Kanchi Sri Maha Periva: Soundarya Lahari - Part 10

Kanchi Sri Maha Periva: Soundarya Lahari - Part 10: (Continued...) (The Mahaswamigal continues to speak the words, as if, of the Goddess): Thus I am the One who gives this new Bhakti ...

Kanchi Sri Maha Periva: Soundarya Lahari - Part 9

Kanchi Sri Maha Periva: Soundarya Lahari - Part 9: (Continued...) What a pleasure to witness this dualistic play of the non-dualistic One ! What a multiplicity of beauty, panoramic va...

Kanchi Sri Maha Periva: Soundarya Lahari - Part 8

Kanchi Sri Maha Periva: Soundarya Lahari - Part 8: (Continued...) You jIvas have only little fragments of that Power. So if you cannot eradicate the world, the mind and the MAyA that I...

Kanchi Sri Maha Periva: Soundarya Lahari - Part 7

Kanchi Sri Maha Periva: Soundarya Lahari - Part 7: (Continued...) To such a weiling seeker She replies: Why do you worry and weep like this? You are worrying that you cannot discard ...

Kanchi Sri Maha Periva: Soundarya Lahari - Part 6

Kanchi Sri Maha Periva: Soundarya Lahari - Part 6: (Continued...) Either She might totally eradicate your mind and give you the peaceful state of ‘I am shiva’ (shivoham) or She might t...

Kanchi Sri Maha Periva: Soundarya Lahari - Part 5

Kanchi Sri Maha Periva: Soundarya Lahari - Part 5: (Continued...) It is wrong to think that the goal of Bhakti lies in the dualistic attitude of being separate from God. It is by thi...

Kanchi Sri Maha Periva: Soundarya Lahari - Part 4

Kanchi Sri Maha Periva: Soundarya Lahari - Part 4: (Continued...) It is that Power which is known in advaita scriptures as saguNa-brahman or Ishvara. In the scriptures devoted to Sha...

Kanchi Sri Maha Periva: Soundarya Lahari - Part 3

Kanchi Sri Maha Periva: Soundarya Lahari - Part 3: (Continued...) On the other hand what do we observe in our experience? Whether it is the teaching about jnAna in the Gita, or the...

Kanchi Sri Maha Periva: Soundarya Lahari - Part 2

Kanchi Sri Maha Periva: Soundarya Lahari - Part 2: (Continued...) Again, on the other side, great devotees like Manikka-vasagar, Nammazhvar, Arunagiri-nathar, Tayumanavar, etc. have t...

Kanchi Sri Maha Periva: Soundarya Lahari - Part 1

Kanchi Sri Maha Periva: Soundarya Lahari - Part 1: Today, we are commencing the translation of Periva's discourses on Soundarya Lahari, which has been very aptly translated in to English...

Thevara Shivasthalam !! Thiruverumpur Sri Erumbeeswarar/ Madhuvaneswarar Temple !!

Courtesy:Sri.Viswanathan Uma
Thevara Shivasthalam !! Thiruverumpur Sri Erumbeeswarar/ Madhuvaneswarar Temple !!

Jai Sriman Narayana !!

Jaya Jaya Sankara Hara Hara Sankara !!





Thiruverumpur/Malaikkovil is one of the 275 Thevara Shivasthalam of Lord Shiva located in Thiruchirapalli, Tamil Nadu.  This temple situated at the top of a  hill with the height of 60ft and it has 125 flights of steps to reach atop the hill.  This is one of the oldest temples built during 7th century by the Kings of Chola Dynasty.  The temple inscriptions reveal the contributions made by the Kings of Chola and Pandya.   In this temple Lord Shiva worshipped in the form of a self-manifested Linga.

