான இந்த நான்கு மாதங்களில் வரும் பௌர்ணமி சூர்ய உதயத்தின் போது உள்ள காலத்தை ஆகாமாவை புண்யகாலம் என்று கூறப்படுகின்றது.

அதாவது  தமிழ் மாதம் ஆனி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் பௌர்ணமி ஆஷாட பௌர்ணமியன்றும், அடுத்து ஐப்பசி மாதம் அமாவாவைக்குபிறகு வரும் பௌர்ணமி -கார்த்திகா பௌர்ணமியன்றும், தை அமாவாசைக்குப் பிறகு வரும் பௌர்ணமி - மாகபௌர்ணமியன்றும், சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் பௌர்ணமி - வைசாகபௌர்ணமியன்றும் ஆகாமாவை புண்யகாலமாகும்.

இந்த நான்கு நாட்களிலும் சூர்ய உதயத்திற்கு முன்பு  எழுந்து  நமது இல்லத்திற்கு அருகே உள்ள நீர்நிலைகளில்   சென்று    முறைப்படி ஸ்நானம் செய்ய வேண்டும். பிறகு புண்யகால ஸ்நான பலத்திற்காக இயன்ற அளவு வைதீகர்களுக்கு முறையாக தானங்களைச்செய்யவேண்டும்.