Presiding deity – Erumbeeswarar/Madhuvaneswarar/Pippilikeswarar with his consort Goddess Sri Madhuvaneswari/Soundara Nayaki/Narumkuzhal Nayaki

Mangalasasanam – Thirunavukkarasar

Sthalavruksham – Vilvam

Theertham – Brahma Theertham

Worshipped by – Lord Brahma, Lord Indra, Lord Agni, Lord Subramanya, Sage Agastya, Sage Naimisha,

Sannidhis – Lord Ganesha, Lord Nandikeshwarar, Lord Subramanya with his consorts Goddesses Sri Valli & Deivayanai, Chandeswarar, Navagraha, Lord Surya with his consorts Goddeses Sri Usha & Pratyusha, Lord Bhairava, Nalvar, Goshtamurtham – Dakshinamurthy, Lord Ganesha, Sankara Narayana, Vishnu Durga, There are idols of Goddess Sri Gajalakshmi, Somaskandhar, Lord Subramanyar, Kasi Vishwanathar, Goddess Sri Mahalakshmi,

Festivals – Brahmostavam, Girivalam, Maha Shivaratri, Arudra Darisanam,

 


The legend has that the demon Tharakasura harassed the life of deities and Sages.  All the deities assembled and appealed to Maharishi Narada to advise the best possible ways to get rid of the demon. All the deities and Sages arrived on this sacred and worshipped Lord Shiva as per the instructions of Maharishi Narada.  In order to save themselves from the sight of the demon, they transformed into ants and started to worship Lord Shiva on this sacred land.  But, deities found it difficult to worship the fair sized smooth surface of the Linga with their teeny tiny form.    The Linga malformed into a mound after experiencing their difficulties and resided as ant-hill on this sacred place.   Hence the presiding deity has got his name ‘Erumbeeswarar’ and this place came to known as ‘Erumbiyur’.

This temple remains open from 6.00 AM to 12.00PM in the morning and 4.00 PM to 7.30PM in the evenings.

Jaya Jaya Sankara Hara Hara Sankara !!

HUM RI LIFE RE - Celebrating Young India

சோகத்தின் ஒரு ரேகையாவது தெரிகிறதா?


“சோகத்தின் ஒரு ரேகையாவது தெரிகிறதா? “இதுதான் equipoise!…”
பெரியவா எந்த யூனிவர்ஸிடியில் எம்.ஏ.ஆங்கிலம் பயின்றார்கள்?”
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா - தட்டச்சு;வரகூரான் நாராயணன்
ஸ்ரீமடம், இளையாத்தங்குடியில் முகாம்.
அரசு அதிகாரி, நாலைந்து நண்பர்களுடன், காரில் புறப்பட்டு இளையாத்தங்குடி நோக்கிப் போய்க்
கொண்டிருந்தார்கள்.பேசாமலே எப்படிப் பயணம் செய்வது? பல பேச்சுக்களிடையில், அவர்கள் தரிசனம் செய்யப்போகும் மகாஸ்வாமிகளைப் பற்றிய பேச்சும் வந்தது.
“பெரியவாளுக்கு சம்ஸ்க்ருதம் நன்றாகத் தெரியும்…”
“தமிழ், தெலுங்கு, கன்னடமும் தெரியும்…”
“இங்கிலீஷில் சில வார்த்தைகள்தான் தெரிந்திருக்கும். Working Knowledgeதான் இருக்கும்….”
“நாம் பேசும்போது, இடையிடையே இங்கிலீஷ் வார்த்தை வந்துவிட்டால், புரிந்துகொள்வார்கள்….”
இளையாத்தங்குடி சென்று, பெரியவாள் அறைக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள். பத்து
நிமிஷத்துக்குப் பின், பெரியவா வெளியே வந்தார்கள். சுற்றிலும் ஆங்கிலம் நன்றாகப் படித்துத் தேர்ந்த அடியார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டே வந்தார்கள் பெரியவா.
பெரியவா: ” ஒவ்வொரு language-லும் சில peculiar வார்த்தைகள்இருக்கும். அந்த வார்த்தைகளை இன்னொரு பாஷையில் சுலபமாக மொழிபெயர்க்க முடியாது. இங்கிலீஷில் equipoise என்று ஒரு word.அதற்கு என்ன அர்த்தம்னு சொல்லுங்கோ….”
ஒவ்வொருவரும், பல மாதிரியாக விளக்கம் கொடுத்தார்கள். ஆனால், எந்த ஒரு சொல்லும் அந்த ஆங்கிலப் பதத்தின் முழுத்தன்மையை வெளிப்படுத்துவதாக இல்லை.
தரிசனத்துக்காக வந்திருந்த அரசு அதிகாரியையும் அவர் 
நண்பர்களையும் பார்த்து, “உங்களுக்குத் தெரியுமோ?” 
என்று பெரியவா கேட்டார்கள். 
அதிகாரிக்குக் குப்பென்று வியர்த்தது. தட்டுத் தடுமாறி 
ஏதோ விளக்கம் சொல்ல முயன்றார்; தோற்றுப் போனார்.
“Equipoise என்றால் mental equanimity என்று அர்த்தம்” என்று சொல்லிவிட்டு, (எல்லோரையும் அசரவைத்துவிட்டு!) வேறு பேச்சுக்குப் போய் விட்டார்கள் பெரியவாள்.(அதாவது
ஆங்கிலப் புலமை பெற்றவர்கள் மனம் குமைந்து வருந்துவதற்கு அவகாசம் கொடுக்கவில்லை.)
சிறிதுதூரம் நடந்து சென்றபின், ஹால் நடுவில் நின்றார்கள். 
தூரத்தில், சுவரோரமாக, ஒரு முதிய அம்மையார் 
உட்கார்ந்திருந்தார். கண்களை  
மூ
டிக்கொண்டிருந்தார். 
ஜபம் செய்து கொண்டிருந்தாற் போலிருந்தது.

“அந்த அம்மா எப்படி இருக்கா?”
“ரொம்ப சாந்தமா, அமைதியாக உள்ளுக்குள்ளே 
சஞ்சலமில்லாமே…..”
“அவர் யார் தெரியுமோ?”
யாரும் பதில் சொல்லவில்லை.
“கே.எஸ்.வெங்கடரமணின்னு பெரிய எழுத்தாளர். நிறைய புஸ்தகம் எழுதியிருக்கார்.
Kandan, the patriot; Murugan, the tiller எல்லாம் பிரஸித்தம்.(நானும் படிச்சிருக்கேன்!) இந்த நாவல்களில் rural-setting ரொம்ப நேச்சுரலா இருக்கும்.(அந்த அம்மாள் கே.எஸ்.வி-யின் மனைவி)
“பால் பிரண்டன் என்ற பிரெஞ்சு தத்துவஞானியை திருவண்ணாமலைக்கு அழைத்துக்கொண்டு போனார். என்னிடமும் அழைத்துக்கொண்டு வந்தார். பால்பிரண்டனுக்கு நம்ம தத்துவங்களில் ரொம்பப் பிடிப்பு.
“இந்த தம்பதிக்கு, ஒரே பிள்ளை. கே.எஸ்.வி.யும் போயிட்டார். பிள்ளை, சர்க்கார் விருந்தாளி! புரிகிறதா? பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கான்!
“சொந்த-பந்தம், சொத்து-சுதந்திரம் எதுவும் கிடையாது. 
மலை மலையாய் சோகம்…! அந்த அம்மாள் முகத்தில் 
சோகத்தின் ஒரு ரேகையாவது தெரிகிறதா?
“இதுதான் equipoise!…”
பெரியவா எந்த யூனிவர்ஸிடியில் எம்.ஏ.ஆங்கிலம் பயின்றார்கள்?
நாவில் நிற்பது வாக் தேவதை;இல்லை, talk தேவதை!

பயிற்சி தேவை

தாத்தாவும்   பேரனும். 

''தாத்தா  இன்னிக்கி உங்க  கிட்ட சில  விஷயம்   கேக்கப்  போறேன்.''

சரிடா  கோபு   கேளு.

என்  புத்தகத்தில்  ஐம்புலன்களை அடக்க வேண்டும்  என்று  படித்தேன்  புரியவில்லை.   அது பற்றி சொல்லுங்க.

நமது  மனம்   போன  போக்கெல்லாம் போக வேண்டாம்   என்று  படித்திருக்கிறாயே  அது   தான். மனம்  தான்  முதலில் கட்டுபாட்டுக்குள்  வரவேண்டும். மற்றதெல்லாம் -கண்,  மூக்கு, வாய்,  செவி, நாக்கு   எல்லாமே  வழிக்கு தானே   வந்துவிடும்.
அதுக்கு  உனக்கு   ஒரு கதையா சொல்லட்டுமா.  புரியும்.  

ராமர்  காட்டில்  இருக்கும்போது  ஒரு  ஆற்றங்கரையில் அதுவரை பார்த்திராத துறவி ஒருவரைப் பார்த்தார். ஆச்சார சீலராகக் காட்சி தந்தார் அவர்.

ஆற்றில் மூழ்கி தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பிறகு ஜபம் செய்யத் தொடங்கினார் துறவி. சிறிது நேரத்தில், ஹோமம் செய்வதற்கான சமித்துகளை எடுத்துக் கொண்டு அமர்ந்தார். சரி இவர் வேள்விதான் செய்யப் போகிறார் என்று எண்ணி, ஓர் ஓரத்தில் அமர்ந்து அவர் செய்வதை கவனித்தார் ராமபிரான்.

துறவியோ, கையில் வைத்திருந்த துணி மூட்டையில் இருந்து,  கோதுமை  மாவு எடுத்து பாத்திரத்தில் இட்டுப் பிசைந்து, சமித்துகளில் தீ மூட்டி, ஆறு ரொட்டிகளைச் சுட்டார். இரண்டில் தேனும், இரண்டில் நெய்யும், மீதி இரண்டில் ஊறுகாயும் தடவி வைத்தார். பிறகு மீண்டும் ஜபம் செய்தார். சிறிது நேரம் சென்றது. கண்திறந்த துறவி, ரொட்டிகளை எடுத்து வைத்து, சாப்பிட அமர்ந்தார்.

அந்த நேரம், பசியால் வாடிய பெரியவர் ஒருவர் அவ்வழியே வந்தார். பார்க்க பரிதாபமாக இருக்கவே, துறவி அவரை அழைத்து, ஊறுகாய் தடவிய ரொட்டிகளைக் கொடுத்து உண்ணச் சொன்னார். மீண்டும் கண் மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.

திரும்பவும் கண்விழித்து எழுந்து, தேன் தடவிய இரண்டு ரொட்டிகளை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தார். அந்த நேரம் வாடிய நிலையில் ஒரு சிறுமி அவ்வழியே வந்தாள். அவளைப் பார்த்து இரக்கப்பட்ட துறவி, அந்த ரொட்டியை அவளுக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னார். பிறகு மீதி இருந்த நெய் தடவிய ரொட்டியை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றார். ரொட்டிகளை சிறிதுசிறிதாகப் பிய்த்து, மீன்களுக்குப் போட்டார். பிறகு திரும்பி வந்து, சமித்துகள் எரிந்த சாம்பலை எடுத்து பாத்திரத்தில் வைத்து, ஆற்று நீரை அதில் சேர்த்து, சாம்பலைக் கரைத்து குடித்துவிட்டு அமர்ந்தார்.

துறவியின் இந்த செய்கை, ராமபிரானுக்கு ஆச்சரியத்தை அளித்தது. நேரே துறவியிடம் சென்று அவர் செய்கைக்கான காரணத்தைக் கேட்டார்.

துறவி சொன்னார்: ”ஸ்நானம் செய்து முடித்து ஜபத்தில் அமர்ந்தேன். அப்போது, பையில் இருந்த மாவுதான் நினைவுக்கு வந்தது. அந்த மாவினை ரொட்டி சுட்டு, தேனும் நெய்யும் கலந்து சாப்பிட வேண்டும் என்று மனது ஆசைப்பட்டது. அந்த மனதை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக ரொட்டி சுட்டேன்…”

”ரொட்டி சுட்டீர்கள் சரி… ஆனால் நீங்கள் ஏன் அவற்றை உண்ணவில்லை ?” – கேட்டார் ராமபிரான்.

”துறவி என்பவன் புலன்களை அடக்க வேண்டும். எவ்வளவோ முயற்சி செய்து அடக்கினேன். ஆனால், மனது மட்டும் அவ்வப்போது அடம் பிடிக்கிறது. அதன் போக்கில் விட்டு, பிறகுதான் அதற்கு தண்டனை தரவேண்டும். சாம்பலாகப் போகும் இந்த உடலுக்குள் இருந்து கொண்டு, என்னமாய்ப் படுத்துகிறது இந்த மனது?! அதனால், இந்தச் சாம்பல்தான் இன்று ஆகாரம் என்று மனதுக்குக் கட்டளையிட்டு அதையே சாப்பிட்டேன். இதுதான் அடங்க மறுக்கும் மனத்துக்கு அடியேன் அளிக்கும் தண்டனை!” என்றார் மெதுவாக!

 நல்ல கதை  தாத்தா. மனத்தை  அடக்க   எப்படி  பயிற்சி செய்யவேண்டும்?

எண்ணங்களை சீர்  செய்துகொள்ளவேண்டும்.  மனதுக்கு   அலைபாயாத  பழக்கம்  தரவேண்டும்.  இதற்கு தான்  த்யானம், ஜபம்  பாராயணம்,  பஜனை,   சத்சங்கம் எல்லாம்  வைத்திருக்கிறார்கள்.   தனியாக இருக்கும்போது   எண்ணம்  எங்கெங்கோ ஓட்டும்.  நல்ல   விஷயங்களை மற்றவர்களோடு  பரிமாறிக்கொள்ளும்போது  அதற்கு வேறு  இடம்  தாவ சந்தர்ப்பம்  கிடைக்காது.  படிக்கும்போதும்  மனதை  அதில் செலுத்தி    படிக்கவேண்டும்,  நல்ல  விஷயங்களை  கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்

தாத்தா  இதற்கு  ஒரு  குருவின்  உதவி  அவசியமில்லையா?

கோபு ,  இதே கேள்வியை  ஒரு  பக்தர் ரமண  மகரிஷியிடம் கேட்டதற்கு  அவர்   சொன்ன பதில்: 

'' நீ  இப்போது  குருவிடமிருந்து தள்ளிப்போய்   எங்கோ   தூர  இருப்பதாக  எண்ணமா?'' என்றார் 

அதற்கு  அந்த பக்தர் '' சுவாமி  அந்த  குருவின் அருகில் இருப்பது  அவசியமில்லையா'' ?''

''நீ  என்ன  சொல்ல வருகிறாய்.  அந்த  குருவின்   உடலும் உன்  உடலும்  அருகில்  இருக்க வேண்டாமா  என்று .  அதால் என்ன  பிரயோஜனம்?  மனமல்லவோ  குருவின் மனதுடன்  சேர்ந்திருக்க வேண்டும் ''  என்றார்.  அப்படி  இறைவனின்  மேல்  மனதை நாட்டம் கொள்ள செய்வதற்கு   தான்  சத்சங்கம்,   பூஜை ,  பஜனை, பிரசங்கம்,  பாராயணம் என்று   எத்தனையோ வழிகள் உள்ளன.   அதில்  ஒன்று  மனதை அவன் பால்   செலுத்தி த்யானம் பண்ணுவது.   மௌனமாக உள்ளே  அவனைக்  காண்பது.

இதெல்லாம்  எல்லோராலும் முடியுமா தாத்தா?

எல்லோராலும்  எதெதுவோ  செய்ய முடிகிறபோது  இது மட்டும்  முடியாமலா  போகும். பயிற்சி  தேவை.   நீ எப்படி  இப்போது  9 வது  படிக்கிறாய்.  எட்டு  வருஷம் படித்தபிறகு தானே.  அது  போல் தான்.''

Thanks to Sivan Krishnan

வெறுங்கூடையுடன் அனுப்புவாயா!"

காஞ்சி மடத்தருகில், காமாட்சி என்று ஒரு பூக்காரி இருந்தாள்.அவள் பெரியவாளை "அப்பா" என்றுதான் அழைப்பாள். தினமும் ஒரு கூடை பூவினால் பெரியவாளை அர்ச்சிப்பாள்.பெரியவா "ஏன் இப்படி பூவை வீணாக்கறே? இதை வித்தா உனக்கு காசுகிடைக்குமே!" என்பார். "காசு பெரிசா சாமி! உன் தலையில் அர்ச்சித்தால் அதற்கு மேலேயே எல்லாம் கிடைக்கும்"என்பாள்.பூக்காரி. மடத்தில் ஒரு நியதி உண்டு. பெரியவா படுத்துக்கப் போய்விட்டால் யாரும் எழுப்பக் கூடாது.ஆனால், இந்தக் காமாட்சி மட்டும் விதிவிலக்கு. எத்தனை நேரமானாலும் வரலாம்.ஏனெனில், பெரியவாளே அவளிடம், " நீ உன் வியாபாரத்தை முடித்துக் கொண்ட பிறகுதான் என்னிடம் வரணும். பாதியில் விட்டு வரக் கூடாது!" என்று கட்டளை இட்டிருந்தார்.அவளது பிழைப்பை தனக்காக விடுவதற்கு அந்தக் கருணாமூர்த்தி சம்மதிப்பாரா?

ஒரு நாள் பெரியவா, நாகராஜன் என்பவரை 9 மணி நியூஸ் கேட்டுச் சொல்லச் சொல்லி, கேட்டுக்கொண்டிருந்தார். வேதாந்த தத்துவங்கள் ஒரு புறம் இருந்தாலும்,உலக நடப்பையும் தெரிந்து கொள்ளாமல் விடமாட்டார். அந்தச் செய்திகளை அலசி ஆராய்ந்த பிறகு படுக்கப் போக நாழி ஆகிவிடும் .அன்று, புதுக்கோட்டையிலிருந்து "ஜானா" என்ற ஒரு பெண் பெரியவாளுக்கு வெல்வெட்டில் பாதுகை செய்து கொண்டு வந்திருந்தாள்.. அதைக் காலை முதல் பெரியவா கழற்றவேயில்லை. படுக்கைக்குப் போகு முன் கொட்டகை சென்று, தேகசுத்தி பண்ணிக் கொண்டு வரச் சென்றார்.அப்போது நியூஸ் படிக்கும் நாகராஜன்,"இன்று பெரியவா பாதுகையைக் கழட்டினதும் நான்தான் எடுத்துக்கொள்வேன், என்னிடம் பெரியவர் பாதுகையே இல்லை!" என்று கழட்டுவதற்குக் காத்திருந்தார். பெரியவா பாதுகையைக் கழட்டாமலேயே உட்கார்ந்திருந்தார். பூக்காரியும் நானும் அங்கு போய் நமஸ்காரம் பண்ணினோம். பாதுகையைக்கழற்றி பூக்காரியிடம்,

"இது உனக்குத்தான், எடுத்துக்கோ!" என்றார்.

"நாமொன்று நினைத்தால் தெய்வமொன்று நினைக்கிறது!" என்று நாகராஜன் குறையோடு திரும்பினார். அப்படிப்பட்ட அன்புக்கு அந்த ஏழைப்பூக்காரி பாத்திரமாயிருந்தாள். எத்தனையோ பேர் அவளிடம் லட்ச ரூபாய் தரோம்,இந்தப் பாதுகையைக் கொடு என்றனர்.அவள் அசையவேயில்லை. பெரியவா அவளுக்கு இந்த உலக வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கச் செய்தார்.அவள் வீட்டுத் திருமணங்களுக்கு வண்டி,வண்டியாக கல்யாண சாமான்கள் அனுப்பினார்.

பெரியவா ஸித்தியான பிறகும், சமாதிக்கு இரவில் பூக்களால் அர்ச்சிப்பதை காமாட்சி விடவில்லை. ஆனால், பெரியவா இருக்கும்போது பூக்கூடையை வெறுமனே திருப்பாமல் ஏதாவது பழம் முதலியன போட்டுத்தான் அனுப்புவார்.அவர் மறைவுக்குப் பின் வெறுங்கூடையைப் பார்க்கவே வருத்தமாக இருந்தது. "அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங்கூடையுடன் அனுப்புவாயா!" என்று புலம்பினாள்.கூடையை வைத்துக்கொண்டுஉட்கார்ந்திவளுக்கு, தூக்கிவாரிப்போடும்படி அதிஷ்டானத்திலிருந்து ஒரு சம்பரத்தைப் பூ யாரோ வீசி எறிந்தது போல் வந்து அவள் கூடையில் விழுந்தது.சமாதிக்கு நேரே முறையிட்டால்கூட பதில் சொல்லக்கூடிய சாமியை, "போயிடுத்து,போயிடுத்து"னு யாரும் சொல்லக்கூடாது என்று அவள் எல்லோரிடமும் சொல்லுவாள்.

இது போல் பல நிகழ்ச்சிகள் இன்னமும் நடந்து கொண்டுதான்இருக்கின்றன.பிரத்தியட்சமாக
 அவர் அருளைத் தந்து கொண்டுதான் வருகிறார்.

நம்பினோர் கெடுவதில்லை.....இது நான்கு மறை தீர்ப்பு.
WITH PRANAMS To  N.Ramesh Natarajan/S.Ramanathan/WB Kannan (SRI KARYAM)